முகலாயர்கள் இந்தியர்களல்லர்.

This entry is part 3 of 9 in the series 2 டிசம்பர் 2018

பி எஸ் நரேந்திரன்

“முகலாயர்கள் இந்தியர்களே” என்கிற பொய்யைத் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். முகலாயர்களே தங்களை இந்தியர்கள் என்று ஒருபோதும் சொல்லிக் கொண்டதில்லை. முகலாயர்கள் உஸ்பெஸ்க்கிஸ்தானிலிருந்து வந்த சப்பை மூக்குடைய, மஞ்சள் நிற மங்கோலியர்கள். பாபரிலிருந்து பகதூர்ஷா வரைக்கும் தாங்கள் சக்டாய் பரம்பரையினர் (Chagtai family) எனச் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டவர்கள்.
‘முகலாயர்’ என்கிற பெயரே ‘மங்கோலியர்’ என்கிற பெயரின் திரிபு. பாபர், தாய் வழியில் செங்கிஸ்கானின் பரம்பரையிலும், தந்தை வழியில் தைமூரின் பரம்பரையிலும் வந்தவர். செங்கிஸ்கான் இந்தியரா என்ன? தைமூரும் இந்தியரில்லை. இருவருமே மங்கோலியர்கள்.
முகலாய அரசர்களின் நிறவெறி மிகப் பிரசித்தமானது. சொந்தக் குடும்பத்திலேயே வெள்ளை நிறமற்றவனை ஒதுக்கித் தள்ளியவர்கள் அவர்கள்.
எனவே, முகலாயர்கள் ஆட்சிக் காலத்தில் இந்திய முஸ்லிம்கள் ‘எவருமே’ உயர்பதவிகள் வகித்ததில்லை. தங்களால் மதமாற்றம் செய்யப்பட்ட கறுப்பு நிற இந்திய முஸ்லிம்கள் திறமையற்றவர்கள், தகுதியற்றவர்கள் என்று ஒதுக்கித் தள்ளி அவர்களை அவமானப்படுத்தியவர்கள் முகலாயர்கள். அதிகம் போனால் மான்சப்தாராக அல்லது 5000 பேர்கள் கொண்ட படைக்குத் தலைமை தாங்குபவர்களாக மட்டுமே இந்திய முஸ்லிம்கள் இருந்திருக்கிறார்கள். வரலாற்று உண்மை இது.
தங்களது நாடானா உஸ்பெக்கிஸ்தானிலிருந்து வந்தவர்கள், பாரசீகத்திலிருந்து வந்தவர்கள், ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வந்தவர்களுக்கு மட்டுமே முகலாய அரசின் உயர்பதவிகள் வழங்கப்பட்டன. ராஜா தோடர்மல், ஜெய்சிங், ஜஸ்வந்த் சிங் போன்ற ஹிந்து துரோகிகள் தங்களின் நாடுகளை ஆளும் உரிமை விட்டுக் கொடுக்கப்பட்டது. அதுவும் பெரும் கப்பம் கட்டியபிறகே அது அனுமதிக்கப்பட்டது என்பதினைக் காணவேண்டும். வருடா வருடம் ஹிந்துப் பெண்களையும், யானை, ஒட்ட்கங்கள், படைகள், நகைகள் என முகலாய பாதுஷாக்களுக்குக் கொடுத்து தங்கள் அரசினைக் காத்துக் கொண்ட அடிமைகள் அவர்கள்.
முகலயார்கள் காலத்தில் தென்னிந்தியாவில் ஆட்சி செய்த பாமினி சுல்தான்களில் ஒரே ஒருவரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் பாரசீகத்திலிருந்தும், எத்தியோப்பியாவிலிருந்து வந்து ஆண்டவர்கள். இந்தியனான அந்த ஒருவனும் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட விஜயநகரத்து பிராமணன். மற்ற நான்கு சுல்தான்களைவிடவும் ஹிந்துக்கள் மீது கொடூரமான அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டவன். ஹைதராபாத் நிஜாமும் பாரசீகத்திலிருந்து வந்தவர்தான். ஹைதர் அலியும் அவரது மகனான திப்பு சுல்தானும் பாரசீகப் பின்னனி கொண்டவர்களே.
முகலாயர் காலத்து ஆட்சி மொழி பாரசீகம். எல்லோரும் நினைப்பது போல உருது அல்ல. பாரசீகத்திலிருந்து வருகிற வெள்ளை நிறம் கொண்ட எவனையும் முகலாயர்கள் அரவணைத்துக் கொண்டார்கள். அவனுக்கு வேண்டியதை அள்ளிக் கொடுத்தார்கள்.
அதற்குச் சிறந்த உதாரணம் மிர் ஜும்லா. இந்த மிர் ஜும்லா பாரசீகத்திலிருந்து தோல் காலணிகளை விற்பதற்காக கோல்கொண்டாவிற்கு வந்தவன். பின்னர் வைர வியாபாரம் தொடங்கிப் பெரும் பணக்காரனாவன். தனது திறமையினால் மெல்ல, மெல்ல முன்னேறி கோல்கொண்டா சுல்தானின் மனதில் இடம்பிடித்துப் பின்னர் அவரால் ஒரு படையணிக்குத் தலைவனாக்கப்பட்டவன்.
கோல்கொண்டாவில் கிடைக்கும் வைரங்களை விடவும் (கோதாவரிப்படுகை) இந்தியக் கோவில்களில் அதிக வைரம் இருப்பதனை அறிந்து கொண்ட மிர் ஜும்லா ஆந்திர, கர்னாடகக் கோவில்களைக் கொள்ளையடித்தான். மிர் ஜும்லா கொள்ளையடிக்காத ஆந்திர, கர்நாடகக் கோவில்கள் எதுவுமேயில்லை. அதன் காரணமாக இந்தியாவின் மிகப் பெரும் பணக்காரர்களில் ஒருவராக மாறினான் மிர் ஜும்லா. துரதிருஷ்டவசமாக இந்த வரலாறுகள் நமது கண்ணிலிருந்து மறைக்கப்ப்ட்டுவிட்டன.
தென்னிந்திய சுல்தான்களை அடக்குவதற்காக தக்காணத்தில் வந்து தங்கியிருந்த அவ்ரங்சீப்புடன் பெரும் நெருக்கம் கொண்டிருந்த மிர் ஜும்லாவின் பணம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் அவ்ரங்சீப்பினால் பாதுஷாவாக ஆகியிருக்கவே முடியாது. தனது படைகளுக்கு இரண்டு வருடங்களுக்கும் மேலாக சம்பள பாக்கி வைத்திருந்த நேரத்தில் ஆக்ராவில் அவரது தகப்பனாரான ஷாஜஹான் நோய்வாய்ப்பட்டதாகவும், அதனை உபயோகப்படுத்தி அவரது அண்ணனான தாராஷிகோ பாதுஷாவாகவும் முடிசூட்டிக் கொண்டதாகவும் கேள்விப்பட்டுத் திகைத்து நின்ற அவ்ரங்சீப்பிற்கு மிர் ஜும்லா பணம் கொடுத்து உதவியதாலேயே அவரால் பாதுஷாவாக முடிந்தது. அதற்குப் பதிலாக ஜும்லா சம்பாதித்தது இன்னும் ஏராளம்.
இந்தியாவிலிருக்கும் 90 சதவீத முஸ்லிம்கள் வாள் முனையில் மதம் மாற்றப்பட்டவர்களே. இதனை யார் வேண்டுமானுலும் மறுத்துக் கொள்ளட்டும். ஆனால் அதுவே உண்மை. உண்மை என்றும் அழிவதில்லை. ஷாஜஹானின் காலத்தில் கூட இந்திய முஸ்லிம்களின் எண்ணிக்கை 5 சதவீதத்தைத் தாண்டவில்லை. ஆனால் இந்தியாவை ஒரு இஸ்லாமிய நாடாக ஆக்கியே தீருவேன் எனக் கங்கணம் கட்டிக் கொண்ட அவ்ரங்சீப்பினால் திணிக்கப்பட்ட ஜிஸியாவும், கட்டவிழ்த்துவிட்ட வன்முறையின் காரணமாகவும் மதம்மாறிய ஹிந்துக்களே இன்றைய இந்திய முஸ்லிம்கள். இது வரலாறு. மொகலாயர்களே எழுதி வைத்த வரலாறு. நான் எழுதிய வரலாறல்ல.
பெரும்பாலான வட இந்திய நவாப்களும், ஜமீன்தார்களும் அவ்ரங்சிப்பின் மிரட்டலால் இஸ்லாமியர்களாக மதம் மாறிய ஹிந்துக்கள்தான். அந்த வரலாறும் துல்லியமாக முகலாயரகளால் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. அதே மதம்மாறி நவாப்களே பின்னாளில் பாகிஸ்தான் உருவாகக் காரணமானவர்கள். முகமதலி ஜின்னாவின் பின்னனியிலிருந்து இயக்கியவர்கள். பாகிஸ்தானில் தங்களுக்குப் பெரும் மரியாதை இருக்கும் என்று நம்பிக் கொண்டு போன அவரகள் இன்றைக்கு முஹாஜிர்களாகக் கேவலப்பட்டு நிற்கிறார்கள் என்பதுவும் இந்திய முஸ்லிம்கள் அறியாத ஒன்றல்ல.
எனவே, முகலாயர்களுக்கு முட்டுக் கொடுப்பதனை தயவு செய்து நிறுத்துங்கள். உங்கள் தாய்நாட்டின் மீது படையெடுத்து உங்களின் சகோதரிகளைக் கற்பழித்தவர்களையும், குழந்தைகளையும், உங்களின் சகோதரர்களையும் அடிமைகளாகப் பிடித்துச் சென்று வெளிநாட்டில் விற்றவர்களையும், சொத்துக்களைக் கொள்ளையடித்து உங்கள் தேசத்தைச் சுரண்டியவர்களையும் பெருமைப்படுத்தாதீர்கள். அதனைவிடக் கேவலம் வேறொன்றுமில்லை.
உங்கள் மார்க்கம் உயர்ந்ததென்று சொல்லிக் கொள்ளுங்கள். அதில் எனக்கொன்றும் பிரச்சினையில்லை. ஆனால் இது உங்களின் தாய்நாடு. ஊனும், உணவும், இருப்பிடமும், கல்வியும் கொடுத்த, கொடுத்துக் கொண்டிருக்கிற உங்களின் தேசம் இது. ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவன், சீக்கியன் என அனைவருக்கும் பொதுவான தேசம் இது. தன் தாய்நாட்டை நேசிக்காதவன் இருந்தும், இறந்தவன். இனிமேலும் கொள்ளையடிக்க வந்தவனை வாழ்த்துவதை நிறுத்துங்கள் என வேண்டுகிறேன்.
படத்தில், பாபரும் தைமூரும். இந்தியர்களைப் போலவா இருக்கிறார்கள் இருவருவரும்?

Series Navigationசெவ்வாயை மனிதர் வாழ தகுந்த இடமாக்குவதற்கு நுண்ணுயிரிகள் துணை புரியும்சிதைக்கப்பட்ட இந்திய வரலாறு
narendran

பி எஸ் நரேந்திரன்

Similar Posts

9 Comments

 1. Avatar
  Suvanappiriyan says:

  //தன் தாய்நாட்டை நேசிக்காதவன் இருந்தும், இறந்தவன். இனிமேலும் கொள்ளையடிக்க வந்தவனை வாழ்த்துவதை நிறுத்துங்கள் என வேண்டுகிறேன்.//

  ஒரு பேச்சுக்கு மொகலாயர்கள் அந்நியர்கள் என்றால் நம் நாட்டு பிராமணர்கள் யார்? வெள்ளைத் தோலுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? சமஸ்கிரதத்துக்கும் நம் நாட்டு தமிழ் மொழிக்கும் என்ன சம்பந்தம்? அனல் வாது புனல் வாது செய்து சமணர்களை கழுவிலேற்றிய கொடூரத்தை செய்தது யார்? இயற்கை வழி முறைகளில் வாழ்ந்த தமிழர்களை மாட்டையும், பன்றியையும், நாயையும், பருந்தையும் கடவுளாக்கி அவனை சூத்திரனாக்கியது யார்? இன்று வரை மண்ணின் மைந்தனை கருவறைக்குள் நுழைய விடாமல் தடுப்பது யார்?

 2. Avatar
  Suvanappiriyan says:

  //அவ்ரங்சீப்பினால் திணிக்கப்பட்ட ஜிஸியாவும், கட்டவிழ்த்துவிட்ட வன்முறையின் காரணமாகவும் மதம்மாறிய ஹிந்துக்களே இன்றைய இந்திய முஸ்லிம்கள். இது வரலாறு. மொகலாயர்களே எழுதி வைத்த வரலாறு. நான் எழுதிய வரலாறல்ல.//

  உங்கள் வாதப்படி வாள் முனையினால் மாற்றப்பட்டார்கள் என்றே வைத்துக் கொள்வோம். ஆனால் இன்று நடப்பதோ மோடி, ஆதித்யநாத் போன்றோரின் பாசிச ஆட்சி. இப்போது இந்துவாக மாறினால் பல சலுகைகளை பெறலாம். ஆனால் ஒரு முஸ்லிமும் இந்துவாக மாறவில்லையே ஏன்? ஏனென்றால் இந்து மதம் என்பது பார்பனிய மதம். பார்பனர்களின் வசதிக்காக உருவாக்கப்பட்ட மதம். இதனாலேயே மக்கள் இந்த காலத்திலும் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை நோக்கி அவர்களாகவே வருகின்றனர். இதுதான் உண்மை.

 3. Avatar
  Dr Rama Krishnan says:

  Good article.The Muslims of India or at least over 99% them have the DNA of their Hindu brothers. And almost all of them got converted at the point of sword, barbaric butchery of men and destruction of their places of worship and enslavement and raping of their women in their millions. Islamic history of India was barbaric and it was genocidal.

  1. Avatar
   BSV says:

   No, it’s a big fat lie to say that the forefathers of Muslims of India were converted by the methods you say. It might have happened at certain pockets in the northern States like UP. But not all over India. If you are correct, then, how comes even during the Mughal period, the majority population were Hindus ? How ? The Mughals could have easily converted each and every citizen and why didn’t they do it? In TN, who converted the forefathers of the Tamil Muslims? Can you mention the name of the King or Kings who did it? Only one Delhi Sultan Khilji sent his Army General to southern India, not to convert, but to loot. He looted and went back victoriously because no southern King could defeat him and it is a shameful history of TN that the Pandian fled to forest and hid there, till the General returned. If Malik Kafur were interested in demolishing all temples – at least the great temples he looted – Srirangam, Chidambaram and Madurai – and converting the citizens. today, the 3 wouldn’t be there and all of us would have been Muslims only. It is your good luck that his interest was only in gold jewelry. As regards looting, it was not only, but every southern King. It was out of the looted wealth – in his Chera nadu victory – that Chozhan built the big temple at Tanjore. Please go and read the inscriptions that welcome you when you enter the temple. Pallavan destroyed and looted Maharastra; Chozha destroyed and looted Chera Nadu and Kalingam (Odisa); Pandian destoryed Jain and Buddhist places.
   Thirumangai alwar looted a big golden Buddha statue from Nagapattinam Vihara and using the money therefore, built the wallls of Srirgangam. Every King is a dacoit: you destroyed Buddha viharas and Jain temples and they destroyed yours. Thanakkinnaa thaanee varum :-)

 4. Avatar
  ஷாலி says:

  முகலாயர்கள் இந்தியர் இல்லையாம்…கண்டுபிடித்த கட்டுரையாளர் நரேந்திரன் அவர்கள் இந்தியராக இருக்கிறாராம்.பாவம் நரேந்திரன்!.கைப்பிள்ளை கட்டுரையாளராக இருக்கிறார். இங்கு யாருமே ஒரிஜினல் கிடையாது.எல்லோருமே வந்தேறிகள்தான்.என்ன..வந்த காலம் கொஞ்சம் முன் பின் இருக்கும் அவ்வளவுதான்.இன்றைய நவீன மரபணு ஆய்வு முடிவுகள்…நாம் வந்த பாதையை வெளிச்சமிட்டு காட்டிவிட்டன.

  இன்று தங்களை தேசத் தியாகிகளாக காட்டிக்கொள்ளும் கூட்டமும் கி.மு.2000 – 1500 க்கு இடையில் வந்த வந்தேறிகளே! இந்திய ஆண்களின் உடலில் R 1-a குழுவைச் சேர்ந்த மரபணுக்கள் பரவலாக காணப்படுகிறது.இந்தோ-ஐரோப்பிய மொழி பேசுபவர்கள்,மத்திய ஆசியாவிலிருந்து இந்தியாவுக்குள் (Bronze age ) குடியேறியதற்கான வலுவான சான்றாக மரபியல் ஆய்வு உள்ளதாக.பேரா.ரிச்சர்ட் அவர்கள் கூறுகிறார்கள்.

  இந்தியாவில் நான்கு வகை குடியேற்றங்கள் நடந்துள்ளன.

  1. 55,000 – 65,000 ஆண்டுகளுக்கு முன்பு, ஆப்பிரிக்காவிலிருந்து வந்த ஆதி முதல் குடியேற்றம்.
  2. கி.மு.10,000 ஆண்டுக்குப் பிறகு மேற்கு ஆசியாவிலிருந்து வந்த விவசாயக் குடியேற்றம்.சிந்துவெளி நாகரீக மக்கள்.
  3. கி.மு 2000 -15000 ஆண்டுக்குப் பிறகு, சமஸ்கிருதம் என்ற மொழியுடனும்,அதை ஒட்டிய நம்பிக்கைகள் மற்றும் கலாச்சாரத்துடனும் வந்து…சமூக அமைப்பின் அடிப்படையை மாற்றிய ஆரியர் குடியேற்றம்.
  4. பிற்காலத்தில் வியாபாரத்திற்காகவோ,அல்லது நாடு பிடிக்கும் ஆசையின் காரணமாகவோ, இங்கு வந்து, தங்கிய முகலாயர்கள் மங்கோல்கள்,பாராசியர்கள்,அரபுகள்,வெள்ளையர்,போர்த்துக்கீசியர்கள்.

  இது தான் இந்தியாவிற்குள் வந்து குடியேறிய மக்கள் வந்த வரலாறு. இவர்கள் வரும்போது இந்தியா என்ற ஒரு நாடே இல்லை.அறுபத்து நான்கு தேசங்களாக அரசர்களால் ஆளப்பட்டதே இந்திய துணைக் கண்டம். அனைவரையும் ஒன்றாக்கி ஒரே இந்திய தேசமாக்கியவர்கள்..வெள்ளைக்கார கிழக்கிந்திய கம்பெனிக்காரர்களே!

  இந்தியாவில் இருப்பவர்கள் அனைவரும் வந்தேறிகளே என்றானபின்பு…… இதில் நரேந்திரன்கள் பெருமைப்பட என்ன இருக்கிறது? உண்மையில் பூர்வீக இந்தியர்கள் ..ஆதி குடிகள் என்று பெருமைப்பட, அந்தமான் தீவுகளில் உள்ள ஓங்கோல்,ஜாரவாஸ்,சென்றினால் ஆதிவாசிகளுக்கு மட்டுமே அந்த உரிமை உள்ளது.இங்குள்ள நரேந்திரன்களும் நாமும் இனக்கலப்பு நடத்திய வந்தேறிகளே!

  1. Avatar
   BSV says:

   //ஆதி குடிகள் என்று பெருமைப்பட, அந்தமான் தீவுகளில் உள்ள ஓங்கோல்,ஜாரவாஸ்,சென்றினால் ஆதிவாசிகளுக்கு மட்டுமே அந்த உரிமை உள்ளது.//

   தப்பு…தப்பு. இவர்க‌ளும் வந்தேறிகளே. போனமாதம் சென்டலீசுகளால் கொல்லப்பட்ட அமெரிக்கரைப்பற்றி பல கட்டுரைகள் வந்த போது, இவர்கள் பற்றி வந்தது: ஆஃப்ரிக்காவிலிருந்து வந்த பழங்குடியினரில் ஒருபிரிவு அந்தமான் தீவுகளில் குடியேறி, இன்னொரு பிரிவு ஆஸ்திரேலியாவில் குடியேறி இன்றும் வாழ்கிறது. அவர்கள் பெயர் அபார்ஜினல்ஸ். (தமிழில் பழங்குடியினர்தான்) ஆக, அந்தமானாகட்டும் ஆஸ்திரேலியாவாகட்டும். வாழும் பழங்குடியினர் ஒரிஜனல் இடம் ஆஃபிரிக்காவே. முகலாயர்களைப் பொறுத்தவரை, முதலில் வந்த மன்னர்கள் மட்டுமே வந்தேறிகள். பின்னர் அவர்கள் இந்தியப்பெண்களையே இராணிகளாக்கிக்கொண்டார்கள். துருக்கியிலிருந்து பெண்ணெடுத்தவர்கள் ஹைதராப் நிஜாம்கள் மட்டும்தான். எனவே முகலாயர்கள் வந்தேறிகள் என்பது உண்மைக்குப் புறம்பானது.

   1. Avatar
    ஷாலி says:

    BSV அவர்கள் சொல்வது உண்மையே! ஆதி மனிதன் பிறந்தது ஆப்பிரிக்கா கண்டமே! அங்கிருந்தே மனித இனம் பல்கிப் பெருகியது.அப்படி பல்கி பெருகும் போது, இந்தியாவில் ஆதிவாசி,பழங்குடி,திராவிடர்,ஆரியர்,முகலாயர்,ஆங்கிலேயர்,போர்த்துகீசியன்,டச்சுக்காரன் அனைத்து ஒன்றோடு ஒன்று உறவாடி இனக் கலப்பு சமுதாயமாகவே இன்றுள்ளது.இன்றைக்கு ஒரிஜினல் ஆப்பிரிக்கா ஆதியில் வந்த ரத்தக் கலப்பு இல்லாத ஒரே இனம்…

    நமது இந்தியா நாட்டின் இறையான்மையில் உள்ள ஒரிஜினல் இந்தியன் சென்ரினல் தீவுவாசிகளே.இவர்கள் தான் ஒரிஜினல் தேச பக்தர்கள்.வேறு எவரையும் தம் தீவுக்குள் விடாமல் உறுதியாக இன்றுவரை உள்ளார்கள்.

    நம்ம முன்னோர்கள்…வந்தவனை எல்லாம் எதிர்த்து நிற்க்க முடியாமல்..அவனை அண்டி ஆதரித்து களங்கப்பட்டு விட்டனர்.அசல் இந்தியன் சென்ரினல் மக்கள்தான் ஆரம்ப இரத்தத்துடன் கலப்பின்றி இருக்கும் அசல் தேச பக்தர்கள்.அமெரிக்காகாரனுக்கும் அவர்கள் அஞ்சுவதில்லை.அம்பால் போட்டுத்தள்ளி தேச பக்தியை நிரூபித்தவர்கள்.வாழ்க சென்ரினல்! வாழ்த்துவோம்!

 5. Avatar
  India Biotics says:

  இந்தியாவில் இருப்பவர்கள் அனைவரும் வந்தேறிகளே என்றானபின்பு…… இதில் நரேந்திரன்கள் பெருமைப்பட என்ன இருக்கிறது? உண்மையில் பூர்வீக இந்தியர்கள் ..ஆதி குடிகள் என்று பெருமைப்பட, அந்தமான் தீவுகளில் உள்ள ஓங்கோல்,ஜாரவாஸ்,சென்றினால்

 6. Avatar
  Indian says:

  On the eighth day, the Lord said “ Let there be a Rambler on Indian history with brain clogged up completely with Stockholme syndrome cobwebs “
  Bingo. One Sha——y appeared!
  Out of Africa theory has gone for six btw!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *