மதிமுக-விசிக-ரஞ்சித் தகராறின் உண்மை பிரச்சினை என்ன?

author
1
0 minutes, 1 second Read
This entry is part 3 of 5 in the series 9 டிசம்பர் 2018

ராஜசங்கர்

மதிமுக-விசிக-ரஞ்சித் தகராறின் உண்மை பிரச்சினை என்ன? அதிமுக/பிஜேபியின் சாதிபங்கீடு முறையை கண்டு ஏன் இவ்வளவு பயம்?

கடந்த நான்கைந்து நாட்களிலே திருமா, வைகோ, ரஞ்சித், வன்னியரசு இவர்களின் பேச்சையும் அதிலே புகைவதையும் பார்த்தால் ஏதோ ஒன்று மறைக்கப்படுகிறது அதை வெளியிலே சொல்லாமல் சண்டை கட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பது தோன்றும்.

அது என்ன என்பது பேட்டி எடுத்த ஆட்களுக்கும் தெரிந்திருக்கிறது ஆனாலும் அதை மெல்லவும் விழுங்கவும் முடியாமல் ஏன் எப்படி என சும்மா போட்டு வாங்க மட்டுமே முயற்சி செய்தார்கள் என்பது அதை பார்த்தவர்களுக்கு புரிந்திருக்கலாம்.

தமிழகத்திலே திராவிட கொள்கை என்பது பார்ப்பான் தான் சாதிக்கு காரணம் எனவே பார்ப்பானை ஒழிக்கனும் ஆனால் சாதி அடிமைகள் மற்ற சாதிகளுக்கு தேவைப்படும் எனவே இருக்கனும் என்பது தான். நண்பர் நியாண்டர் செல்வன் ஒரு முறை சொன்னது போல ஜமீந்தாரும் அவரின் வீட்டிலே இருக்கும் பண்ணை அடிமையும் சேர்ந்து பார்ப்பானை ஒழித்து சமத்துவம் கொண்டு வரும் விளையாட்டு தான் திராவிட கொள்கை என்பதே.

முழு திராவிட கொள்கை பரப்பும் பொஸ்தவங்களும் இன்னபிறவும் இதைச்சுற்றியே இருப்பதை பார்க்கலாம். பார்ப்பானை மணியாட்ட உடாத புடுங்க என கூவும் கொள்ளை குன்றுகள் ச்சீ கொள்கை குன்றுகள் என்றைக்கும் பரம்பரை மணீயம் பற்றியோ நில உரிமை, வேலைவாய்ப்பு இன்னபிற பற்றியோ பேசவே மாட்டார்கள். கார்ப்பரேட் எதிர்ப்பு என்பதே எங்கேயும் எப்போதும் ஒரு தலித் தானாகவே நிறுவனங்களை நிறுவி முன்னேறிவிடக்கூடாது என்பதற்காகவே. இங்கே தலித் என சொன்னாலும் அது எல்ல பிற்படுத்தப்பட்ட அல்லது வசதியில்லாத சாதிகளை மட்டுமல்ல குடும்பங்களையும் குறிக்கும்.

வேலையில்லாதவன் வேலையில்லாமலே ஏழையாகவே இருக்கவேண்டும். பெரும்பாலானா மக்கள் ஏழையாகவே இருக்கவேண்டும் அப்போது தான் இந்த ஆட்கள் புரட்சி செய்து ஏழைகளை காப்பாற்றிக்கொண்டே இருக்கமுடியும் என்பது தான். சமீபத்திலே கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஊர்கள் இன்னமும் ஏழ்மையாகவே இருக்கிறது என நண்பர்கள் சுட்டிக்காட்டியிருந்தார்கள். 1990கள் வாக்கிலே தான் நான் முதன் முதலாக கடலூர் உட்பட டெல்டா மாவட்டங்களுக்கு போனேன். கொங்கிலே நல்ல வீடுகளையே பார்த்து பழகியிருந்த எனக்கு அங்கே குடிசைவீடுகள் மட்டுமே இருந்தது மிகவும் அதிர்ச்சியளித்தது. இன்றைக்கு வரைக்கும் நிலை அப்படியே தான் இருக்கிறது.

1980களிலே இந்த செத்து செத்து விளையாடும் விளையாட்டிலே இருந்து ஒரு விடிவுகாலம் தமிழக மக்களுக்கு எம்ஜியாரின் வழியிலே கிடைத்தது. காமராஜர் உள்ளிட்டோர் அதை முன்பே செய்ய முயன்றிருந்தாலும் எம்ஜியார் அதை ஒரு இயக்கமாகவே செய்ய ஆரம்பித்தார். காமராஜருக்கு இல்லாத வசதியான தனிக்கட்சி என்பதும் எம்ஜியாருக்கு இருந்தது. அதனால் அவரால் நினைத்ததை செய்ய முடிந்தது.

கட்சியிலே எல்லா சாதியினருக்கும் இடபங்கீடு கொடுத்தார். பரம்பரை மணியத்தை ஒழித்தார். அதுவரையிலே ஆண்டான் அடிமைகளாக இருந்த மக்களை எல்லோரும் சமம் என செயல்படுத்தியே காட்டினார். அடுத்து வந்த ஜெவும் அதை தொடர்ந்தார். இருவரின் பல செயல்கள் மீதும் அதிருப்தி இருந்தாலும் அடிப்படையிலே நல்லது செய்யவேண்டும், அதிகாரத்தை பங்கிட்டுகொள்ளவேண்டும் எனும் எண்ணம் கொண்டவர்கள்.

ஜெ என்ன ஊழல் செய்தாலும் பெரிய பரப்புரைகள் ஏதும் செய்யவில்லை என்றாலும் திரும்ப திரும்ப வெற்றீ பெறக்காரணமே எல்லோருக்குமே அங்கே இடமுண்டு. அது மட்டுமல்ல அங்கே சாதியை சொல்லி எல்லாம் திட்டிவிட்டு கட்சியிலோ ஆட்சியிலோ இருந்துவிட முடியாது. பொதுத்தொகுதியிலே தலித் வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற வைக்கும் அளவுக்கு தைரியமும் திறனும் ஜெவுக்கு இருந்தது.

திமுகவிலோ பலமுறை சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல்களிலே வெற்றி பெற்ற ஆட்களை கூட பொதுமேடையிலே சாதி சொல்லி திட்டி அசிங்கப்படுத்துவது சர்வ சாதாரணம். சாதியிலே கண்ணாலம் கட்டியிருக்கிறேன் என கிண்டல் அடித்து சுகம் காண்பது சட்டசபையிலே நடக்கும்போது மற்ற இடங்களிலே எப்படி இருக்கும் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை.

எனவே இந்த வழக்கமான திராவிட கொள்கைகளால் அதிருப்தி அடைந்த கட்சிகள் சோ கால்டு சாதிகட்சிகள் மற்றும் புரட்சி பேசும் தலித் இயக்கங்கள் இதை பேசாமல் சட்டமன்றத்திலே இடம் இத்யாதி என பேசி சமாளிக்க முய்ன்றன. கட்சி ஆரம்பித்ததிலே இருந்து இதுவரை தனித்து நிற்க திறனற்ற கையாலாகாத கட்சியான திமுகவோ இவர்களை வளர்த்து விட்டது.

ஜெவோ அவர்களின் கோரிக்கை நியாயமானதே என நினைத்து இடம் கொடுத்து குறைகளை கேட்டு நிவர்த்தி செய்ய முயன்றார். இன்றைக்கும் ஜெயலலிதா அம்மா அவர்கள் என பம்முவது இதனால் தான். உப்பிட்ட கையை கொஞ்சமே நினைத்து பார்க்கும் நன்றி இருப்பது இப்போதைய சூழ்நிலையிலே பாராட்டப்படவேண்டிய விஷயமே.

ஆனால் தமிழ்நாட்டிலே அதிமுக போல இந்திய அளவிலே பாஜக போல எல்லா சாதியினரையும் பிரிவினரையும் ஒருங்கிணைத்து செல்வதை எதிர்த்து பேசமுடியாத சூழ்நிலை. அப்படி மற்ற கட்சிகளும் கம்மினிஸ்டுகள் உட்பட இருக்கவேண்டுமே வெளீப்படையாக கேட்கமுடியாத சூழ்நிலை. மோடி அரசின் சுய தொழில் முன்னெடுப்பு திட்டங்கள் பெரும் பலன் அளிப்பதை கண்டு பலரும் பாஜகவுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிப்பதை எதிர்க்கவே முடியாத சூழ்நிலை

விளைவு இப்படி மென்று விழுங்கி திராவிட ஆட்சியிலே தலித்துகளுக்கு முன்னேற்றம் இல்லை என பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டை வைக்கவேண்டிய சூழ்நிலை. என்ன அப்படி முன்னேற்றம் இல்லை என கேள்விகள் கேட்டாலும் அதற்கு வெளிப்படையாக பதில் சொல்லாமல் எம்பவர்மெண்ட் எம்பவர்மெண்ட் என மழுப்பும் சூழ்நிலை

பாஜக இந்திய அளவிலே இப்படி எல்லா சாதிகளையும் ஒருங்கிணைத்து செல்வது பற்றீ முன்னமே பலமுறை எழுதியிருந்தேன். பாஜகவின் தேர்தல் வெற்றி என்பது என்னாமோ மோடி பேசுறார் அவரை பார்த்து வாக்களித்து விடுகிறார்கள் என்பது அல்ல. எல்லா சாதியினருக்கும் சரியான அளவிலான அதிகார பங்கீடும் எல்லா சாதியினரும் முன்னேறும் வகையிலே பொருளாதார திட்டங்களும் என்பது தான் பிஜேபியின் வெற்றிக்கு காரணம். நாளை வரும் தேர்தல் முடிவுகளும் இதை காட்டும்.

ஆதாரம் என்ன என கேட்டால், ஜாட் பிரச்சினை, குஜ்ஜார் பிரச்சினை, படேல் பிரச்சினை, மராத்தா பிரச்சினை, ராஜ்புத் பிரச்சினை என பல சாதிகளை கான்கிரஸ் கிளப்பி விட்டதே இப்போது என்னாயிற்று? ஏன் எல்லோரும் அடக்கி வாசிக்கிறார்கள்? ஏன் திரும்பவும் அதை தூண்ட முடியாமல் விவசாய பிரச்சினை என ஒரு ஆயிரம் ஐநூறூ பேரை வைத்துக்கொண்டு காபரே டான்ஸ் ஆடிக்கொண்டிருக்கிறதுகள்?

அடிமட்டத்திலே இருந்து கஷ்டப்பட்டு மேலேறி வந்த அதிமுகவின் இரண்டாம் நிலை மூன்றாம் நிலை தலைவர்களுக்கும் சரி, பாஜகவின் எல்லா மட்ட தலைவர்களுக்கும் இது தெரிந்து இருக்கிறது. அதற்கு ஏற்றால் போல் நிலைமையை சரி செய்ய வேலை செய்கிறார்கள். திட்டங்களை தீட்டி அதை செயல்படுத்துகிறார்கள். மக்களிடம் எடுத்து செல்கிறார்கள்.

விளைவு இந்த ஊழல்வாதிகளின் சமூகவிரோதிகளின் தேசவிரோதிகளின் திட்டங்கள் ஏதும் செயல்படுவதில்லை.

அந்த ஊழல்வாதிகளிடையே தஞ்சமடைந்து திரிபவர்களால் இதை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை எதிர்க்கவும் முடியவில்லை.

மதிமுக-விசிக-ரஞ்சித் தகராறை இந்த அடிப்படையிலேதான் பார்க்கவேண்டும்.

சினிமா எடுத்தால் புரட்சி வெடித்துவிடும் மக்கள் பொங்கி எழுவார்கள் என நம்பி படம் எடுத்து மிகவும் அதிர்ச்சியடைந்த ரஞ்சித் ஏன் தலித்துகளுக்கு படிப்பு, வேலை, முன்னேற்றம் என பேசவில்லை? ஏன் தலித்துகள் தலித்துகளுக்கே ஓட்டுப்போடவேண்டும் எனும் சாதி வெறி விஷத்தை கக்குகிறது? வன்னியர் ஓட்டு அந்நியருக்கு இல்லை எனும் கோஷம் சாதிவெறீ , தலித் ஓட்டு தலித்துகளுக்கே எனும் கோஷம் முற்போக்கு புரட்சியா?

மக்கள் வறுமையிலே துன்படுப்படுகிறர்கள், இளைஞர்களுக்கு வேலை இல்லை, வியாபாரம் நடக்கவில்லை என குற்றச்சாட்டுகளை அடுக்கிய விசிக ஏன் இப்போது சனாதன பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு என ஒரு இல்லாத விஷயத்தை மக்களுக்கு புரியாத விஷயத்தை எடுத்துக்கொண்டு கோமாளியாய் திரிகிறது?

ஏன்? போராட வேறு விஷயங்களே இல்லையா? அல்லது நாட்டிலே பாலாறும் தேனாறூம் ஓடுகிறதா?

கார்ப்பரேட் எதிர்ப்பு, அந்நிய நிறுவனங்கள் எதிர்ப்பு என்பதெல்லாம் என்ன ஆனது? சரக்கு விற்கவில்லையா?

தமிழ் உணர்வு, தமிழர் மானம், தமிழர் இனம் சரக்கும் என்ன ஆனது? கொள்வாரில்லையா?

தமிழனுக்கு சாதி இல்லை என்றால் எங்கே தலித்து வந்தது?

தமிழ்தேசியவாதிகளூக்கும் திராவிட கொள்ளை குன்றுகளுக்கும் இருக்கும் பிரச்சினை இது தான்.

திராவிடம் சாதியாக மோதலை ஏற்படுத்தி குளிர்காய நினைக்கிறது. தமிழ்தேக்சாயிசம் மாநிலரீதியாக இனரீதியாக மோதலை ஏற்படுத்தி குளிர்காய நினைக்கிறது.

இரண்டு ராப்பிச்சைகளுக்கு இடையே இருக்கும் வீடு பங்கீடு தகாராறு தான் இப்போது நடப்பது.

இதிலே காசு புழங்கும் கட்சிகளுக்கும் காசை தேத்த முடிந்த ஆட்களுக்கும் பிரச்சினை இல்லை. காசு தேத்த முடியாத கோஷ்டிகள்?

தமிழ்நாட்டிலே பிஜேபி வடக்கே செய்த ஒருங்கிணைப்பை செய்கிறது. அதையும் எதிர்க்கமுடியவில்லை. அதிமுகவையே எதிர்க்கமுடியவில்லை எனும் போது ஜெவிடமே பருப்பு வேகவில்லை எனும்போது பிஜேபியிடம் மோடியிடம் மோதினால் சுக்குநூறாகிவிடுவோம் என தெரிந்தே வைத்திருக்கிறார்கள்.

கிருஷ்ணசாமியின் தேவேந்திரகுலவேளாளர்களை பிஜேபி தலைவர் அமீத்ஷா சந்தித்தது பற்றி நேரடியாக பேசாமல் அந்த சோபியா பொண்ணை தூண்டி விட்டு பிரச்சினை செய்ய வைத்து அது வெற்றிபெறவில்லை என்றவுடன் கைகழுவிவிட்டார்கள். பாவம் அந்த பெண் இவர்களின் சூழ்ச்சிக்கு சிக்கி படிப்பை இழந்து நிற்கிறது.

நேரிடையாகவும் மோதமுடியவில்லை மறைமுக முயற்சிகளும் வெற்றி பெறவில்லை என்றவுடன் சந்தி சிரிக்கிறது. அவ்வளவு தான் விஷயம்.

இதிலே கேட்கலாம் உண்மையிலே ஒடுக்கப்பட்டவர்களின் முன்னேற்றத்திற்கு உழைப்பவர்களாக இருந்தால் மோடியின் போய் சேரவேண்டாம் குறைந்த பட்சம் அந்த விஷயங்களை எதிர்க்காமல் ஆவது இருக்கலாமே என.

அவர்கள் உண்மையிலே ஒடுக்கப்பட்டவர்களுக்கு உழைப்பவர்கள் இல்லை என்பது தான் சோகமாக வருத்தந்தரும் உண்மை.

முழுவதும் கொஞ்ச காலத்திலே அவர்களுக்கு பங்கீட்டு சண்டையிட்டுக்கொள்வதன் மூலம் வெளியேவரும்.

Series Navigationமஞ்ஞைப் பத்துபாண்டிச்சேரியில் கவர்னர் கிரண்பேடி
author

Similar Posts

Comments

 1. Avatar
  BSV says:

  கட்டுரையின் தலைப்பு, ”வைகோ-வி சி க- இரஞ்சித் தகராறின் உண்மைப் பிரச்சினை என்ன?” . அந்த உண்மையைத் தெரிய வாசிக்கப் போனால், பெருத்த ஏமாற்றமே. எதை எதையோ – குடித்தவன் உளறல் மாதிரி – கொட்டித் தள்ளுகிறார்.

  ‘பார்ப்பான்’ என ஒன்றல்ல, ஐந்து தடவைகள் அஜ்ஜாதியை கேவலப்படுத்துகிறார். வன்னியன், நாடான், செட்டி, முதலி என்று இவர் கேவலப்படுத்த முடியுமா? திண்ணைதான் போடுமா? ஊருக்கு இளைச்சான் பிள்ளையார் கோயில் ஆண்டியா?

  //நாளை வரும் தேர்தல் முடிவுகளும் இதை காட்டும்.//

  காட்டி விட்டது. நாட்டாண்மை தீர்ப்பை மாத்து என்று இவரிடம் சொல்லலாம் இப்போது :-)

  //பலரும் பாஜகவுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிப்பதை எதிர்க்கவே முடியாத சூழ்நிலை//

  அரசியல் என்றால் அரிச்சுவடியே தெரியாதவர் கட்டுரையாளர். தெரிந்திருந்தால், அரசியல்வாதிகள் எடுக்கும் நிலைபாடுகள், அப்போது நிலவும் சந்தர்ப்பங்களின் வழியே – தன்னைக்காத்து தன்னலம் அல்லது தன் கட்சி வளம் பெற எடுப்பவை – என்று புரியும். பா ஜ க – இப்போது கீழ்முகம். இனி அரசியல்வாதிகள் என்ன செய்யப்போகிறார்கள் என்று பொறுத்திருந்து பாருங்கள். மூழ்கும் கப்பலை விட்டு ஓடுவதுதான் இயற்கை செயல்.

  கட்டுரையின் தலைப்பே இவரின் ‘ஞானத்தை’ வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. வி சி கவுக்கும் வைகோவுக்குமே தகராறு. இதில் இரஞ்சித் இல்லை. இரஞ்சித்துக்கும், திருமாவுக்கும் கொள்கை ரீதியான பிரச்சினை. இதில் வைகோ இல்லை. இதைக்கூட தெரியாமல் ஒரு கட்டுரையா?

  வைகோவுடன் வந்த பிரச்சினை பற்றியும், இரஞ்சித்துடன் வந்த கொள்கை வேறுபாடு பற்றியும் (கொள்கை வேறுபாடு எனபது பிரச்சினை இல்லை அண்ணாச்சி! ) திருமா, புதிய தலைமுறை பேட்டியில் தெளிவாக விளக்கியிருக்கிறார். அப்படிப்பட்ட தெளிவான பேச்சை நான் இதுகாறும் கேட்டதில்லை. கேட்டு விட்டு வாருங்கள். இங்கே: https://www.youtube.com/watch?v=AFt0OUOkENY&lc=z233cttbymuahn2yr04t1aokgkm2d4lmel2cf414nifzbk0h00410.1544528349026666

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *