தமிழர் புத்தாண்டு சித்திரை முதலா ? தைத் திங்கள் முதலா ?

This entry is part 4 of 7 in the series 14 ஏப்ரல் 2019

[படம் – தமிழ் இந்து. காம் – நன்றி ]சி. ஜெயபாரதன், கனடா
+++++++++++++

தமிழர் புத்தாண்டுசித்திரை முதலா ?தைத் திங்கள் முதலா ?ஓயாத சொல்லடிப் போர் !இதற்கோர் தீர்வு ?ஒரு கல்லடியில் வீழ்ந்தனஇருமாங் கனிகள் ! தைத் திங்கள் தமிழாண்டுதப்புத் தாளம் ஆனது !சித்திரை மாதத் தமிழாண்டுபுத்துயிர் பெற்றது !ஆண்டு தோறும் நேரும்குருச்சேத்திர யுத்தம் ஓய்ந்ததா ? ++++++++++
தமிழரின் தமிழாண்டு பிறப்பு சித்திரை முதலா, அல்லது  தைத் திங்கள் முதலா என்னும் ஆயிரங்காலக் குருச்சேத்திரப் போர்,  திராவிட அரசியல் ஆளும் கட்சிகளுக்குள் ஆண்டு தோறும் வந்து போகும்  தலைவலிக் காய்ச்சலாய் ஆகிவிட்டது.  தி.மு.க தைத் திங்கள்தான் தமிழாண்டு துவக்கம் என்று முரசொலி முழக்குகிறது.  இல்லை சித்திரை முதல் தேதிதான் தமிழாண்டு துவக்கம் என்று அ.தி.மு.க அலையோசை அடிக்கிறது.  அந்த இரண்டு கட்சிகளில் ஒன்று ஆட்சி மேடையில் அமர்ந்ததும் சித்திரை மாதத் தமிழாண்டு மாற்றப்படும் !  அல்லது  தைத் திங்கள் தமிழாண்டுக் கொடி ஏற்றப்படும் ! இந்த தீராப் பிரச்சனையை நீக்க ஏதாவது வழி இருக்கிறதா ? இரண்டு வழிகள் உள்ளன. சித்திரை முதல் நாள் துவங்கும் 60 ஆண்டு மீள்சுழற்சித் தமிழாண்டுக்குப் பெயர்கள் இடுவதற்கு தமிழர்  வரலாற்று நினைவாக முக்கிய நிகழ்ச்சி / மேதைகள் பெயர்களைத் தேர்ந்தெடுத்துள்ளேன்.  தற்காலத் தமிழர், பிற்காலத் தமிழர் 60 ஆண்டு மீள்சுழற்சிக் காலத்தைக் கடக்கும் போது தமிழரது / தமிழ்நாட்டின் வரலாற்று நிகழ்ச்சிகள் அவருக்கு ஒருமுறை நினைவூட்டப் படுகின்றன. இப்பெயர்கள் அட்டவணை ஒர் ஆலோசனைதான்.  இவற்றில்  புதிதாய்ச் சேர்க்கலாம் , நீக்கலாம், இவற்றை  மாற்றலாம்; விருத்தி செய்யலாம். சீர்ப்படுத்தலாம், செப்பணிடலாம், நிராகரிக்கலாம். தேவையில்லை என்று குப்பையில் வீசி விடலாம். தமிழக நாட்காட்டிகள்,  60 ஆண்டு மீள்சுழற்சி நிரலில் [தமிழ்ப் பஞ்சாங்க முறையில்] அல்லது நீடித்த ஒருபோக்கு முறையில் திருவள்ளுவர் ஆண்டு போல் அல்லது ஆங்கிலக் கிறித்துவ ஆண்டு போல் தமிழர் விருப்பப்படி இருக்கலாம்.     தமிழ்ப்பஞ்சாங்க முறை நாட்காட்டியைச் சுமார் 60% – 70% தமிழர் பயன் படுத்துகிறார் [என் ஊகிப்பு].   திருவள்ளுவர் ஆண்டைச் சுமார் 10% -15% தமிழர் பின்பற்றலாம்.  [என் ஊகிப்பு].  

இந்த தமிழர் அறுபதாண்டு நாட்காட்டி,  தமிழருள் ஒருமைப்பாட்டை நிலைநாட்டும். 
 இந்த அட்டவணைப் பற்றி தமிழ் நண்பர் தமது கருத்துகளைக் கூறலாம்.யூகித்த திருவள்ளுவர் ஆண்டின் நீடிப்பு சித்திரை முதல் தேதி ஆரம்பம் என்று பெரும்பான்மைத் தமிழர் ஏற்றுக் கொண்டிருந்தால் திமுக / அதிமுக மாற்றி மாற்றி எறிந்து, பந்தாடாமல் ஒரே திருவள்ளுவர் ஆண்டு நீடித்து நிலையாய் இருந்திருக்கலாம்.   60 ஆண்டுகள், பெயர்கள் தேவையின்றி எளியதாக்கி இருக்கலாம். எல்லாம் பருவகால முரணான தைத் திங்கள் தமிழாண்டு இடைச்சொருகால் வந்த வேற்றுமைப் பிரச்சனை.

 கனிவுடன்,சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++

தகவல் :

1.   https://134804.activeboard.com/t64371605/topic-64371605/

2.   https://groups.google.com/forum/#!topic/vallamai/Dm42Gr7Nh7U

3. https://en.wikipedia.org/wiki/Tropical_year

4. https://en.wikipedia.org/wiki/Indian_astronomy

5.  http://koodal1.blogspot.ca/2008/01/blog-post_26.html

6.  https://en.wikipedia.org/wiki/Puthandu

7.  https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

+++++++++++++++

வரலாறு

இந்தியாவின் மிகப்பழைய வானியல் நூலான வேதாங்க சோதிடத்தில் (பொ.மு 700இற்குப் பின்)[1] விஜய முதல் நந்தன வரையான அறுபது ஆண்டுகளின் பட்டியலைக் காண முடிகின்றது.

எனினும், வராகமிகிரரின் பிருகத் சங்கிதையில் (பொ.பி 505 – 587) பிரபவ முதல் அட்சய வரை என்று அப்பட்டியல் மாற்றமுற்றிருக்கிறது. பிருகத் சங்கிதையில் குறிக்கப்பட்ட ஒழுங்கிலேயே இன்றுள்ள அறுபதாண்டுப் பட்டியல் கடைப்பிடிக்கப்படுகின்றது.[2]

வடமொழி நூல்களில் அறுபது ஆண்டுகளும் அறுபது சம்வத்சரங்கள் என்று அழைக்கப் படுகின்றன. இராசிச்சக்கரமூடு சூரியன் இயங்கும் ஒரு காலவட்டம் ஆண்டு என்று கணிப்பது போல், வியாழன் கோள் இயங்கும் ஒரு காலவட்டம் சோதிட ரீதியில் அறுபது சம்வத்சரங்கள் (அறுபது ஆண்டுகள்) என்று அழைக்கப்படுகிறது. வடநாட்டு நூல்கள் தொடர்ந்து சம்வத்சரங்களை வியாழனின் இயக்கத்துடனே தொடர்புபடுத்த, தென்னகத்தில் அவை சூரிய ஆண்டுகளின் சுற்றுவட்டப் பெயர்களாக மாறியிருக்கின்றன.[3]ஆயினும், காலக்கணிப்பு ரீதியில் சம்வத்சரமானது ஒரு சூரிய ஆண்டிலும் சிறியது என்பதே உண்மை ஆகும்.[3] [4]

தமிழகமும் அறுபது ஆண்டுகளும்

தமிழ் நாட்டில் அறுபதாண்டுப் பட்டியல் எப்போது வழக்கில் வந்தது என்பதற்கான தெளிவான சான்றுகள் இல்லை.[5] எனினும் அவற்றின் ஒழுங்கு வராகமிகிரருக்குப் பின்பேயே அது தமிழகத்துக்கு அறிமுகமானதைச் சொல்கின்றது. தமிழகத்தைப் பொறுத்தவரை, பொ.பி 14ஆம் 15ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த கல்வெட்டுகளிலேயே அறுபதாண்டுப் பெயர் பட்டியலை முதன்முதலாகக் காணமுடிகின்றது.[6] [7] தமிழில் அறுபது சம்வத்சரங்களைப் பட்டியலிடும் மிகப்பழைய நூலான “அறுபது வருட வெண்பா” இடைக்காடரால் பாடப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. இவர் காலம் பொ.பி 15ஆம் நூற்றாண்டு.[8] விவேக சிந்தாமணியிலும் அறுபதாண்டுப் பெயர்கள் மறைகுறியாகக் குறிக்கப்படும் பாடலொன்று வருகின்றது.[9]

2008இல் புத்தாண்டுக் குழப்பம் உச்சமடைந்தபோது, அதில் பயன்படும் அறுபதாண்டுப் பட்டியல் தமிழ் அல்ல என்ற வாதம் கிளம்பியது. தமிழ்ப்புத்தாண்டு என்று கூறி அவை ஒவ்வொன்றுக்கும் வடமொழியில் பெயரிட்டுள்ளது ஏன் என்ற குற்றச்சாட்டு தைப்புத்தாண்டு ஆதரவாளர்களால் முன்வைக்கப்பட்டது.[10] எவ்வாறெனினும், அறுபது ஆண்டுப்பட்டியல் தமிழர் காலக்கணக்கைப் பொறுத்தவரை இடைச்செருகல் என்பதில் ஐயமில்லை. எனினும், சமயம்சார்ந்த தேவைகளில் தற்போதும் அறுபதாண்டுப் பட்டியல் பயன்படுவதால், தமிழ்ப்பற்றாளர்கள் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் பரிந்துரைத்த அறுபது தமிழ்ப்பெயர் பட்டியலை பயன்படுத்தி வருகின்றனர்.[11][12]

+++++++++++++++

தமிழர் அறுபதாண்டு அட்டவணை

எண். பெயர்பெயர் (தமிழில்)பெயர் (ஆங்கிலத்தில்)கிரகோரி ஆண்டு எண்.பெயர்பெயர் (தமிழில்)பெயர் (ஆங்கிலத்தில்)கிரகோரி ஆண்டு
           
01.பிரபவசங்க முதல்ஆண்டுPrabhava1987–1988 31.ஹேவிளம்பிதிவாகரர்ஆண்டுHevilambi2017–2018
02.விபவஔவையார்ஆண்டுVibhava1988–1989 32.விளம்பிஅருணகிரிஆண்டுVilambi2018–2019
03.சுக்லதிருவள்ளுவர்ஆண்டுSukla1989–1990 33.விகாரிதியாகராஜர்ஆண்டுVikari2019–2020
04.பிரமோதூதபுத்தர்ஆண்டுPramodoota1990–1991 34.சார்வரிஜி.யூ. போப்ஆண்டுSarvari2020–2021
05.பிரசோற்பத்திதொல்காப்பியர்ஆண்டுPrachorpaththi1991–1992 35.பிலவகட்டப் பொம்மன்ஆண்டுPlava2021–2022
06.ஆங்கீரசநக்கீரர்ஆண்டுAangirasa1992–1993 36.சுபகிருதுவீரமாமுனிஆண்டுSubakrith2022–2023
07.ஸ்ரீமுகஇளங்கோஆண்டுSrimukha1993–1994 37.சோபகிருதுகால்டுவெல்ஆண்டுSobakrith2023–2024
08.பவகண்ணகிஆண்டுBhava1994–1995 38.குரோதிதாயுமானர்ஆண்டுKrodhi2024–2025
09.யுவமணிமேகலைஆண்டுYuva1995–1996 39.விசுவாசுவநாயக்கர்ஆண்டுVisuvaasuva2025–2026
10.தாதுசாத்தனார்ஆண்டுDhaatu1996–1997 40.பரபாவகுமர குருபரர்ஆண்டுParabhaava2026–2027
11.ஈஸ்வரகம்பர்ஆண்டுEesvara1997–1998 41.பிலவங்கஆறுமுக நாவலர் ஆண்டுPlavanga2027–2028
12.வெகுதானியஒட்டக்கூத்தர்ஆண்டுBahudhanya1998–1999 42.கீலககுமரிஆண்டுKeelaka2028–2029
13.பிரமாதிஆழ்வார்கள்ஆண்டுPramathi1999–2000 43.சௌமியதிருத்தணிஆண்டுSaumya2029–2030
14.விக்கிரமசித்தர்கள்ஆண்டுVikrama2000–2001 44.சாதாரணகாந்தியார்ஆண்டுSadharana2030–2031
15.விஷுஆண்டாள்ஆண்டுVishu2001–2002 45.விரோதகிருதுகாமராசர்ஆண்டுVirodhikrithu2031–2032
16.சித்திரபானுஜெயங்கொண்டார்ஆண்டுChitrabaanu2002–2003 46.பரிதாபிஇராஜாஜிஆண்டுParidhaabi2032–2033
17.சுபானுபெருந்தேவனார்ஆண்டுSubhaanu2003–2004 47.பிரமாதீசபரிதிமால்ஆண்டுPramaadhisa2033–2034
18.தாரணதிருத்தக்கர்ஆண்டுDhaarana2004–2005 48.ஆனந்தசிதம்பரனார்ஆண்டுAanandha2034–2035
19.பார்த்திபவளையாபதிஆண்டுPaarthiba2005–2006 49.ராட்சசபாரதியார்ஆண்டுRakshasa2035–2036
20.வியசேக்கிழார்ஆண்டுViya2006–2007 50.நளபாரதிதாசன்ஆண்டுNala2036–2037
21.சர்வசித்துபூங்குன்றனார்ஆண்டுSarvajith2007–2008 51.பிங்களபெரியார்ஆண்டுPingala2037–2038
22.சர்வதாரிநாலடியார்ஆண்டுSarvadhari2008–2009 52.காளயுக்திஅண்ணாதுரைஆண்டுKalayukthi2038–2039
23.விரோதிமுத்தொள்ளாயிரம்ஆண்டுVirodhi2009–2010 53.சித்தார்த்திவரதராசர்ஆண்டுSiddharthi2039–2040
24.விக்ருதிஅப்பர்ஆண்டுVikruthi2010–2011 54.ரௌத்திரிமறைமலையார்ஆண்டுRaudhri2040–2041
25.கரசுந்தரர்ஆண்டுKara2011–2012 55.துன்மதிகல்யாண சுந்தரர் ஆண்டுDunmathi2041–2042
26.நந்தனசம்பந்தர்ஆண்டுNandhana2012–2013 56.துந்துபிவிசுவநாதம்ஆண்டுDhundubhi2042–2043
27.விஜயவாசகர்ஆண்டுVijaya2013–2014 57.ருத்ரோத்காரிகண்ணதாசன்ஆண்டுRudhrodhgaari2043–2044
28.ஜயவில்லிபத்தூரார்ஆண்டுJaya2014–2015 58.ரக்தாட்சிஅப்துல் கலாம் ஆண்டுRaktakshi2044–2045
29.மன்மதபுகழேந்திஆண்டுManmatha2015–2016 59.குரோதனஇளையராசர்ஆண்டுKrodhana2045–2046
30.துன்முகிபட்டினத்தார்ஆண்டுDhunmuki2016–2017 60.அட்சயரகுமான்ஆண்டுAkshaya2046–2047
    

தகவல் :

1.   https://134804.activeboard.com/t64371605/topic-64371605/

2.   https://groups.google.com/forum/#!topic/vallamai/Dm42Gr7Nh7U

3. https://en.wikipedia.org/wiki/Tropical_year

4. https://en.wikipedia.org/wiki/Indian_astronomy

5.  http://koodal1.blogspot.ca/2008/01/blog-post_26.html

6.  https://en.wikipedia.org/wiki/Puthandu

7.  https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

+++++++++++++++

நூலுதவி : 

 1. தமிழ் இலக்கிய வரலாறு –  டாக்டர் மு. வரதராசனார் , சாகித்திய  அக்காதெமி வெளியீடு [2003]
 2. தமிழ் இலக்கிய வரலாறு  -எம்மார். அடைக்கலசாமி எம்.ஏ. ராசி பதிப்பகம் [ 2003]
Series Navigationநானென்பதும் நீயென்பதும்….திமுக ஆதரவு என்னும் உளவியல் சிக்கல்.
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

7 Comments

 1. Avatar
  குரு ராகவேந்திரன் says:

  60 வருடங்களின் பெயர்கள் வடமொழியிலேயெ உள்ளன. அதேபோல் நிறையபேர் உணராதது தமிழ் மாதங்களின் பெயர்களான சித்திரை முதல் பங்குனி வரை வடமொழிப்பெயர்களே, தமிழ் அல்ல‌ [சித்ரா, வைஷாக..,தைஷ்ய,.. பால்குண]. தொன்மையான தமிழ் நாகரீகத்தில் தமிழிலேயே மாதப்பெயர்கள் இல்லை என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. பழந்தமிழகத்தில் வேறு ஏதாவது தமிழ்ப்பெயர் எப்போதாவது வழக்கில் இருந்ததா என யாருக்காவது தெரிந்தால் தயவு செய்து சொல்லவும். தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்

  1. Avatar
   கார்த்திகேயன் says:

   60 ஆண்டிற்கான பெயரும் தமிழின் திரிபே, சோதிக்க தமிழர் உலகம் பாண்டியன ஐயாவின் கானோளிகளை பார்க்குமாரு கேட்டுக்கொள்கிறேன்

 2. Avatar
  S Jayabarathan says:

  நான் பிறந்த மதுரைத் திருமங்கலம், விருதுநகர், சாத்தூர், சிவகாசி, தூத்துக்குடி போன்ற இந்து நாடார் வசிப்புத் தளங்களில் ஒவ்வோர் ஆண்டு
  வைகாசி மாதம் தவறாது மாரி அம்மன் திருவிழா நடைபெறும்.

  சித்திரை மாத முதல்தேதி தமிழாண்டுப் பிறப்பு கொண்டாடப்பட்டு புத்தாண்டுப்
  பஞ்சாங்கம் வாசிப்பதை நான் பார்த்திருக்கிறேன். தமிழர் [பிராமணர் உட்படப்]
  பலர் அமர்ந்து புத்தாண்டின் பருவக்கால, இயற்கை நிகழ்வுகளை அறிந்து
  கொள்கிறார். நான் அறிய 80 ஆண்டுகளாக அது நடைபெற்று வருகிறது.

  1. அதாவது சித்திரை மாதம் தமிழாண்டின் ஆரம்ப முதல் மாதம். பங்குனி வருடத்தின்
  இறுதி மாதம். சித்திரை மாதம் முதல் நாள் ஓர் ஆண்டின் போக்கு [Annual Inventory Day] பஞ்சாங்கத்தின் மூலம் தெரிய வருகிறது. இது தமிழர் வழக்கம்.

  2. திருவள்ளுவர் ஆண்டைத் தொடர்வுக்கு ஆங்கில வருடம்போல் தமிழர் பயன் படுத்தலாம்.

  3. தைத் திங்கள் தனியாக இந்தியத் தமிழர் பொங்கல் விழாவாக “அறுவை தின விழாவாகக்” கொண்டாடிக் கொள்ளலாம். தை மாதம் முதல் தேதி யாரும்
  பஞ்சாங்கம் எழுதுவதும் இல்லை. புத்தாண்டு உணர்வு/ எதிர்பார்ப்பு இருப்பது மில்லை. தை மாதத்தை தமிழர் புத்தாண்டு என்பது மாட்டு வண்டியைக் குதிரை இழுப்பதுபோல் தெரிகிறது.

  4. யூகிக்கும் திருவள்ளுவர் ஆண்டைச் சித்திரை முதல் தேதியாக நாம் வைத்துக் கொண்டால், பழம் நழுவிப் பாலில் விழுந்ததுபோல் இனிதாக
  மகிழலாம்.

  5. 60 ஆண்டு சுழற்சியைப் பின்பற்றுவோர் / பஞ்சங்கம் எழுதுவோர் / பஞ்சாங்கம்
  பார்ப்பவர், ஏற்கனவே உள்ள தமிழ்ப் பெயர்களை ஏற்றுக் கொள்ளட்டும். அல்லது வடசொற்களை விரும்புவோர் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளட்டும்.

  6. திருவள்ளுவர் ஆண்டு 60 வருடச் சுழற்சிப் பெயர்களிலும் குறிப்பிடப்படலாம். உதாரணமாக திருவள்ளுவர் ஆண்டு “சாருவரி வருடம்” தை மாத முதல் தேதி பொங்கல்விழா.

  ,x இதுவரை 60ஆண்டுகளை சமஸ்கிருத பெயரில் மட்டுமே அறிந்திருப்பீர்கள்..

  இதோ சமஸ்கிருதத்திற்கு இணையான நம் முன்னோர்கள் வகுத்த அறுபது தமிழ் ஆண்டுகளின் தமிழ்ப்பெயர்கள்.

  *1.* பிரபவ – *நற்றோன்றல்*

  *2.* விபவ – *உயர்தோன்றல்*

  *3.* சுக்கில – *வெள்ளொளி*

  *4.* பிரமோதூத – *பேருவகை*

  *5.* பிரசோத்பத்தி – *மக்கட்செல்வம்*

  *6.* ஆங்கீரச – *அயல்முனி*

  *7.* சிறிமுக – *திருமுகம்*

  *8.* பவ – *தோற்றம்*

  *9.* யுவ – *இளமை*

  *10.* தாது – *மாழை*

  *11.* ஈசுவர – *ஈச்சுரம்*

  *12.* வெகுதானிய – *கூலவளம்*

  *13.* பிரமாதி – *முன்மை*

  *14.* விக்ரம – *நேர்நிரல்*

  *15.* விச – *விளைபயன்*

  *16.* சித்திரபானு- *ஓவியக்கதிர்*

  *17.* சுபானு – *நற்கதிர்*

  *18.* தாரண- *தாங்கெழில்*

  *19.* பார்த்திப – *நிலவரையன்*

  *20.* விய – *விரிமாண்பு*

  *21.* சர்வசித்த – *முற்றறிவு*

  *22.* சர்வதாரி – *முழுநிறைவு*

  *23.* விரோதி – *தீர்பகை*

  *24.* விகிர்தி- *வளமாற்றம்*

  *25.* கர – *செய்நேர்த்தி*

  *26.* நந்தன – *நற்குழவி*

  *27.* விசய – *உயர்வாகை*

  *28.* சய – *வாகை*

  *29.* மன்மத – *காதன்மை*

  *30.* துன்முகி – *வெம்முகம்*

  *31.* ஏவிளம்பி – *பொற்றடை*

  *32.* விளம்பி – *அட்டி*

  *33.* விகாரி – *எழில்மாறல்*

  *34.* சார்வரி – *வீறியெழல்*

  *35.* பிலவ – *கீழறை*

  *36.* சுபகிருது – *நற்செய்கை*

  *37.* சோபகிருது – *மங்கலம்*

  *38.* குரோதி – *பகைக்கேடு*

  *39.* விசுவாவசு – *உலகநிறைவு*

  *40.* பராபவ – *அருட்டோற்றம்*

  *41.* பிலவங்க – *நச்சுப்புழை*

  *42.* கீலக – *பிணைவிரகு*

  *43.* சவுமிய – *அழகு*

  *44.* சாதாரண – *பொதுநிலை*

  *45.* விரோதி கிருது – *இகல்வீறு*

  *46.* பரிதாபி – *கழிவிரக்கம்*

  *47.* பிரமாதீச – *நற்றலைமை*

  *48.* ஆனந்த – *பெருமகிழ்ச்சி*

  *49.* இராட்சச – *பெருமறம்*

  *50.* நள – *தாமரை*

  *51.* பீங்கள – *பொன்மை*

  *52.* காளயுக்தி- *கருமைவீச்சு*

  *53.* சித்தார்த்தி – *முன்னியமுடிதல்*

  *54.* ரவுத்ரி- *அழலி*

  *55.* துன்மதி- *கொடுமதி*

  *56.* துந்துபி- *பேரிகை*

  *57.* உருத்ரோத்காரி – *ஒடுங்கி*

  *58.* இரக்தாட்சி- *செம்மை*

  *59.* குரோதன்- *எதிரேற்றம்*

  *60.* அட்சய – *வளங்கலன்*

  ++++++++++

  To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/48860556-a8b3-4861-bd51-392618569cc4%40googlegroups.com.

 3. Avatar
  S Jayabarathan says:

  N. Ganesan

  10:59 AM (26 minutes ago)
  to vallamai, houstontamil, மின்தமிழ்

  On Sat, Apr 18, 2020 at 9:49 AM Thenee MK wrote:
  >
  > சூரியமான ஆண்டு முறை சாளுக்கியர் காலம் முதலே பயன்பாட்டில் உள்ளது. அது எப்போது தமிழ் புத்தாண்டு என அடையாளப் படுத்தப்பட்டது?

  சளுக்கர்கள் வேளிர் குலத்தவர் என்கின்றன தமிழின் பழைய நூல்கள். சளுக்கர்
  என்பதன் வடமொழி வடிவம் சாளுக்ய என்பது.
  வேளிர்கள் தமிழ்நாட்டில் வந்தது கி.மு. நூற்றாண்டுகளில். சூர்யமான
  ஆண்டுமுறை கி.பி. 2-ஆம்
  நூற்றாண்டு வாக்கில் தமிழ்நாட்டில் வந்துவிட்டது. தொல்காப்பியர் தரும்
  மாதப் பெயர் சூத்திரங்களால் தெரிகிறது.
  முதல் மாதமான சித்திரையில் இந்திர விழவு எனச் சிலப்பதிகாரம். இந்திர விழா
  மறந்து, பல நூற்றாண்டுகளின்
  பின்னர் மாசியில் நடந்த திருவிழாவை, சித்திரைத் திருவிழா என மதுரை
  நாயக்கர்கள் செய்கின்றனர்,

  கர்நாடகத்தில் சந்திரமான பஞ்சாங்கம் வந்துவிட்டது. ஆந்திராவிலும் அதே
  தான். எனவே தான்
  கன்னட-தெலுங்கு வருஷப் பிறப்பு என உகாதியும், தமிழ் வருஷப் பிறப்பு என
  சித்திரைத் திருவிழாக்
  கொண்டாடி, அன்று பஞ்சாங்கம் படிப்பதும் தமிழகக் கோவில்களில் நடக்கிறது.
  கேரளாவிலும் வருஷப்பிறப்பு தமிழ் வருஷப் பிறப்பு ஆகிய சூரியமான
  பஞ்சாங்கம் தரும் சித்திரை
  முதல்நாளே.

  நாசா நா.கணேசன்

 4. Avatar
  S Jayabarathan says:

  N. Ganesan
  9:49 PM (2 hours ago)
  to மின்தமிழ், vallamai, houstontamil

  சித்திரையில் வருஷப் பிறப்பைத் தமிழர் கொண்டாடினர் என்பதற்கு
  அரிய கல்வெட்டுச் சான்று உள்ளது. சக்கரவர்த்தி ராஜராஜ சோழனின்
  ஆட்சியில் திருவலஞ்சுழி தலத்தில் க்ஷேத்திர பாலகர் திருக்கோயில்
  கல்வெட்டு, கி.பி. 998-ஆம் ஆண்டு எழுதப்பட்டுள்ளது.
  இக்கோயிலில் ராஜராஜன், ராஜேந்திரன் என்னும் பெருமன்னர்கள்
  கல்வெட்டுக்கள் தாம் உள்ளன. ராஜராஜ சோழன் சிவபாதசேகரன் என்றழைக்கப்பட்டது போல,
  ராஜேந்திரசோழன் சிவசரணசேகரன் என ழைக்கப்பட்டது தெரிவது இத்தலக்
  கல்வெட்டுக்களால் தான். அவர்கள் காலத்தில் எந்தத்
  தனிநபர் கல்வெட்டும் இங்கே எழுதப்படவில்லை.

  (1) சித்திரை விஷு (2) தட்சிண அயனம் (3) ஐப்பசி விஷு (4) உத்தர அயனம்
  என்ற வரிசைக் கிரமத்தில் வருஷத்தின் நான்கு முக்கியமான சங்கிராந்திகள் எழுதப்பட்டுள்ளது.

  ராஜராஜ சோழன் ஆட்சிக் கல்வெட்டு தமிழ்வருஷப் பிறப்பு சித்திரை விஷு என்று காட்டுகிறது.
  அதுவே முதல் சங்கிராந்தியாக உள்ளது, திருக்கோவில்களில் பஞ்சாங்கம் படித்தல் என்னும்
  நிகழ்ச்சி நடக்கும். இந்த வருஷப் பிறப்பைத் தமிழர்கள் தென்கிழக்கு ஆசியா முழுதும்
  பல்லவர் காலத்தில் பரப்பியுள்ளனர், சித்திரை விஷு, ஐப்பசி விஷு இரண்டும்
  “அரைநாள்” எனச் சங்க இலக்கியம் கூறும் Equinox.
  வடசெலவு = உத்தராயணம், தென்செலவு = தட்சிணாயனம்.
  இவை இரண்டும் ஞாயிறு திசை திரும்பு நாள்கள் (Solstcies).

  சித்திரை விஷு = Vernal Equinox
  தட்சிணாயனம் = Summer Solstice
  ஐப்பசி விஷு = Autumnal Equinox
  உத்தராயணம் = Winter Solstice
  https://www.weather.gov/cle/Seasons
  https://www.youtube.com/watch?v=SCm5ws87uyY

  இக் கல்வெட்டுச் சான்று போலச் சில இலக்கியச் சான்றுகள் பார்ப்போம்.

  நாசா நா. கணேசன்

 5. Avatar
  சி. ஜெயபாரதன் says:

  N. Ganesan
  7:02 AM (4 hours ago)
  to vallamai, houstontamil, மின்தமிழ்

  சங்க இலக்கியங்களில் நெடுநல்வாடையில் 12 ராசிகளைக் கொண்ட வருஷத்தில்,
  மேஷ ராசி தலை ஆக இருப்பதும், பதிற்றுப்பத்து சேரர்வரலாற்று நூலில்,
  அகத்தியர் ஆசிரமம் இருந்த தண்டகாரணியத்தில் வருடை என்னும் மலை ஆட்டைச்
  சேரநாட்டுக்குக் கொணர்ந்தான் என ஓர் உருவகமாக, ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
  காலத்தில் சக அப்த முறையில் சித்திரை முதலாக ஆண்டு ஏற்படுத்தப்பட்டது என்பதும்
  பார்த்தோம். தொல்காப்பியத்திலே 12 மாதப் பெயர்களும், 27 நட்சத்திரப் பெயர்களும்
  எந்தெந்த எழுத்தில் முடியும் என ஆராய்ந்து சொல்லப்பட்டிருக்கிறது. சேரலாதன்
  வாழ்ந்த வஞ்சி மாநகர் அருகே இருந்தவர் திருத்தக்கதேவர்.
  அவர் இயற்றிய சிந்தாமணிக் காப்பியத்தில் அப்போதிருந்த கலைகள் பற்றிய
  பல செய்திகள் கிடைக்கின்றன. ஆடல், பாடல், கூத்து பற்றிய அரிய செய்திகள் உள்ளன.
  பருந்தும் நிழலும் போலப் பாட்டும் பண்ணும் இருக்கவேண்டும் என்று கூறியவர் அவர்தான்.
  பின்னாளில் தமிழ் இசை பற்றி மிகுந்த ஆராய்ச்சிகள் தந்த அடியார்க்குநல்லார் உரையை,
  சிலப்பதிகார நூலும், அடியார்க்குநல்லார் உரையும் பருந்தும் நிழலும் போல இருக்கிறது என்று
  இந்த உவமையைப் பயன்படுத்திப் புகழ்ந்திருக்கிறார்கள். தமிழ் இசை வளர்த்த மங்கலப்
  பண்டிதர்கள் சங்க காலப் பாணர்கள் வகுப்பாரில் பெரும்பிரிவினர் என்பது சீவக சிந்தாமணியால்
  அறிகிறோம். சோதிட சாத்திரச் செய்திகள் பலவும் சிந்தாமணியில் கிடைக்கிறது.
  வருடத்திற்குப் 12 திங்கள்கள் என்றும், அயனம் என்னும் கதிரவனின் வட, தென்
  திசைச் செலவுகள் பற்றியும் விளக்கியுள்ளார்.

  வருடத்தில் 12 மாதங்கள். 12 X 1 = 6 X 2 = 4 X 3 என 12-ஐப் பகுக்கலாம்.
  6X2 – இரண்டிரண்டு மாதங்களாய் 6 பருவங்கள் வகுக்கப்பெற்றன.
  http://www.tamilvu.org/tdb/titles_cont/inscription/html/panchangam.htm
  வசந்த ருது – இளவேனில் காலம் ( சித்திரை , வைகாசி)
  கிரீஷ்ம ருது – முதுவேனிற் காலம் ( ஆனி, ஆடி)
  வருஷ ருது -மழைக்காலம் (ஆவணி, புரட்டாசி)
  சரத் ருது – கூதிர்காலம் (ஐப்பசி, கார்த்திகை )
  ஹேமந்த ருது – முன்பனிக்காலம் (மார்கழி, தை)
  சிசிர ருது – பின்பனிக்காலம் (மாசி, பங்குனி)
  (வசந்தம் மார்ச் 20-ல் தொடங்க வேண்டும். இதுபற்றிப் பாரதியார் நல்ல கட்டுரை எழுதினார்.)

  வருடத்தை நான்கு மாதங்கள் கொண்ட மூன்று பிரிவுகளாகப் பகுத்தல் உண்டு.
  ”இக்ஷ்வாகு மன்னர்களின் கி.பி. 3 – 4ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் கிம்ஹ (கிரீஷ்ம), வஸ்ஸ (வர்ஷ), சரத் என்ற மூன்று காலங்கள் குறிப்பிடப்படுகின்றன. அதாவது கோடை, மழை, பனிக் காலங்களே இவ்வாறு குறிப்பிடப்பட்டன. இந்த வரிசையே தமிழ் இலக்கண மரபிலும் இளவேனில் – முதுவேனில், கார் – கூதிர், முன்பனி – பின்பனி என்று சற்று விரிவாகக் குறிப்பிடப்படுகிறது. எனவே வானநூல் – ஜோதிட அடிப்படையிலும் கோடைக்காலமே ஆண்டின் தொடக்கமாகும்.” (எஸ். ராமச்சந்திரன், தொல்லியல் ஆய்வாளர், சென்னை). சித்திரை மாதத்தில் வேனிலான் எனப்படும் காமதேவனின் வசந்தோற்சவம். இந்திரவிழா சிறப்பாக நடந்ததை சிலம்பு 5-ம் காதை விவரிக்கிறது.
  கிரீஷ்ம, வர்ஷ, சரத் என்னும் நந்நான்கு மாதமாய் ஆண்டினை மூன்று பிரிவாக்குவதைச் சீவகசிந்தாமணி விளக்கியுள்ளது. இங்கே, வேனில், மழை, குளிர் என்று இப்பிரிவுகள். வேனில்பருவம் என்று
  சித்திரையில் ஆண்டு தொடங்குவதைக் கூறியுள்ளார். இதே போல, திருவலஞ்சுழிக் கல்வெட்டிலும் சித்திரை விஷு என்று வருடத்தின் நான்கு முக்கியமான சங்கிராந்திகள் கூறப்பட்டுள்ளன.

  சித்திரையில் வருட தொடக்கம் எனக் காட்டும் சீவகசிந்தாமணி பாடல்கள்:

  http://tamilvu.org/slet/l3100/l3300uri.jsp?page=1730
  3070

  நளிசிலம் பதனி னுச்சி

  நாட்டிய பொன்செய் கந்தி

  னொளியொடு சுடர வெம்பி

  யுருத்தெழு கனலி வட்டந்

  தெளிகடல் சுடுவ தொத்துத்

  தீயுமிழ் திங்க ணான்கும்

  விளிவரு குரைய ஞான

  வேழமேற் கொண்டு நின்றான்.

  (இ – ள்.) நளி சிலம்பதனின் உச்சி – (முற்கூறியவை) செறிந்த குன்றின் உச்சியிலே; விளிவு அரும் ஞான வேழம் மேற்கொண்டு – கெடுதல் இல்லாத ஞானமாகிய வேழத்தை ஊர்ந்து; நாட்டிய பொன் செய் கந்தின் – நாட்டப்பெற்ற பொன்னாலாகிய தூண்போல; உருத்து எழு கனலி வட்டம் – சினந்து எழும் ஞாயிற்றின் வட்டம்; தெளி கடல் சுடுவது ஒத்து – தெளிந்த கடலைச் சுவறப் பண்ணுந் தன்மையை ஓத்து; ஒளியொடு சுடர வெம்பி – ஒளியோடே விளங்கும்படி சினந்து; தீ உமிழ் திங்கள் நான்கும் – நெருப்பைச்சொரியும் திங்கள் நான்கும்; நின்றான் – நின்றான்.

  (வி – ம்.) குரைய : அசை,

  நளி – செறிவு, சிலம்பு – மலை, கந்தின் – தூணைப்போன்று , கனலி வட்டம் – ஞாயிற்று மண்டிலம். சித்திரை வைகாசி ஆனி ஆடி

  யாகிய திங்கள் நான்கும் என்க. இஃது இளவேனிலும் முதுவேனிலும் ஆகிய கோடைக்காலத்துச் சீவகன் றவநிலை கூறிற்று.

  ( 472 )
  3071 பார்க்கடல் பருகி மேகம்

  பாம்பினம் பதைப்ப மின்னி

  வார்ப்பிணி முரசி னார்த்து

  மண்பக விடித்து வான

  நீர்த்திரள் பளிக்குத் தூணி

  சொரிந்திட நின்று வென்றான்.

  மூர்த்தியாய் முனிவ ரேத்து

  முனிக்களி றனைய கோமான்.

  (இ – ள்.) மூர்த்தியாய் முனிவர் ஏத்தும் முனிக்களிறு அனைய கோமான் – தவவுருவினனாகி, முனிவர்கள் வாழ்த்தும் முனிக்களிறு போன்ற அரசன்; வானம் மேகம் பார்க்கடல் பருகி – வானிலே முகில் பாறையையுடைய கடலிலே நீரைப் பருகி; பாம்பு இனம் பதைப்ப மின்னி – பாம்பின் திரள் துடிக்க மின்னி; வார்ப்பிணி முரசின் ஆர்த்து – ஆர்ரால் இறுகிய முரசென முறுகி; மண்பக இடித்து – நிலம் பிளக்க இடித்து; நீர்த் திரள் பளிக்குத் தூணி சொரிந்திட நின்று வென்றான் – நீர்த்திரளைப் பளிங்குக் கோல் கிடக்குந் தூணி அதனைப் பெய்வது போலப் பெய்ய (ஆவணி முதலிய திங்கள் நான்கும்) நின்று வென்றான்.

  (வி – ம்.) இஃது ஆவணி புரட்டாதி ஐப்பசி கார்த்திகை யாகிய காரும் கூதிருமாகிய பருவத்துத் தவநிலை கூறுகின்றது. பார் – பறை, பாப்பினம் – பாம்பின் திரள். ”விரிநிற நாகம் விடருளதேனும் உருமின் கடுஞ்சினம் சேணின்று முட்கும்” ஆதலான் பாப்பினம் பதைப்ப என்றார். மேகம் நீர்த்திரளைப் பளிக்குத்தூணி பளிக்குக்கோலைச் சொரிவதுபோலச் சொரிய என்க. பக – பிளக்க. மூர்த்தி – தவவேடம்.

  ( 473 )
  3072 திங்கணான் கவையு நீங்கத்

  திசைச்செல்வார் மடிந்து தேங்கொள்

  பங்கயப் பகைவந் தென்னப்

  பனிவரை யுருவி வீசு

  மங்குல்சூழ் வாடைக் கொல்கான்

  வெள்ளிடை வதிந்து மாதோ

  விங்குநான் காய திங்க

  ளின்னுயி ரோம்பி னானே.

  (இ – ள்.)

  நான்கு திங்கள் அவையும் நீங்க – நான்கு திங்களாகிய காரும் கூதிரும் கழிந்த பிறகு; திசைச் செல்வார். மடிந்து – திசைதொறும் செல்கின்றவர் செல்லாமற் சோம்பியிருக்க; தேம் கொள் பங்கயப் பகை வந்தென்ன – அவ்விடங்களிலே கொண்ட பனி வந்ததாக, பனிவரை உருவி வீசும் மங்குல் சூழ் வாடைக்கு ஒல்கான – பனி மலையைத் தடவி வரும் இருள் சூழும் வாடைக்குத் தளராதவனாய்; வெள்ளிடை வதிந்து – வெளியிடத்திலே தயங்கியிருந்து; இங்கு நான்கு ஆய திங்கள் இன உயிர் ஓம்பினான் – தங்கிய அந்நான்கு திங்களாகிய பனிக்காலத்திலே இனிய உயிரைக் காப்பாற்றினான்.

  விளக்கம் : முன்பனி, பின்பனி இரண்டுங் கூடிய பனிக்காலத் தவநிலை கூறினார். பங்கயப்பகை – பனி, இங்குதல் -தங்குதல். (474)

  https://temple.dinamalar.com/news_detail.php?id=13563

  சித்திரை திங்கள் வருஷத்தின் முதல் மாதம் எனக் காட்டும் முக்கியமான இலக்கியமாக
  சீவக சிந்தாமணி திகழ்கிறது.

  நா. கணேசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *