பிச்சை

author
0 minutes, 2 seconds Read
This entry is part 6 of 12 in the series 4 ஆகஸ்ட் 2019

கு. அழகர்சாமி

காசுக்காக அல்ல- பசிக்காக

சாப்பாட்டுப் பொட்டலம் பிச்சை கேட்கிறவனிடம்

காசு கொடுத்து வாங்கிப் போ என்று கறாராய்க் கூறும்

கடைக்காரன் பக்கத்திலிருந்து-

காது இருக்கிறது தான்; ஆனால் காது கொடுக்காமல்

கேட்கிற எனக்கு

தானம் கொடு காசென்று

-பிச்சை கேட்கிறவனுக்கல்ல-

எனக்குத் தான் இன்னொரு விதமாய் இடித்துச் சொல்கிறான்

கடைக்காரனென்று

ஆகாய உடுக்களின் ஒளி போல்

தாமதமாய் என் சிற்றறிவெட்டிய

தருணத்தில்

பிச்சைக்காரனைத் தேடக்

காணோம்  அவன்-

என்னிடம் அவன்  காசு கேட்டுக் கொடுக்காமலில்லையேயென்று

எனக்கு நானே

சமாதானமாக முயன்றாலும் சமாதானமாக முடியாமல் நான் –

எப்போதாவது பிச்சையெடுத்திருந்தால் தானே தெரிந்திருக்கும்

கேட்காமல் கொடுக்காத தானம்  பிச்சையெடுக்காத பிச்சையென்று.

Series Navigationகலித்தொகையில் ஓரிரவு.. குறிஞ்சிக்கலி:29. முதுபார்ப்பான் கருங்கூத்துதேவதை துயிலும் கல்லறை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *