2022 ஆண்டில் இந்தியா அடுத்து முற்படும் மூவர் இயக்கும் விண்வெளிச் சிமிழ் தயாரிக்க ரஷ்ய நூதனச் சாதனங்கள் பயன்படுத்தும்

author
4 minutes, 15 seconds Read
This entry is part 2 of 11 in the series 18 ஆகஸ்ட் 2019
Related image

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

++++++++++++++++++++++++

சந்திரனைச் சுற்றுது
இந்தியத் துணைக் கோள் -1 
மந்திர மாய மில்லை !
தந்திர உபாய மில்லை !
சொந்த மான, நுட்ப மான
இந்தியத்  திறமை  !
பிந்திப் போயினும்
முந்தைய ஆற்றல் ! யுக யுமாய்ச்
சிந்தையில் செழித்தது.
எந்தையும் தாயும்
தந்திடும் சக்தி !  ஆதி
அந்த மில்லாத சக்தி !
இந்த யுகத்தில் புத்துயிர் பெறும்
விந்தை யுக்தி ! பலர்
நிந்தனை புரியினும்
வந்தனை செய்வோம்
இந்தியர் நாமெலாம் !
உந்திப் பயணம் செய்து சுற்றிய
சந்திரயான் -1 வெற்றியே !
இந்தியக் கொடி இறங்கும் சந்திரனில் !                                  எத்திசையும் புகழ் மணக்கும்
அப்துல் கலாம் திறமை !
2022 ஆண்டில் புதிய திட்டம்,
இந்திய  அகில்வெளி விமானி மூவர்
விண்சிமிழ்  இயக்குவார்..

++++++++++++++

Designs for India's First Manned Spaceship Revealed
  1. https://www.space.com/8043-india-boosts-space-budget.htm
  2. lhttps://thenextweb.com/in/2018/08/15/india-will-launch-its-first-manned-space-mission-by-2022/
  3. https://www.space.com/5967-designs-india-manned-spaceship-revealed.html
  4. https://www.newsweek.com/india-will-send-first-manned-mission-space-2022-1274628
Image result for india's first human space flight

2022 ஆண்டில் இந்திய விண்வெளி விமானி மூவர் இயக்கும் விண்சிமிழ் பூமியைச் சுற்றும்

2019 ஆகஸ்டு 14 தேதி இந்திய விண்வெளித் தேடல் வாரியம் [(ISRO) Indian Space Research Organization] 2022 ஆண்டில் திட்டமிடும் மூவர்  இயக்கும் நூதன விண்சிமிழுக்கு ரஷ்ய சாதனங்களை வாங்க ஆணை இட்டுள்ளது  என்று  அறிவித்த ரஷ்யத் தலைமை  ஆய்வு இஞ்சினியர் : ஸெர்கே போஸ்டினியாகோவ் [Sergey Pozdnyakov]. அவர் ஸ்வெஸ்டா யந்திர சாதனத் [Zvezda]  தொழிற்துறைக் கூடத்தைச் சேர்ந்தவர்.  அந்த தொழிற்துறைக் கூடமே ரஷ்ய விண்வெளிச் சிமிழ் இயக்கும் விமானிகளுக்கு உயிர் காப்புச் சாதனங்கள் [Life Support Systems for Human Space Flights] தயாரிக்கும் பொறி நுணுக்கக் கூடம்.

இந்தியா தனது விண்கப்பல் விமானிகட்கு வேண்டிய விண்வெளி உடைகளை, மற்றும் உயிர் காப்பு ஏற்பாடுகளை ஒருபுறம் விருத்தி செய்து வருகிறது.  2022 ஆண்டில் மூவர் இயக்கும் விண்சிமிழ் தயாரித்துச் சோதனை செய்யத் தருணம் அதிகம் இல்லாததால், ரஷ்யத் தொழிற்துறை நிறுவகத்தை நாடியுள்ளது. அதற்காக இந்திய அரசாங்கம் சுமார் 1.3 பில்லியன் டாலர் [2019 நாணய மதிப்பு] நிதி ஒதுக்கி வைத்திருப்பதாக அறிவித்தது.

Image result for india's first human space flight

1984 இல் ரஷ்ய விண்ணூர்திப் பயண விமானி 

Space Capsule Gaganyaan to carry three Astronughts

++++++++++++++

http://www.cbsnews.com/videos/scientists-say-theres-water-underneath-the-moons-crusty-surface/
http://www.onenewspage.com/video/20170724/8525368/Interior-Of-The-Moon-May-Contain-Water.htm
https://astrogeology.usgs.gov/geology/moon-pyroclastic-volcanism-project

+++++++++++++++

2018 ஆகஸ்டு 15 இல் சுதந்திர தின விழாவன்று பிரதமர் மோடி, இந்திய விண்வெளித் தேடல் மையம்  2022 ஆண்டுக்குள் மனிதர் மூவர் இயக்கும் விண்வெளிச் சிமிழ் ஒன்றை ஏவி, பூமியைத் தணிந்த சுற்றுப் பாதையில் சுற்றிவரும் என்று ஆரவாரத்துடன் அறிவித்தார்.  ஏழாண்டுகள் விருத்தியாகித் தயாரிக்கப்படும் அத்திட்டத்துக்கு நிதி ஒதுக்கு ரூ. 12,400 கோடி. [1.8 பில்லியன் டாலர்].   அதற்காக உருவாகும் புதிய விண்சிமிழின் பெயர் : ககநியான் [Gaganyaan].

Cosmonaut Rakhesh Sharma

2007 ஆண்டில் இத்திட்டப் பயிற்சிகள் ஆரம்பமாயின.  அதற்காக முதல் மாடல் 600 கி.கிராம் பளுவுள்ள குழுவினர் சுமக்கும்  சிமிழைத் துருவத் துணைக்கோள் ஏவும் [Polar Satellite Lauch Vehicle (PSLV Rocket] ஏவுகணை தூக்கிச் சென்றது.  அது பூமியைத் தணிவு சுற்றுப்பாதையில் சுற்றிவந்து, 12 நாட்கள் கடந்து மீண்டது.  அதைத் தொடர்ந்து 2018 இல் அடுத்த குழுச்சிமிழ் புவியின் பயங்கர  மீள் நுழைவு விளிம்பில் [Re-entry] பாதுகாப்பாக இயங்கி வெற்றிகரமாக மீண்டது.  இந்த நுட்பமான விண்வெளிப் பயிற்சி இந்தியாவுக்கு வெப்பத் தவிர்ப்புக் கவச உலோகங்கள் [Heat Resistant Material] விருத்திக்கும், மனித விமானிகள் பாதுகாப்பாய் மீள்வதற்கும் உறுதி அளித்தது.

Space Capsule with Escape Tower

“India will send into space — a man or a woman — by 2022, before that if possible,” Modi said in a marathon address at the Red Fort in New Delhi for the country’s Independence Day, August 15, 2018.

மனித இயக்கு விண்சுற்றுச் சிமிழில் பயணம் செய்ய 200 பேர் சோதிக்கப் பட்டதில் 4 பேர் தேர்வானர்.   விண்வெளி விமானிகள் பயிற்சி பெறத் தற்போது ரஷ்ய விண்வெளிப் பேரவை வசதி பண்ணித் தருகிறது.  உலகிலே ரஷ்ய, அமெரிக்க நாடுகளுக்குப் பிறகு சைன விண்வெளி விமானிகளே இதுவரைப் புவியைச் சுற்றி வந்துள்ளார்.  இந்திய விண்வெளித் தேடல் மையம் செய்துள்ள திட்டப்படி, ஶ்ரீகரி கோட்டாவிலிருந்து ஏவுகணை [GSLV MK III ROCKET] மூவர் இயக்கும் ககநியான் விண்சிமிழைத் தூக்கிச் சென்று 16 நிமிடங்கள் கழித்து, பூமிக்கு மேல்  300 கி.மீ – 400 கி.மீ. [180 மைல் – 240 மைல்] உயரத்தில் சுற்றிவர விட்டுவிடும்.  சில நாட்கள் சுற்றி வந்து, விண்சிமிழ் வங்காள விரிகுடாவில் பாராசூட் குடைகள் தாங்கி விழும்.

++++++++++++++++

+++++++++++++++++

நிலவின்  நீர்மயக் கரும் படிவுகள் பல தளங்களில் பரவியுள்ளன. அவற்றிலிருந்து தெரிவ தென்ன ?  அப்பெலோ -15 & -17 பயணத்தில் அமெரிக்க விண்வெளி விமானிகள் கொண்டு வந்த நீரியல் மாதிரிகள் ஒருதடவை நேர்ந்தவை அல்ல.  நிலவின்  எரிமலைக் கரும்படிவு மாதிரிகள்  [Lunar Pyroclastics] யாவும், நிலவின் உட்தள நீர்மயச் செழுமையைக் காட்டுகின்றன.

ரால்ஃப்  மில்லிக்கன் [பிரௌன் பல்கலைக் கழகத் துணைப் பேராசிரியர், தலைமை ஆய்வாளர்]

அப்பொலோ மாதிரிகள் நிலவின் உட்தளம் வெளியேற்றிய எரிமலைச் சாம்பல்கள்.  அவை ஆழ்ந்து சோதிக்கப் பட வேண்டியவை. ஆனால் சோதிக்கப் படாதவை.  ஏறக்குறைய மாதிரிகள் அனைத்தும் நீர்த்தடம் உள்ளதாகக் காட்டியுள்ளவை. ஆதலால் நிலவின் உட்தளம் ஈரமானது என்பது இப்போது ஆய்வு மூலம் அறியப் படுகிறது.

ரால்ஃப்  மில்லிக்கன் [பிரௌன் பல்கலைக் கழகத் துணைப் பேராசிரியர், தலைமை ஆய்வாளர்]

நிலவின் உட்தளத்தில் நீர்மய இருப்புக்கு  மிகுந்த ஆதாரங்கள், எப்படியோ சந்திரனில் நீர் வெள்ளம் நீடித்துப் பிழைத்துள்ளது என்பதைக் காட்டுகின்றன.  மோதலில் தோன்றிய நிலவை, முரண்கோள், வால்மீன்கள் தாக்கி நீர் மேவி உடனே உறைந்து போயுள்ளது.  நிலவின் உட்பகுதியில் எப்படி நீர்வெள்ளம் புகுந்தது என்பதுதான் நமது இப்போதைய பெரிய கேள்வி !

சூவாய் லி  : நிலவு உட்தள நீர்மயத் துணை ஆய்வாளர்

நிலவின் குளிர்ந்த துருவங்களில் உள்ள  ஒளிமறைவுக் குழிகளில் நீர்ப்பனிக்கட்டிகளை விண்ணுளவிகள் படமெடுத்துள்ளன. ஆனால் நிலவின் மேற்தளத்தில் காணும் எரிமலைச் சாம்பல் படிவுகளை [Pyroclastic Deposits] எடுத்து ஆய்வு செய்வது எளிது. எதிர்கால விண்வெளி விமானிகட்கு பூமியிலிருந்து ஏராளமான தண்ணீர் பாட்டில்கள் கொண்டு வருவதைத் தவிர்க்கும் எந்த நீர்மயக் கண்டுபிடிப்பும் ஒருபெரும் முன்னடித் தடவைப்பே !  எமது ஆய்வு விளைவும் ஒரு புதிய மாற்று வழியைக் காட்டுகிறது.

சூவாய் லி  : நிலவு உட்தள நீர்மயத் துணை ஆய்வாளர்

[Click to Enlarge]

நிலவின் தளம் மீது நீர்மயப் பாறைகள் கண்டுபிடிப்பு

நிலவின் குளிர்ந்த துருவப் பகுதிகளில் உள்ள ஒளிபுகா உச்சக்குளிர் ஆழக் குழிகளில் [Shackleton Crater in South Pole] பேரளவு நீர்ப்பனிக் கட்டிகள் இருப்பதை நாசா விண்ணுளவி [Lunar Reconnaissance Orbiter (LRO)], இந்திய விண்ணுளவி சந்திரியான் -1 ஆகிய இரண்டும் கண்டுபிடித்துள்ளன.  இந்த நீர்வளம் நிலவிலிருந்து திரவமாய் எடுக்கப்பட்டால் அம்முயற்சி சிக்கன முறையில் எதிர்கால அண்டவெளிப் பயணங்கள் தொடர்ந்து திட்டமிடப் பேருதவி புரியும்.

அந்த உச்சக்குளிர் ஆழ்குழியில் எத்தனைத் டன்  நீர்ப்பனிக் கட்டிகள் உள்ளன என்று தெரியாது.  ஆழ்குழி முழுவதும் நிரம்ப வில்லை. சாக்கிள்டன் ஆழ்குழி 12 மைல் [20 கி.மீ.] விட்டம் உள்ளது, 3 மைல் [4.4 கி.மீ.] ஆழம் கொண்டது.  அது நிலவில் உள்ள மிகப்பெருங்குழி என்று அறியப் படுகிறது.  நிலவின் வட துருவ  ஆழ்குழிகளில் ஒளிந்து கொண்டிருக்கும் நீர்ப்பனிக் கட்டிகளில் சுமார் 600 மில்லியன் மெட்ரிக் டன் நீர் வெள்ளம் இருப்பதாகக் கணிக்கப் படுகிறது.  அந்த நீர்க் கொள்ளளவை மின்சாரம் மூலம் பிரித்தெழும் வாயுக்களைத் திரவ ஹைடிரஜன்/ திரவ ஆக்சிஜென் ஆக மாற்றினால் 2200 ஆண்டுகளுக்கு தினமொரு விண்வெளி மீட்சிக் கப்பலை [NASA Space Shuttle] ஏவிட முடியும்.  விண்வெளிப் பயணத்தின் போது விமானிகள் குடிக்க ஏராளமான நீர்ப்புட்டிப் பாட்டில்களை மிகுந்த செலவில் சுமந்து செல்ல வேண்டாம். விண்வெளி விமானிகள் தங்கவும், ராக்கெட் எரிசக்தியை மீண்டும் நிரப்பிக் கொளவும் நிலவுக் குடியிருப்புக் கூடாரங்கள் நிறுவ ஏதுவாக இருக்கும்.

“நிலவின் ஆழ்குழிப் பனிப் பாறையிலிருந்து நீரை எப்படி வெளியேற்றுவது என்பதே முக்கியப் பிரச்சனை !  இது பொறிநுணுக்க நிபுணருக்கு முதலில் தீர்க்க வேண்டிய ஒரு சவாலாக இருக்கும்.  நிலவின் நீரை அறுவடை செய்து பயன்படுத்த இன்னும் நீண்ட காலம் ஆகலாம்.  முதலில் நீர் நிலவில் எப்படித் சேர்ந்தது என்பதை அறிவதே அதைச் சேமிக்க ஏறும் முதற்படி.

டெட்லெஃப் கோஸ்சினி (ESA Chandrayaan -1 Project Scientist)

“நிலாவில் நீர் இருப்பதாக நாசா உறுதி செய்திருக்கிறது.  விண்வெளித் தேடலுக்கு வேண்டிய குடிநீர், மற்றும் மனிதர் சுவாசிக்க ஆக்ஸிஜன், ராக்கெட் எரிசக்திக்குப் பயன்படும் எரிவாயு ஹைடிரஜன் போன்ற முக்கிய தேவைகள் இருப்பதையும் நிரூபித்துள்ளது.”

மைக்கேல் வார்கோ (பிரதம நிலா உளவு விஞ்ஞானி, நாசா தலைமைக் கூடம்)

தகவல்:

Picture Credits : NASA & ESA The Hindu, ISRO & other Science Websites

1. Indian Space Program By: Wikipedia

http://www.thinnai.com/?module=displaystory&story_id=40811131&format=html(இந்தியத் துணைக்கோள் சந்திரனைச் சுற்றுகிறது)

3. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40811201&format=html(இந்திய மூவர்ணக் கொடிச் சந்திரனில் தடம் வைத்தது)

4. Times Now  India’s First Unmanned Mission on Moon [Oct 22, 2008]

5. BBC News : India Launches First Moon Mission [Oct 22, 2008]

6 Cosmos Magazine  The Science of Everything – India Counts Down to Lunar Mission [Oct 21, 2008]

7.  Chandrayaan-1 Enters Lunar Orbit Makes History [Nov 8, 2008]

8.  Latest News Chandrayaan Descends into Lower Orbit [Nov 11, 2008]

9  Chandrayaan-1 Successfully Reaches its Operational Lunar Orbit ISRO Repot [Nov 12, 2008]

10. Chandrayaan -1 Reaches Final Lunar Orbit [Nov 13, 2008] 36. Press Trust of India : Chandrayaan -1 Reaches Final Orbital Home [Nov 13, 2008]

11 India Mulls Using Nuclear Energy to Power Chandrayaan -2 (August 8, 2009)

12 The Search for Ice on the Moon Heats up By : Jeff Salton (August 2, 2009)

13 Space Spin – LRO, Chandrayaan -1 Team up for Unique Search for Water Ice By : Nancy Atkinson (August 19, 2009)

14 LRO & Chandrayaan -1 Perform in Tandem to Search for Ice on the Moon (August 22, 2009)

15 Hindustan Times – Indo-Asian News Service, Bangalore “India’s Lunarcraft Hunts for Ice on Moon with NASA Lunar Reconnaissance Orbiter (August 21, 2009)

16. IEES Spectrum Interview of G. Madhavan Nair Head of India Space Agency (June, 2009)

17 Indian Space Research Organization (ISRO) Press Release – ISRO-NASA Joint Experiment to Search for Water Ice on the Moon. (August 21, 2009)

18 ESA Moon Water Report – Hydrogen Offers a New Way to Study the Moon & The Moon Seen By Chandrayaan -1 (Oct 16, 2009)

19. National Geographic News – Moon Crash, New Maps to Aid Search for Lunar Water By : Anne Minard (June 17, 2009)

20.  Space Flight Now : NASA’s Smashing Way of Answering a Watery Question (June 17, 2009)

21. National Geographic News – Moon Crash to Put All Eyes on the Crater Cabeus A (Sep 11, 2009)

22  Water Found on the Moon By : Andrea Thompson (Sep 23, 2009)

23. Scientific American :  LCROSS Impact Plumes Containing Moon Water By : John Matson (Nov 13, 2009)

24 LCROSS Impact Data Indicates Water on the Moon By : Jonas Dina NASA Ames Research Center (Nov 11, 2009)

25.  National Geographic News – Water on the Moon Confirmed By NASA Crashes By : Ker Than (November 13. 2009)

26.  International – NASA Finds Water on the Moon (Nov 14, 2009)

27 Daily Galaxy : Moon Water : Will Lunar-Base Humans be Able to Drink it ? (Nov 14, 2009)

28 Wired Science : Lunar Impacter Finds Clear Evidence of Water Ice on the Moon (Nov 17, 2009)

29 https://jayabarathan.wordpress.com/2009/08/27/chandrayaan-1-and-nasa-lro-find-ice/ (இந்தியாவும் நாசாவும் நிலவின் துருவப் பகுதியில் நீர்க்கட்டி கண்டுபிடிப்பு) (ஆகஸ்டு 27, 2009)

30. ESA News – Hydrogen Offers a New Way to Study the Moon, Detlef Koschny, ESA Chandrayaan -1 Project Scientist (October 16, 2009)

31 Space.com – Moon Craters Could Be Coldest Place in Solar System By Andrea Thompson (September 18, 2010)

32. Daily Mail – Scientists Find Even More Evidence of Water on the Moon (July 22, 2010)

33. Space.com – Tons of Water Ice Found on Moon’s North Pole By Tarq Malik (March 1, 2010)

34. Space.com – Moon Crater Has More Water than Parts of Earth By Mike Wall (October 21. 2010)

35. Daily Galaxy – Craters of the Moon – Huge Reservoirs Discovered By Casey Kazan & Rebecca Sato (October 25, 2010)

36. https://www.technologyreview.com/s/428030/soviet-moon-lander-discovered-water-on-the-moon-in-1976/  [May 30, 2012]

37.  https://www.theverge.com/2017/7/24/16020132/moon-water-rock-samples-mining-missions  [July 24, 2017]

38.  https://www.sciencedaily.com/releases/2017/07/170724114125.htm  [July 24, 2017]

39.  https://www.scientificamerican.com/article/scientists-spot-water-rich-rocks-on-moon/?WT.mc_id=SA_DD_20170725  [July 24, 2017]

40. http://earthmysterynews.com/2017/07/27/scientists-spot-water-rich-rocks-on-moon/  [July 27, 2017]

41. https://en.wikipedia.org/wiki/Indian_Space_Research_Organisation [Augst 18, 2018]

42. http://www.spacedaily.com/reports/India_to_send_manned_mission_to_space_by_2022_Modi_999.html  [August 15, 2018]

43..  https://indianexpress.com/article/explained/simply-put-how-to-send-an-indian-into-space-isro-maned-mission-5308964/  [August 16, 2018]

44. https://en.wikipedia.org/wiki/Indian_Human_Spaceflight_Programme  [Augut 18, 2018]

45. https://www.space.com/8043-india-boosts-space-budget.html

46. https://thenextweb.com/in/2018/08/15/india-will-launch-its-first-manned-space-mission-by-2022/

47. https://www.space.com/5967-designs-india-manned-spaceship-revealed.html

48. https://www.newsweek.com/india-will-send-first-manned-mission-space-2022-1274628

******************
S. Jayabarathan (jayabarathans@gmail.com) (August 18, 2019) [R-2]

Series Navigationகவிதைகள்மன்னிப்பு எனும் மந்திரச்சொல்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *