புலியோடு வசிப்ப தெப்படி ?

This entry is part 13 of 13 in the series 3 மே 2020
image.png

சி. ஜெயபாரதன், கனடா

புலியோடு வசிப்ப தென்று

இறுதியில்

உலக ஞானிகள்

உறுதி கொடுத்தார் ! 

வீட்டுக் குள்ளே புலியா ?

ஒரு  சில மாதங்கள்  உலகத்தார்

கிலியோடு

புலியோடு  தூங்குவார் !

மீளாத் தூக்கம் சிலர்

பெறுவார் !

நரக புரி இன்னும்

சொர்க்க புரி ஆகவில்லை !

புலிக்குப் பசித்தால்

புல்லைத் தின்னா தென்பது

எல்லாரும் அறிவர்  !

கிலி பிடித்து மாந்தர்

நித்தம் நித்தம்

சித்தம் கலங்கி, பித்துப் பிடித்து

தூங்காமல் தூங்கி

சுகம் பெறுவாரா ?

நாடடங்கு, ஊரடங்கு,

வீடடங்குச் சட்ட

விதிகளை

இன்னும் ஏற்போம், மீறோம் !

ஆட்கொல்லி  அழிவுக்கு

ஊசி மருந்து

ஒருநாள் கண்டறிவார் !

அதுவரை  புலி

உன்னோடு படுத்திருக்கும் !

தொற்றிக் கிருமி  உனைப் பற்றி

ஒட்டா திருக்கத்

தூரமாய்

எட்டடி தள்ளி நில் !

மூக்கு வடிகட்டித் தெருவில்

நடமாடு !

செல்வீக மாந்தர் நாட்டில்

இல்லாருக்  குதவி

செய்வீர் !

உடல்நலங் கொடுப்போர் தேவை

இப்போது.

விடிவு காலம் வரும் !

++++++++++++++++ 

Series Navigationதக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *