விடுதலை. வெள்ளையனுக்கு !

This entry is part 1 of 7 in the series 14 ஜூன் 2020
image.png

விடுதலை

வெள்ளையனுக்கு !

சி. ஜெயபாரதன், கனடா

ஆபே லிங்கன்

நூறாண்டு முன்பு உள்நாட்டுப்

போரில்

வெற்றி பெற்று

விடுதலை கிடைத்தது

வேறான

கறுப்பினத் தாருக்கு !

தோல்வி யுற்றுச்

சீறிக் கொண்டிருந்த

தென்னகக் கோமான்கள்,

ஆறாத

நூறாண்டுப் புண்ணை

ஆற்றிக் கொள்ள

அடக்கப் பட்ட முதலைகள்

இப்போது

துப்பாக்கியில் சுட்டுப் பழிவாங்க

எழுந்து விட்டார்,

வெள்ளை யனுக்காக

நேரிடைப்

போரின்றி !

இந்த ஊமைப் போருக்கு

அந்த மில்லை

எந்தக் காலத்திலும் !

இப்போது ஒளிந்து கொண்டு

விடுதலை கொடுப்பது,

வெள்ளையனுக்கு !

கொடுப்பவர்

வெள்ளை மாளிகை

மோசஸ் !

++++++++++++++++++++++

Series Navigationசொல்வனம் இணையப் பத்திரிகையின் 224 ஆம் இதழ்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *