ஒரு விதை இருந்தது

author
0 minutes, 2 seconds Read
This entry is part 10 of 21 in the series 2 ஆகஸ்ட் 2020

ஆரா

3030 , ஆம் ஆண்டு ,
———
அறை இருட்டாக இருந்தது
தேவையான போது தான்  ஜன்னல் (யென்னல்)திறக்கப்படும்
சூரியன் மங்கி வருதலால் வெளிச்சம் மட்டுப்படுத்தி
வாழ மக்கள் பழக்கப்படுத்தபட்டுவிட்டனர்
எண்கள் தான்  பெயர்கள் எண்கள்  ஆண்களுக்கு
ஒற்றைப்படையில் பெண்களுக்கு  இரட்டைப்படையில்
(கே  1)   k 1 ( thalaivar president ),பெருந்தலைவர்
k 2  )) thalaivi  –  பெருந்தலைவி
இருவருக்கும் சமபொறுப்புகள்
கடைசி  ரசாயன  யுத்தத்தில் உலக நாடுகள்
பயனற்று சாம்பலாயின
இவர்கள்  செவ்வாயிற்கு வந்து 300 ஆண்டுகள் கடந்து விட்டன
தண்ணீரைக்கண்டுபிடிக்க வெகு நாளானது வந்த ஆயிரம்
பேரில் எஞ்சியவர்கள்  100பேர்தான்
அதில் ஆண்கள்  80 பேர் பெண்கள் 20பேர்
குழந்தைகள் உட்பட இந்த கணக்கு
சுப்பீரியர் குழந்தைகளை  அறிவியல் மூலம்  பெற்றல் கட்டாயமாக்கப்பட்டது
அவர்களில்  ஐந்து சுபீரியர் குழந்தைகள் இருந்தனர்
பிறர் எல்லாம் ஆண் விந்துகளை சுமக்கும் தாய்கள் மூலம் பிறந்தவர்கள்
சுபீரியர் குழந்தைகள் மரத்தின் வேர்களை வெட்டி எடுத்து
அதை விந்து அணுக்களுடன்  கலந்து செறிவூட்டி  தாய்மார்களினால்
உற்பத்தி செய்யப்பட்டனர்
அது கடினமான செயற்கை ஆதலால்  வெகு சில குழந்தைகளே
பிழைத்தனர்  அவை சுப்பீரியர் குழந்தைகள் அவைகளுக்கு இரத்தம்
இல்லை அதற்கு பதிலா பிசின் வரும் அதுவும் காயம்பட்டால் உடனே
ஆறி விடும் அந்த பிசின் நாட்டின் பெரிய வரம் அதனால் அதை பொக்கிஷ அறைகளில்
ரகசியமாக வைத்து அவர்கள் காத்தனர்
எப்போதும் மரங்களுக்கு  பெரிய காவல் இருந்தது
மரங்களை கண் போல்காத்தனர்
பத்து மரங்களே எஞ்சி இருந்தன
அந்த சுப்பீரியர்  குழந்தைகள் மட்டுமே  பருவமான பின்
பெண்களை க்கூடி சுப்பீரியர் மகவுகளை பெற முடியும்
அந்த க்குழந்தைகளை  கே 1  கே 2  தத்து எடுத்து வளர்த்தனர்
எங்கும் வைரங்கள் தங்கம் இருப்பினும் பயன் படாக இல்லை
வணிகம் ஒழிந்து விட்டது  தனக்கு தேவைஎனில்  அரசுக்கு
சேவகம் செய்யவே உணவு ரேசனில் தரப்பட்டது
3030 ஆகஸ்டு மாதம்,,,,,,,
ஆகஸ்டு முதல் நாள் அவர்கள் வாழுமிடத்தில் இருந்து
ஆயிரம் நாட்டி கி மீ ல்  புயல் உருவானது
மணல் புயல் அது விரைந்து வர வர இவர்களுக்கு அச்சம்
மிகுந்தது  பெரும்பயம்    அதாவது  கே 1 கே 2 க்கு ஏற்பட்டது
அந்த ஐந்து குழந்தைகளுடன்  பதுங்கு அறையில் இருந்தார் கள்

புயல் அடங்க  இரண்டு நாளானது
தங்குமிடம்  பதுங்கு அறை எல்லாம் சின்னா பின்னம்
யாருமே காணவில்லை  ஐந்து பேரில் 3 பேர்  இறந்து விட்டனர்
சூரியன் வெளிச்சமே இல்லை
வெளிறிய மங்கல் ஒளியில் இரு  குழந்தைகளுடன்
கே 2 உடன் மரங்களை காண ஓடினார்
அங்கு மரங்களே காண வில்லை யாவும் அழிந்து போயின
அவை எங்கு  போயின என தெரிய வே இல்லை
நல்ல வேளை  சுப்பீரியர் குழந்தைகள் இருவரும் ஆண் குழந்தை ஒன்று 16 வயது
பெண் குழந்தை 16  வயது  விளையாடிகொண்டு இருந்தனர்
அவருக்கு அழக்கூட கண்ணில் நீர் இல்லை
பதப்படுத்திய உணவு இன்னும் ஒரு வருடம் வரும்
கையில் பிடித்து கொண்டு படுக்க இடம் தேடி பதுங்கு குழியில்
குதித்தனர்   சிறுவன்  எஸ் 1  சிறுமி  எஸ் 2
சிறுவன் கையை இறுக்கமாக மூடி இருந்தான்
அதைப்பிரித்தாள் சிறுமி
வியந்தார் கே1  
அவன் கையில் ஒரு மரத்தின் விதை இருந்தது ??
—————————————————————————————-

செவ்வாய் சூரியன்  மறைய   த் தொடங்கினான்
00000000முடிவல்ல ஆரம்பம் 1111111111
——-ஆக்கம் ஆரா

Series Navigationகவிதை என்பது யாதெனின்வாழ்வின் மிச்சம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *