This entry is part 10 of 12 in the series 17 ஜனவரி 2021

வறுமையில் இருக்கும்

என்வயிற்றைக் காலியாக்குகிறேன்.

குதிரை கனைப்பு தளர்கிறது.

வயிறு காலியானால்

வாய் எல்லாம்

வேள்வி செய்யும்

ஒரு குவளை

மதுகொண்டு நிரப்பிப்பார்

தென்றலில் மயங்காமல்

தேடித்தேடிக் கொண்டுவா.

பல்லுயிர் ஓம்பப்பழகு.

யானையின் துதிக்கையில்

தானமாகும் தானியங்கள்

       களிறுகள் எப்போதும்

       அசைந்து அசைந்து

       வயிற்றை நிரப்பிக்கொண்டிருக்கும்.

அப்பொழுதும்

அவற்றின் கவனம்

அங்குசத்தின்மீதே இருக்கும்.

எல்லாமே தேடிப்பார்த்தால்

வயிற்றை நிரப்புவதே

வாய்ப்பான தொழில்

Series Navigationமொழிபெயர்ப்பு கவிதைகள் – ஜரோஸ்லவ் செய்ஃர்ட்அட கல்யாணமேதான் !