பாதி உயரத்தில் பறக்குது கொடி !

This entry is part 9 of 13 in the series 21 பெப்ருவரி 2021

image.png

 
 
 
 
சி. ஜெயபாரதன், கனடா
 
 
தெய்வீகத் திருக்குரல்
பைபிள் மீது
கைவைத்துப் படையினர், 
துப்பாக்கி  தூக்குவர்
தோள்மேல் !
அணிவகுக்கும்
அறப்படை முன்னால்,
பறக்குது கொடி  
பாதி உயரத்தில் பாரீர் !
 
வியட்நாம் மீது 
வீணாய்
அமெரிக்கா 
போர் தொடுத்த
அன்று முதல் !
அதன் பிறகு கொடி
ஏற வில்லை !
இறங்க வில்லை !
உறங்குது
நிரந்தரமாய் ! 
அடுத்த போர்க்களம் 
ஈராக்கு, சிரியா, நடுமை
ஆசியா ! 
குடிரசு எல்லாம் கூனிக்
கூர்மை மழுங்கி
தடி அரசாய் 
இடி நகை புரியும்
கலியுகம் !
முடி அரசாய் மீளும்,
முன்னிருந்த
தடத்தில் கால் வைத்து 
தொடர்ந்து விட்டது,
மூன்றாம்
புவனப் போர்
மடிவெடி 
ஆயுதப் போராய்.
 
 
=============
Series Navigationதிரைகடலோடியும்…வடக்கிருந்த காதல் – முதல் பாகம்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *