நரகமேடு!

author
0 minutes, 0 seconds Read
This entry is part 19 of 23 in the series 6 ஜூன் 2021
 

ரா.ஜெயச்சந்திரன்

தள்ளுபிடிகள் இரண்டும்

வெள்ளைக் கரங்கள் இன்றி

இரும்பாகவே;தள்ளியே……



அகிலத்திற்கும் சக்கர நாற்காலி;

அவ்வைக்கோ நகர்வுயிருக்கை!


மடியில், கைப்பிடியில்

உணவுப் புதையல்!


அமர்ந்தும், அமராமலும்

கட்டை, குட்டை விரல்கள் நொடித்து

நிலத்தில் பதித்து

காலலைகள் அளந்து

கூனைக் குறுக்கி

உடற்கூட்டை உந்துகின்றாள்!


மூதாட்டியின் முகமாட்டும் வேகத்திலே

ஊர்கின்றது ரதம்,

நரகமேடு வரையில்……!
__

ரா.ஜெயச்சந்திரன்,
போடிநாயக்கனுர்.
 
 


 
 
Series Navigationதக்கயாகப் பரணி [தொடர்ச்சி]புகை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *