கலியுக அசுரப்படைகள்

This entry is part 6 of 18 in the series 29 ஆகஸ்ட் 2021
image.png

 

War Paintings by Pablo Picasso:
 
image.png
 
கலியுக அசுரப்படைகள்
 
சி.ஜெயபாரதன், கனடா
 
இருப தாண்டுப் போர்
இருபது நாட்களில் முடிந்தது.
தோற்று ஓடுபவை சூப்பர் 
வல்லரசுகள் !
ரஷ்யப் படையால்
வெல்ல முடிய வில்லை ! 
அணு ஆயுத
அமெரிக்கா, பிரிட்டன்
படை கொடுத்து, பணம் கொடுத்து,
ஆயுதம் ஈந்து
பயிற்சி அளித்து, 
பலனின்றிப், பல்லுயிர்
பலி கொடுத்து,
வலுவிழந்து,
ஓய்ந்து போய்ப்
பின்வாங்கின !
வென்றவர் 
துப்பாக்கி மூர்க்கர்,
கொள்ளை அடிப்போர்,
கொலைகாரர்,
பள்ளிக்குப் போகும்
பாவையர் முகத்தில்,
ஆசிடை வீசும்
அசுரக் கூட்டம் !
பெண்டிரை
அடிமை ஆக்கும்,
ஆப்கானிஸ் தானின்
அரக்கர் கூட்டம் !
 
===============
Series Navigationகுஜராத்: அசோகனின் கட்டளையும் அசோகனின் வைத்தியசாலையும்விடிந்த பிறகு தெரியும்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *