டாக்டர். கே.எஸ்.சுப்பிரமணியன்
*பாரதியின் பன்முகங்கள் பல்கோணங்கள் நூலிலிருந்து)
‘பைந்தமிழ்த் தேர் ̈பாகன், அவனொ ̧
செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத்தந்தை!
குவிக்கும் கதைக்குயில்! இந்நாட்டினைக்
கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு!
நீடுதுயில் நீக்க ̈ பாடிவந்த நிலா!
காடு கமழும் கற்பூரச் சொற்கோ!
கற்பனைஊற்றாம் கதையின் புதைய ̄ல்! திறம்பாடவந்த மறவன். புதிய
அறம்பாடவந்தஅறிஞன். நாட்டிற்
படரும் சாதி ̈ படைக்கு மருந்து!
மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்!
அ ̄யலார் எதிர்ப்புக் கணை ̄யா விளக்கவன்!
என்னென்று சொல்வேன், என்னென்று சொல்வேன்!”
– பாவேந்தர் பாரதிதாசன்
இருபதாம் நூற்றாண்டுத்தமிழ் இலக்கிய உலகில் ஒரு யுக புருஷனாக விளங்கிய பாரதியின் ஆளுமை குறித்து இருபத்தோராம் நூற்றாண்டைக் கட்டமைக்கும் பொறுப் புள்ள இளைஞர்களுடன் கருத்துகளை ̈ பகிர்ந்துகொள்வது பொருத்தமான முயற்சி என்று கருதுகிறேன். மேலும், புத்துலக விழிப்புக்கு ̈ பள்ளியெழுழுச்சிப் ̈ பண் பாடிய பாரதியின் படைப்பு மாட்சி, கருத்துப் பொருண்மை, உணர்ச்சி வீரியம் பற்றிய அறிமுகமும், அறிதலும், புரிதலும், உள்வாங்கலும் இளைஞர் சமுதாயத்துக்கு ̈ பெரிதும் பயன் அளிக்கும் என்பது என் நம்பிக்கை. இவை எனது இச்சிறு பணிக்கான உந்துசக்தி.
பாரதியின் படைப்புலகின் பண் ̈பும், வீச்சும், ஆழமும் பிரமிப் ̈பூட்டுபவை. அவன் ஆளுமை பன்முகப்பட்டது. இந்தப் பின்னணியில் அவனுடைய ஆளுமையின் ஓரிரு கூறுகளைத்தான் ஒ ̧ சிற்றுரையின் கருப்பொருளாகக் கொள்ள முடியும். கடினமான தேர்வு முயற்சி. இன்றைய சூழலின் பின்புலத்தில்தான் பொருளார்ந்த தேர்வு செய்ய இயலும். தன்னலம், குறுகிய குழுநலம், ஜாதிச் சார்பு, சமய வெறி, உக்கிரமான நுகர்வியல் தாக்கம் – இவை நமது சமூகக்களனை இன்று ஆக்கிரமிக்கும் எதிர்மறைப் பண்புகள். இந்நிலையில், அனைத்துலக நோக்கும் விழுமிய ஆன்மீக அடித்தளமும் சார்ந்த பாரதியின் மனிதநேயம், உரிய கருப்பொருளாக விளங்கும் என முடிவு செய்துள்ளேன். எனவே இந்தத் தலைப்பு – ‘பாரதியின் மனிதநேயம்’.
பாரதியின் இலக்கியப் பிரவேசத்தை இவ்வாறு படம்பிடித்துக் காட்டுகிறார் அவரது பிரதம சீடராம் பாவேந்தர் பாரதிதாசன்:
“தமிழரின் உயிர்நிகர் தமிழ்நிலை தாழ்ந்ததால்
இமைதிறவாமல் இருந்த நிலையில்,
தமிழகம், தமிழுக்குத் தகும் உயர்வளிக்கும்
தலைவனை எண்ணித் தவங்கிடக்கையில்
இலகு பாரதி ̈ புலவன் தோன்றினான்.”
“இவ்வாறு, ‘பாரதி யுகம்’ எனக் கூறப்படும் ஒரு புதிய இலக்கிய யுகத்தின் தோற்றுவாயாக விளங்கினான் பாரதி. பாரதியின் வாழ்வும் அவனது படைப்பு ஆளுமையும் ஒன்றுடன் ஒன்று பிசிறில்லாமல் ஒன்றிணைந்தவை. இன்றைய ̈ படைப்பாளிகள் பலரிடம் நாம் எதிர்கொள்ளும் பிளவுபட்ட ஆளுமையை பாரதியிடம் காண முடியாது. தன் படைப்பு ஆளுமையின் அடிநாதத்தை அவன் எவ்வாறு கண்டான் என்பது அவனது மனித நேய அஸ்திவாரத்தை உணர்த்தும் சாளரமாக விளங்கக் காணலாம். விழலுக்கு இறைத்த நீராகத் தன் பணிவாழ்வு விரயமாவதை வெறுத்தான் பாரதி. சிவசக்தியிடம் இறைஞ்சுகிறான்.
“நல்லதோர் வீணைசெய்தே –அதை
நலங்கெடப் ̈ புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி, சிவசக்தி! –எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய் ́.
வல்லமை தாராயோ –இந்த
மாநிலம் பய ̄னுற வாழ்வதற்கே?
சொல்லடி சிவசக்தி! – நிலச்
சுமையென வாழ்ந்திடல் புரிகுவையோ?”
_அவன் வல்லமை வேண்டினான். எதற்கு? இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கு.
“எள்ளத்தனை ̈ பொழுதும் பயனின்றி இலாது என்றன் நாவினிலே வெள்ளமென ̈ பொழிவாய்” என சக்தியை வேண்டுகின்றான். “நாட்டு மக்கள் பிணியும் வறுமையும் நையவும், கூட்டி மானுடச் சாதியை ஒன்றெனக்கொண்டு வையம் முழுதும் இன்பமும் கற்பனை விந்தையும் ஊட்டி எங்கும் உவகை பெருகிட ஓங்கும் இன்கவி ஓதவும், நாட்டு மக்கள் நலமுற்று வாழவும், நானிலத்தவர் மேனிலை எய்தவும், பாட்டிலே தனி இன்பத்தை நாட்டவும், பண்ணிலே களி கூட்டவும்” பராசக்தியிடம் விண்ணப்பிக்கிறான். இந்த மேற்கோள்களிலிருந்து அவன் கவிதையின் மனிதாய உந்துசக்தி தெள்ளென வெளிப் ̈படுகிறது. பாரதியின் வாழ்வு ஒரு நிவேதன வாழ்வு. மக்கள் நலம் என்ற கழனியில் தன் வாழ்வை எருவாகப் படைக்கிறான்.
“நெஞ்சு கு ̧ருதியை ̄ நிலத்திடை வடித்து
வஞ்சக மழிக்கும் மாமகம் புரிவம் ̄யாம்.
வேள்வியில் இதுபோல் வேள்வி யொன்றில்லை;
தவத்தினில் இதுபோல் தவம் பிறி தில்லை.”
என்ற சூளுரை அவனது உள்ளத்து உண்மை ஒளியிலிருந்து முகிழ்த்தெழும் வெளிப்பாடு.
தன் இஷ்டதெய்வங்களிடம் உரிமையுடன் வரம் கேட்கும்போது, மக்களும், நாடும், சமூகமும் அவனது தொழுகைக்களத்தை நிரப்புகின்றனர். க ̧ணை ̈ பால் சுμக்கும் இந்த வேண்டுகோளைக் கேளுங்கள்:
“ஞானாகாசத்து நடுவே நின்று நான்
பூமண்ட லத்தில்அன்பும் பொறையும்
விளங்குக; துன்பமும், மிடிமையும், நோவும்,
சாவும் நீங்கிச் சார்ந்தபல் லுயிரெலாம்
இன்புற்றுவாழ்க’ என்பேன்! இதனை நீ
தி ̧ச்செவி கொண்டுதி ̧வுளம் இரங்கி
‘அங்ஙனே ஆகுக’ என்பாய் ́ ஐ ̄யனே!””
மனித நேயத்தில் இனிய வார்ப்படம் இக்கவிதை.
பாரதியின் மனித நேயம் அறிவு, உணர்வு, பரிவு சார்ந்தது மட்டுமல்ல. அவனது ஆழமான, அர்த்தமுள்ள ஆன்மீக அடித்தளம். பாரதியின் ஆன்மீகம் வறட்டுச் சித்தாந்தச் சூத்திரங்களின் உதட்டளவு முணு முணுப்பின் பாற்பட்டதல்ல. பாரத நாட்டின் தொன்மை ̄யான ஆன்மீகக் கருவூலங்களின் சாற்றைக் கிரகித்து, புத்துலகத் தேவைகளுடன் அதனை இணைத்து, அவன் ஆற்றிய ரஸவாதத்தின் திரட்சிதான் அவனது ஆன்மீகம். வேதம், மண்ணும், காற்றும், விண்ணும் புணர்ந்து ஈன்றெடுத்த உயிர்த்துடிப்புள்ள மகவு. அண்டம் தழுவிய இறையியல் பாரதியுடையது. அவன் இறையியலில் கடுகுள்ளச் சார்புக்கோ, அறிவை அடகு வைக்கும் அசட்டுத்தனத்துக்கோ இடமில்லை. அவன் உலகில்.
“தெய்வம் பலபல சொல்லி
பகைத்தீயை வளர்ப்பவர் மூடர்;
உய்வதனைத்திலும் ஒன்றாய்
எங்கும் ஓர் பொருளானது ‘தெய்வம்’.
அனைத்துச் சமய நல்லிணக்கம் அவனுக்கு இ ̄ல்பாகவே வாய்த்தது.
“தீயினைக் கும்பிடும் பார்ப் ̈பார் –
நித்தம் திக்கை வணங்கும் துருக்கர்,
கோயிற் சிலுவையின் முன்னே- நின்று
கும்பிடும் யேசு மதத்தார்
_ யாவரும் பணிந்திடும் தெய்வம் –பொருள்
யாவிலும் நின்றிடும் தெ ́ய்வம்,
பா ̧ருக்குள்ளே தெய் ́வம் ஒன்று-இதில்
பற்பல சண்டைகள் வேண்டாம்.””
என்கிறான். இது இன்றைய சூழலுக்கு உகந்த அருமருந்து. பாரதியின் கடவுள், அவனை ஆட்கொண்ட சக்தி, மண்ணுடனும், மனிதனுடனும், வாழ்வுடனும் பிணைந்து உரமூட்டும் ஒன்று. இதோ அவனது சக்தியின் ஆளுமையின் கூறுகள்;
அன்பு கனிந்த கனிவு; ஆண்மை நிறைந்த நிறைவு; இன்ப முதிர்ந்த முதிர்வு; எண்ணத்தி ̧க்கும் எரி; சொல்லில் விளங்கும் சுடர்; சோமர் கெடுக்கும் துணிவு; வாழ்வுபெ ̧க்கும் மதி; வீழ்வு தடுக்கும் விறல்; விண்ணை அளக்கும் விரிவு; உள்ளத்தொளிரும் விளக்கு; ஒண்மையும் ஊக்கமும் ஊறிடும் திருவருட் சுனை. மானிடத்துக்கு உயிரூட்டும் மாண்புகள் சுருள்சுருளாக விரிகின்றன.
பாரதி ஒரு விடுதலை உபாசகன். நாட்டின் அரசியல் விடுதலையில் அவனுக்கு ஆழ்ந்த ஈடுபாடு. ஆனால் வேற்றூர் ஆண்டானை நீக்கி விட்டு உள்ளூர் ஆண்டானை அரிய ணையில் ஏற்றுவது மட்டும் அல்ல விடுதலை. அவன் விடுதலைத் தேட்டம் மண் சார்ந்தது மட்டும் அன்று; மக்கள் சார்ந்தது; சமூக நீதி சார்ந்தது; பொருளாதார நேர்மை சார்ந்தது; உள்ள விசாலம் சார்ந்தது; புதுமை வேட்கை சார்ந்தது; ஒட்டுமொத்தமான மனிதநேயம் சார்ந்தது.
“பொ ய்மை தீர மெய்ம்மை நேர
வருத்த மழிய ̄ வறுமை யொழிய ̄
வை ̄ய முழுதும் வண்மை மொழி ̄ய
வேண்டுமடி எ ப்போதும் விடுதலை அம்மா””.
இதுவேஅவன்கண்டவிடுதலை இலக்கணம்.
பாரத நாட்டினரின் அவலநிலையைக் கண்டு, ’நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்துருக’ கவிதைக்கண்ணீர் உகுக்கிறான் பாரதி:
‘நெஞ்சு பொறுக்குதிலையே –இந்த
நிலை கெட்ட மனிதரை நினைந்துவிட்டால்””
கஞ்சி குடிப் ̈பதற்கிலார்
அதன் காரணங்கள் இவையெ ̄ன்னும் அறிவுமிலார்
பஞ்சமோ பஞ்சம் என்றே – நிதம்
பரிதவித்தே உயிர் துடிதுடித்தே
துஞ்சி மடிகின்றார் – இவர்
துய ̄ர்களைத் தீர்க்கவோர் வழியிலை’
அவன் கண்ட விடுதலை தர்மாவேசத்துடன், காலங்காலமாக ́ இறுக்கிக்கொண்டிருக்கும் பல விலங்குகளை உடைக்கிறது. அவன் சுதந்திரக் கனவு நனவாகும்போது அவன் எண்ணத்திரையில் விரியும் காட்சி: பள்ளர் களியாட்டம்; அவனது ஆனந்தகீதம்; சுதந்திரப் ̈ பள்ளு; தீண்டத்தகாத புலையராய், சமூகத்தால் ஒடுக்கிவைக்கப்பட்டுள்ள இனங்களின் மேம்பாட்டையே வளமையையே உண்மைச் சுதந்திரமாகக் கண்டான் பாரதி. இந்த உண்மைச் சுதந்திர விடியலுக்கு ̈ பின், ’எல்லோரும் சமமென்பது உறுதியாகும்; பொய்யும் ஏமாற்றும் தொலையும்; உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனையும். வீணில் உண்டு களிப்போருக்கு நிந்தனையும் நடப்பு இலக்கணமாக ஆகும்.
மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கத்தைக் கண்டு வெகுண்டான் பாரதி. இவன் ஜகங்கள் உணவு தரும்; இல்லேல் உடைபடும்.’ அநீதியை ̄ச் சாடும் வீரியத்தைத் தமிழ் மக்களுக்கு ̈ பரிந்து ஊட்டினான்
“பாதகஞ் செய்பவரைக் கண்டால்- நாம்
பய ̄ங்கொள்ள லாகாது பாப் ̈பா!
மோதி மிதித்துவிடு பா ப்பா! – அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப் ̈பா!””
என சின்னஞ் சிறார்க்கு வீரிய வாசகங்களை ஆவலுடன் வழங்கினான். சாதிவெறியின், சாதி சார்ந்த காழ்ப்புணர்வுகளின் வெம்மை நம்மைத் தீண்டித் துன்புறுத்தும் இன்றைய சூழலில், ‘பொய்மைச் சாதி வகுப்பினையெல்லாம் தகர்’ என்ற பாரதியின் சூளுரை ,உகந்த அறிவுரை.
“மேலவர் கீழவரென்றே-வெறும்
வேடத்திற் பிற ̈ப்பினில் விதி ப்பனவால்
போலிச் சுவடியை யெ ̄ல்லாம் –இன்று
பொசுக்கிவிட்டாலெவர்க்கும் நன்மையுண்டு.”
என்பது அவன் துணிபு.”
“சாதிக்கொடுமைகள் வேண்டாம் –அன்பு
தன்னில் செழித்திடும் வை ̄யம்;
ஆதரவுற்றிங்கு வாழ்வோம் –தொழில்
ஆயிரம் மாண்புறச் செ ́ய்வோம்.””
என்ற பாரதியின் அறைகூவல் இன்றைய தமிழகச் சூழலில் அத்தியாவசியமாக விளங்குகிறது.
மனிதநேயத்தின் ஒரு மிக முக்கியமான கூறு பால்-சார் நீதி- gender justice. இந்திyap ̄ ̈ பெண்ணுலகத்தின் அவலம் பாரதியின் இதயத்தை, உணர்வை ஆழமாகத் தீண்டியது. பெண்ணுரிமை குறித்த பிரச்சினைகளை ஒரு தாயின் பரிவுடனும் ஒரு தந்தையின் பொறுப்புணர்வுடனும், தன் தங்கைக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டு வெகுண்டெழும் ஓர் அண்ணனின் அறச்சீற்றத்துடனும், நெடுநோக்குள்ள நாட்டுத்தலைவனின் மனிதாபிமானத் துடிப்புடனும் அணுகுகிறான் பாரதி.
பெண்ணின் அங்கங்களைப் ̄ பார்த்துக்கொண்டிருந்த புலவர்களுக்கிடையே பெண்ணின் ஆன்மாவைத் தரிசிக்கிறான் பாரதி. காலங்காலமாக நாம் கதைத்துக்கொண்டிருக்கும் பொய்ம்மை ̈ பண்புகளை உமிழ்ந்து தள்ளி, மூடக்கட்டுகளையும் பேரிருளாம் அறி யாமையையும் தகர்த்து எறி என்கிறான். பாரதியின் புதுமைப் ̈பெண்ணிடம் பகட்டான, ஆழமில்லாத நவீன ̈ பேச்சையோ, கொச்சையான ஆரவாரத்தையோ காண முடியாது. அவள் அறிவின் கனலி; இதய விசாலத்தின் இருப்பிடம்; புதுமை அறப் பிரதிநிதி; பொறுப்பையும், செம்மையையும் பேணுபவள். அவளிடம் நாம் எதிர்கொள்வது நீதிச் சார்பு; உறுதி யான தன்னம்பிக்கை; அநீதியைச் சாடும் திறன்; வறட்டுத்தனமான, மூர்க்கமான ஆண் எதிர்ப்பு நிலைப்பாடு அல்ல.
“பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் – புவி
பேணி வளர்த்திடும் ஈசன்; மண்ணுக்குள்ளே சில மூடர்
மாதரறிவைக்கெடுத்தார்.”
என்று பெண்ணின் வீழ்ச்சியின் அடிப்படைக் காரணி ஒன்றை இனங்காட்டுகிறான் பாரதி. அச்சம், மடம், நாணம், பயிர் ̈பு என்ற எதிர்மறை ̈ பண்புகளை ̈ பல நூற்றாண்டுகளாக நம் பெண்களுக்கு அணிகலன்களாக, பொன்விலங்குகளாக இச்சமூகம் பூட்டி மகிழ்ந்திருக்கி றது.
“நாணு மச்சமும் நா ́ய்கட்கு வேண்டுமாம்
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்குடி பெண்ணின் குணங்களாம்””
என்று தமிழ் வரலாற்றில் முதன்முறையாக ̈ புதிய ̄ பாதை அமைத்தான் பாரதி.
“மாட்டைய ̄டித்து வசக்கித் தொழுவினில்
மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே
வீட்டினில் எம்மிடம் காட்டவந்தார், அதை
வெட்டிவிட்டோமென்று கும்மிய ̄டி.””
எனக்கூவி, தமிழ்நாடு முழுவதும் குலுங்கக் கும்மியடிக்கின்றனர் பாரதியின் பெண்கள்.
இன்றைய ̄ ̈ பெண்ணியவாதிகள் சிலரிடம் நாம் எதிர்கொள்ளும் முரட்டுத்தனமான ஆண் எதிர்ப்புக்கு பாரதியில் இடமில்லை. ஆணும் பெண்ணும் தோழமையுணர்வுடன், தோளோடு தோள் நின்று நீதியை நிலைநாட்டுவதை பாரதி விழைகிறான். தங்கள் விடுதலைக்காக ̈ பெண்கள் மதுக்கிண்ணம் மீது செய்யும் பிரதிக்கினை நம் சிந்தனையைத் தூண்டும் பாங்கில் உள்ளது:
‘திறமையாலிங்கு மேனிலை சேர்வோம்;
தீ ̄ய பண்டைஇகழ்ச்சிகள் தே ́ய்ப்போம்;
குறைவி லாது முழுநிகர் நம்மைக் கொள்வர்
ஆண்களெனிலவரோடும்
சிறுமை தீர நந் தாய்த்திரு ̧ நாட்டைத்
தி ̧ரும்ப வெல்வதில் சேர்ந்திங்குழைப்போம்.”
மனித நேயத்தின் ஒரு முக்கியமான பரிமாணம் ‘ ̄யாதும் ஊரே யாவரும் கேளிர்’. என்ற உலகம் தழுவிய கேண்மை. இக்கேண்மை பாரதிக்கு இயல்பாகவே சம்பவித்தது. அவன் உள்ளம் கடல் போல் விரிந்த உள்ளம்; அவன் பார்வை வான் போல் வளர்ந்த பார்வை. அவன் ஓர் உலகக் குடிமகனாக வாழ்ந்தான். உலகின் எந்த மூலையில் அநீதி நிகழ்ந்தா லும், அது அவன் சொந்தப் பிரச்சினை! எங்கு நீதி வென்றாலும் அது அவன் சொந்த வெற்றி! அறத்தின் பிடிப்புடன், மானத்தின் முனைப்புடன், துணிவின் துணையுடன் போரிட்டு வீழ்ந்தது பெல்ஜிய நாடு அன்று. அந்நாடு பாரதியிடமிருந்து பெற்றது இரங்கற்பா அல்ல; வாழ்த்துக் கவிதாஞ்சலி!
அறத்தினால் வீழ்ந்துவிட்டாய் ́;
அன்னிய ̄ன் வலி ̄யனாகி
மறத்தினால் வந்து செய் ́த
வன்மையைப் ̄ ̈ பொறுத்தல் செ ́ய்யாய் ́;
முறத்தினால் புலியை ̄த் தாக்கும்
மொ ́ய்வரைக் குறப்பெண் போல
வக்ஷிμக்குற ̈பெண் போலத்
திறத்தினால்எளியையாகி
செ ́ய்கையால் உய ̄ர்ந்து நின்றா ́ய்”
“என்று புகழ்மாலை சூட்டுகிறான்! பாரதியின் விழுமிய உலகக் கண்ணோட்டம் ‘சொல்லினைத் தேனில் கலந்துரைக்கும் பாங்கில் நம்மை நோக்கி வந்து நம்மைத் தழுவுகிறது.
இதோ பாரதி.
“பாருக்குள்ளே சமத்தன்மை –தொடர்
பற்றுஞ் சகோதரத்தன்மை
யாருக்கும் தீமை செ ́ய்யாது – புவி
யெ ̄ங்கும் விடுதலை செய் ́யும்.
ஒன்றென்றுகொட்டு முரசே! அன்பில்
ஓங்கென்றுகொட்டு முரசே!
நன்றென்றுகொட்டு முரசே! –இந்த
நானில மாந்தரு ̧க்கெல்லாம்.””
பொ ̧ளார்ந்த அர்ப்பண வாழ்வு; அர்த்தமுள்ள, ஆழமான ஆன்மீக அடித்தளம்; அனைத்துச் சம யக் கேண்மை; மண் சார்ந்த, மக்கள் சார்ந்த, நீதி சார்ந்த விடுதலை வேட்கை; பெண்விடுதலை ̈ பேணல்; அனைத்துலக மனிதாயப் பார்வை என மஹாகவி பாரதியின் மனித நேய ஆளுமையின் பல பரிமாணங்களைக் காண்போமாக;
(*நந்தனம் அரசினர் கலைக் கல்லூரியில் 22.9.2000 அன்று பாரதி விழாவில் ஆற்றிய சிற்றுரை)
- உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை பன்னாட்டு கருத்தரங்கு அமர்வுகள்
- பாரதியின் மனிதநேயம்
- ஸ்பேஸ் X ஏவிய விண்சிமிழ் முதன்முதல் நான்கு சுற்றுலா பொதுநபரை ஏற்றிச் சென்று பூமியை மூன்று நாட்கள் சுற்றி மீண்டது.
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 254 ஆம் இதழ்
- கிண்டா
- ப.தனஞ்ஜெயன் கவிதைகள்
- குருட்ஷேத்திரம் 16 (தருமனால் ஏற்பட்ட தலைகுனிவு)
- குருட்ஷேத்திரம் 15 (சாத்வீக மனம் கொண்ட பாண்டு)
- கருங்கோட்டு எருமை
- பாரதியை நினைவுகூர்வோம் – பாரதியாரின் மூன்று கவிதைகளும் டாக்டர்.கே.எஸ். சுப்பிரமணியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பும்
- தற்கால சிறுகதை, புதினங்களில் காலத்தின் சுவடுகள்
- மதுர பாவம்
- ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- கவியின் இருப்பும் இன்மையும்
- ஒரு கதை ஒரு கருத்து – கு.ப.ராவின் கனகாம்பரம்
- அஞ்சலிக்குறிப்பு: எழுத்தாளர் நந்தினிசேவியர் விடைபெற்றார் !
- நெருடல்
- குருட்ஷேத்திரம் 13 (திருதராஷ்டிரன் என்ற யானைக்கு அங்குசமாக இருந்த காந்தாரி)
- குருட்ஷேத்திரம் 14 (யாதவ வம்சமும் கிருஷ்ணனும் துர்வாசரின் சாபத்தால் அழிந்தார்கள்)