பாரதியை நினைவுகூர்வோம் – பாரதியாரின் மூன்று கவிதைகளும் டாக்டர்.கே.எஸ். சுப்பிரமணியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பும்

author
1
2 minutes, 54 seconds Read
This entry is part 10 of 19 in the series 19 செப்டம்பர் 2021

  1. நான்

 

பாரதியார்

 

வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்,

மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;

கானில் வளரும் மரமெலாம் நான்,

காற்றும் புனலும் கடலுமே நான்

விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்,

வெட்ட வெளியின் விரிவெலாம் நான்;

மண்ணில்கிடக்கும் புழுவெலாம் நான்,

வாரியினுள் உயிரெலாம் நான்,

கம்பனிசைத்த கவியெலாம் நான்,

காருகர் தீட்டும் உரவெலாம் நான்;

இம்பர் வியக்கின்ற மாட கூடம்

எழில்நகர் கோபுரம் யாவுமே நான்,

இன்னிசை மாதரிசையுளேன் நான்,

இன்பத்திரள்கள் அனைத்துமே நான்;

புன்னிலை மாந்தர்தம் பொய்யெலாம் நான்,

பொறையருந் துன்பப் புணர்ப்பெலாம் நான்.

மந்திரங்கோடி இயக்குவோன் நான்,

இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்;

தந்திரங் கோடி சமைத்துளோன் நான்.

சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான்.

அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்,

அவை பிழையாமே சுழற்றுவோன் நான்,

கண்டல் சக்திக் கணமெலாம் நான்

காரணமாகிக் கதித்துளோன் நான்.

நானெனும் பொய்யை நடத்துவோன் நான்,

ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்;

ஆனபொருள்கள் அனைத்தினும் ஒன்றாய்

அறிவாய் விளங்குமுதற்சோதி நான்.

 

 

SUBRAMANIA BHARATHI’S POEM / நான் / Translated into English by Dr.K.S.SUBRAMANIAN / (FROM CONTINUUM – a collection of Tamil poems rendered in English)

I

 

Subramania Bharathi

I am the birds winging in the sky

I am all the beasts roaming the earth

I am all the trees filling the forests wild

I am the wind, the river and the sea.

I am all the stars in the sky’s expanse

I am the sweep of space unbounded

I am all the worms crawling on earth

I am the life infinite in ocean’s depths.

I am the poetic corpus of Kamban the Great

I am forms exquisite artists create

The halls, concourses, the world-marvel

Great cities and towers am I

I am in the melody of maidens’ music

I am all the brimming joys around

I am all the lies of people vile

I am all the distress testing patience

I direct the manthras countless

I am the essence of all that moves

I am the maker of devices legion

Of Vedas and Shastras author am I

The cosmos entire create i did

Direct them in their orbits unfailing

I am the benign Shakthi’s prowess

I am the elemental cause of all.

It is I who operates the myth called ‘I’

I am the one that traverses through

The flaming firmament of Gnana

I am the primal light of consciousness

permeating all beings and things.

 

***

 

  1. காற்று

பாரதியார்

 

  

 

அசைகின்ற இலையிலே உயிர் நிற்கிறதா? ஆம்

இரைகின்ற கடல்-நீர் உயிரால் அசைகின்றதா? ஆம்

கூரையிலிருந்து போடும் கல் தரையிலே விழுகின்றது

அதன் சலனம் எதனால் நிகழ்வது? உயிருடைமையால்

ஓடுகின்ற வாய்க்கால் எந்த நிலையில் உளது? உயிர் நிலையில்

ஊமையாக இருந்த காற்று ஊதத் தொடங்கிவிட்டதே!

அதற்கு என்ன நேரிட்டிருக்கிறது? உயிர் நேரிட்டிருக்கிறது.

வண்டியை மாடு இழுத்துச் செல்கிறது அங்கு மாட்டின்

உயிர் வண்டியிலும் ஏறுகிறது, வண்டி செல்லும்போது

உயிருடனேதான் செல்லுகிறது.

காற்றாடி? உயிருள்ளது.

நீராவி வண்டி உயிருள்ளது; பெரிய உயிர்.

யந்திரங்களெல்லாம் உயிருடையன.

பூமிப்பந்து இடைவிடாமல் மிக்க விசையுடன் சுழல்கின்றது

அவள் தீராத உயிருடையவள் பூமித்தாய்

எனவே. அவள் திருமேனியிலுள்ள ஒவ்வொன்றும் உயிர்

கொண்டதாயாம்

அகில முழுதும் சுழலுகிறது

சந்திரன் சுழல்கின்றது, ஞாயிறு சுழல்கின்றது

கோடி கோடி கோடி கோடி யோஜனை தூரத்துக்கப்பாலும்.

அதற்கப்பாலும் அதற்கப்பாலும் சிதறிக் கிடக்கும்

வானத்து மீன்களெல்லாம் ஓயாது சுழன்றுகொண்டேதான் இருக்கின்றன.

எனவே, இவ்வையகம் உயிருடையது.

வையகத்தின் உயிரையே காற்றென்கிறோம்.

அவனை முப்போதும் போற்றி வாழ்த்துதல் செய்கின்றோம்.

 

 

 

BHARATHIAR’S PROSE-POEM ‘THE WIND’ Rendered in English by Dr.K.S.SUBRAMANIAN (*From the volume TAMIL POETRY TODAY by Dr.K.S.Subramanian (2007_ published by INTERNATIONAL INSTITUTE OF TAMIL STUDIES)

THE WIND

 

SUBRAMANIA BHARATHI

 

Does life throb in the tremulous leaf?

Yes.

In the roaring sea….. is all the water soaked with life?

Yes.

Stone dropped from roof, wings its way to ground.

This pulse of movement is

Spurred by its innate life.

Rustle of the brook is life manifest.

Silent air turns into a howling wind,

a stirring of life.

A bull pulling the cart _

breathes life into the wheels,

The cart becomes alive.

The soaring kite – it is alive.

The roaring steam train has life, too

A big life.

All machines are propelled by life.

The earth spins and spins.

A reservoir of life is our

Mother Earth.

So, all things on her sacred body

are vibrant.

The universe is in a whirl.

The moon whirls, the sun too.

Billions and billions of miles away.

Even beyond

Further beyond

Into an abyss

Stars and planets in a constant spin.

So, this world bustle with life.

This life we have named the wind.

And, morn noon and eve

We sing its glory

in joyous celebration.

 

***

 

3.ஞாயிறு

 

சுப்பிரமணிய பாரதி

 

ஞாயிறே, இருளை என்ன செய்துவிட்டாய்?

ஓட்டினாயா? கொன்றாயா? விழுங்கிவிட்டாயா?

கட்டி முத்தமிட்டு நின் கதிர்களாகிய கைகளால் மறைத்துவிட்டாயா?

இருள் நினக்குப் பகையா?

இருள் நின் உணவுப்பொருளா?

அது நின் காதலியா?

இரெவெல்லாம் நின்னைக் காணாத மயக்கத்தால் இருண்டு இருந்ததா?

நின்னைக் கண்டவுடன் நின்னொளி தானுங் கொண்டு

நின்னைக் கலந்துவிட்டதா?

நீங்கள் இருவரும் ஒரு தாய் வயிற்றுக் குழந்தைகளா?

முன்னும் பின்னுமாக வந்து உலகத்தைக் காக்கும்படி

உங்கள் தாய் ஏவி யிருக்கிறாளா?

உங்களுக்கு மரணமில்லையா? நீங்கள் அமுதமா?

உங்களைப் புகழ்கின்றேன்.

ஞாயிறே உன்னைப் புகழ்கின்றேன்.

 

 

BHARATHIAR’S PROSE-POEM ‘THE SUN’ / (*RENDERED IN ENGLISH BY DR.K.S.SUBRAMANIAN (*From the volume TAMIL POETRY TODAY by Dr.K.S.Subramanian (2007_ published by INTERNATIONAL INSTITUTE OF TAMIL STUDIES)

 

THE SUN

 

Subramania Bharathi

 

Oh Sun! what have you done to Darkness?

Driven it? Slayed it? Gobbled it?

Have you embraced it and kissed it

And enveloped it in your radiant arms?

Is darkness your foe?

Your prey?

Or your beloved?

Was it buried in a sheet of inky black through the night

Pining for the warmth of your touch?

And has it melted in sweet surrender

in your effulgent presence?

Are you twins?

Has your mother ordained you

To take turns in protecting this world?

Are you both beyond the pale of death?

Immortal?

Praise unto you, sun and Darkness!

Oh Sun! My salutations at your feet!

 

 

 

 

 

Series Navigationகருங்கோட்டு எருமைதற்கால சிறுகதை, புதினங்களில் காலத்தின் சுவடுகள்
author

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *