லதா ராமகிருஷ்ணன்
மொழிபெயர்ப்பாளர்
ஸ்ரீவத்ஸா
புகைப்படம் : (அமரர்)ஓவியர் தட்சிணாமூர்த்தி
செப்டம்பர் 30 ஆந் தேதி பேஸ்புக்கில் சிலர் உலக மொழிபெயர்ப்பு தின வாழ்த்துகள் பகிர்ந்துகொண்டிருந்ததைப் படித்தபோது கடந்த சில வருடங்களாக ஆரவாரமில் லாமல் சமகால தமிழ்க்கவிதைகளை மொழிபெயர்த்து தன் ‘டைம் லைனில்’ பதிவேற்றிவரும் ஸ்ரீவத்ஸா தான் நினைவுக்கு வந்தார்.
தன் நண்பர்களால் ‘ஸ்ரீ’ என்று அன்புடன் அழைக்கப்படும் இவர் ஆங்கிலத்திலும் இந்தியிலும் சொந்தமாகவும் கவிதைகள் எழுதுபவர். தமிழ்க்கவிதைகளை இந்தியிலும் மொழிபெயர்க்கிறார். இவருடைய மொழிபெயர்ப்பில் சில கவிஞர்களின் 30, 50 கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு அவை தொகுப்புகளாகவும் பிரசுரமாகியுள்ளன. உதாரணத் திற்கு, கவிஞர் முகமது பாட்சாவின் ஆரிகாமி வனம் தொகுப்பில் அவருடைய கவிதைகளும் அந்தக் கவிதைகளுக்கான ஸ்ரீவத்ஸாவின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம்பெற்றுள்ளன. தவிர, இவருடைய மொழிபெயர்ப்பு கள் வேறு சில இலக்கிய இதழ்களிலும் வெளியாகிவருகின்றன.
தமிழ்க் கவிதைகள் திரு.ஸ்ரீவத்ஸாவின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் மூலம் மலையாளம், இந்தியிலும் மொழிபெயர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது. ஒரு தமிழ்க் கவிதையையும் அதற்கான தனது ஆங்கில மொழிபெயர்ப்பையும் தரும்போது ஐந்தாறு வரிகளில் அந்தத் தமிழ்க்கவிதையின் சாரத்தை அடிக்கோடிட்டுக்காட்டுவது கவிதையை வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்துவதோடு கவிதைக்கு திறவுகோலாகவும், மொழிபெயர்ப்பாளரில் இருக்கும் தேர்ந்த வாசகரை இனங்காட்டுவதாகவும் அமை கிறது!
திரு.ஸ்ரீவத்ஸாவிடம் ஒரு நேர்காணல் நடத்தும் பொருட்டு மின்னஞ்சலில் அவருக்கு சில கேல்விகளை அனுப்பிவைத்தேன். தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ பதில் களை அனுப்பிவைக்கலாம் என்றும், பதிலளிக்க விரும்பாத எந்தக் கேள்வியையும் அவர் புறக்கணித்துவிடலாமென்றும், பேட்டியளிக்க விருப்பமில்லையென்றால் தெரிவித்துவிடலாம் – நான் தவறாக நினைக்க மாட்டேன்’ என்றும் அடிக்குறிப்பில் தெரிவித்திருந்தேன். ஆனால், அவர் முக்கால்வாசி கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதில் எழுதி மின்னஞ்சலில் அனுப்பித்தந்தார்! அந்தப் பேட்டியை இங்கே தமிழில் தந்துள்ளேன்
இப்போது சென்னை எனப்படும் அப்போதைய மட்ராஸில் பிறந்தவர். 1978இல் தில்லிக்குக் குடிபெயர்ந்தார். இயற்பியலில் பட்டம் பெற்றவர். பல்வேறு நுண்கலை களில் ஆர்வங்கொண்டவர். இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கியில் பெரிய பதவி வகித்தவர். ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலமாக Madras Youth Choir எனப்படும் சேர்ந்திசைக் குழுவில் இடம்பெற்றிருக்கும் பாடகர். அரங்கம், யாத்ரிக், மட்ராஸ் ப்ளேயர்ஸ் ஆகிய நாடகக் குழுக்கள் அரங் கேற்றிய தமிழ், ஆங்கில, இந்தி நாடகங்களில் மேடையிலும் மேடைக்குப் பின்னாலும் குறிப்பிடத்தக்க பங்காற்றியவர். தமிழிலிருந்து ஆங்கிலத்திலும் ஆங்கிலத்திலிருந்து தமிழிலும், சில கவிதைகளை இந்தியிலும் மொழிபெயர்ப்பது தனக்கு மிகவும் பிடித்தமான, நிறைவளிக்கும் பணி என்றும் அதை ஆர்வமாகத் தொடர்ந்து செய்துகொண்டிருப்பதாகத் தெரிவிக் கிறார். கடந்த வருடங்களில் இவருடைய கவிதைகள் பல் வேறு இலக்கிய இதழ் களிலும் தொலைக் காட்சியிலும் இடம் பெற்றுள்ளன. இதுவரை நான்கு தமிழ்க்கவிஞர்களின் கவிதைத் தொகுப்புகள் திரு.ஸ்ரீவத்ஸாவின் ஆங்கில மொழி பெயர்ப்புகளோடு வெளியாகி யுள்ளன. மற்றும் ஏராளமான தமிழ்க் கவிஞர்களின் ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்; மொழிபெயர்த்துக்கொண்டிருக்கிறார். ”moi” என்று தன்னை தனது மொழிபெயர்ப்புகளில் குறிப்பிடுகிறார்.
நீங்கள் எப்போதுமே நிறைய வாசிப்பீர்களா? தேர்ந்த வாசகராக விளங்கினீர்களா? எத்தகைய புத்தகங்கள் உங்களுக்கு மிகவும் பிடித்தமானவை? சில நூல்களின் பெயர்களைத் தர முடியுமா?
சிறுவனாக இருக்கும்போதே என் தந்தை என்னிடமும் என்னுடன் பிறந்தவர் களிடமும் வாசிக்கும் ஆர்வத்தையும் வாசிக்கும் பழக்கத்தையும் ஊட்டி வளர்த்தார்! சென்னையிலுள்ள கன்னிமரா நூலகம், பிரிட்டிஷ் கௌன்சில்நூலகம், ‘மட்ராஸ் மாவட்ட மைய நூலகம் என்று எல்லா நூலகங்களுக்கும் அழைத்துச்செல்வார். குழந்தைகளுக்கான நூல்களைப் படிப்பதில் தொடங்கி அறிவியல் புத்தகங்கள், வாழ்க்கை வரலாறுகள், தன்வரலாறுகள், புனைவிலக்கியங்கள், நாடகங்கள், கவிதைகள் என்று ஏராளமாகப் படித்தேன். எனக்குப் பிடித்த நூல்களென்று குறிப்பாக தமிழில் ஒன்றிரண்டைச் சொல்வதென்றால், தமிழில் பாரதியார் கவிதைகள், ஜானகி ராமனின் மரப்பசு,
சமகாலத் தமிக்கவிதைகளை மொழிபெயர்க்கும் ஆர்வம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?
ஃபேஸ்புக்கில் சமகாலத் தமிழ்க்கவிஞர்கள் தங்களது கவிதைகளை அவ்வப்போது பதிவேற்றுவதைப் படித்தது எனக்கு அவற்றை மொழிபெயர்க்கும் உத்வேகத்தை ஏற்படுத்தியது. சொந்தக் கவிதை எழுதுவதை ஒரு பக்கமாக ஒதுக்கிவைத்துவிட்டு ஒரு வாசகராக எனக்குப் பிடித்த சில தமிழ்க் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கத் தொடங்கினேன். ஆங்கிலத்திலிருந்து தமிழிலும், தமிழிலிருந்து இந்தியிலும், இந்தியிலிருந்து தமிழிலும்கூட சில கவிதைகளை மொழிபெயர்த்துள் ளேன்.
ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதற்காக எத்தகைய கவிதைகளைத் தேர்ந் தெடுத்துக்கொள்கிறீர்கள்? எப்படித் தேர்ந்தெடுத்துக்கொள்கிறீர்கள்?
ஒரு கவிதை முதலில் ஒரு வாசகராக எனக்குப் பிடிக்கவேண்டும். பெயர்பெற்ற கவிஞர் எழுதியதாக இருக்கலாம். அந்தக் கவிஞரின் வேறு சில கவிதைகளை நான் ஏற்கெனவே மொழிபெயர்த்திருக்கக்கூடும். இல்லை, அறியப்படாத, அல்லது ஆரம்பநிலைக் கவிஞர் எழுதியதாக இருக்கலாம். எப்படியிருந்தாலும், ஒரு குறிப்பிட்ட கவிதை என் மனதில் ஓர் ஒத்திசைவை ஏற்படுத்தினால் மட்டுமே நான் அதை மொழிபெயர்க்க முற்படுவேன்.
ஒரு கவிதையை மொழிபெயர்க்கும்போது நீங்கள் எதிர்கொள்ளும் பிரதானமான முட்டுக்கட்டைகள் யாவை? முடிந்தால் சில உதாரணங் களைத் தரவும்.
உணர்வுகளை மிகச் சரியாக மொழியில் பெயர்ப்பது மிகவும் கடினமான விஷயம். அதுவும், ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழியில் பெயர்ப்பது எளிதான காரியமேயல்ல. மூல கவிதையில் ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்களைத் தரும் சொற்கள் இடம்பெற்றிருத்தல், நிறுத்தற்குறிகள் ஏதும் இல்லாதிருத்தல் போன்ற வற்றைச் சொல்லலாம். என் உள்ளுணர்வின் பலத்தில் மொழிபெயர்த்து அது மூல கவிதையில் சொல்லப்பட்டிருக்கும் விஷயத்தை அதேயளவாய் இலக்கு மொழியில் சொல்கிறதா என்று சரிபார்ப்பேன்.
மொழிபெயர்ப்பு தொடர்பான உங்கள் அணுகுமுறை என்ன? மொழி பெயர்க்கும்போது தெரிந்தும் தெரியாமலும் உங்கள் மொழிபெயர்ப்புகளில் இடம்பெற்றுவிடும் உங்கள் விருப்புவெறுப்பு சார்ந்த விஷயங்கள் யாவை?
என்னைப் பொறுத்தவரை, மூல கவிதை புனிதமானது. மொழிபெயர்ப்பில் அக்கவிதையை எந்தவொரு மாற்றத்துக்கும் ஆளாக்கக்கூடாது. மேலும், ஒரு கவிதையை சரியாக மொழிபெயர்க்க நான் அதை முதலில் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். வாசிப்பில் கிடைக்கும் அர்த்தம் மட்டுமல்லாமல் அந்தக் கவிதையின் பின்னணி குறித்த புரிதலும் எனக்குக் கிடைக்கவேண்டும். எப்போதுமே ஒரு கவிதையை மொழிபெயர்ப்பதற்கு முன்பாக அதை எழுதிய கவிஞரோடு தொடர்புகொண்டு அந்தக் கவிதை எழுதப்பட்டதற்கான பின்னணி, கவிதையில் குறிப்புணர்த்தப்படுவது என்ன என்பது போன்ற சில விஷயங்களைக் கேட்டறிவேன். ஒரு மொழிக்குரிய பிரத்யேகமான நுட்பங்களை மொழிபெயர்க்க முற்படுவதில்லை. தமிழில் தரப்பட்டுள்ள வார்த்தைகளையே ஆங்கிலத்தில் தந்து அதனை விளக்கும் ஓர் அடிக்குறிப்பைத் தந்துவிடுவேன்.
இதுவரை நீங்கள் ஏராளமான தமிழ்க்கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளீர்கள். அவற்றை ஃபேஸ்புக்கில் உங்கள் ‘டைம் லினில்’ பதிவேற்றுவதைத் தாண்டி வேறெங்காவது அவற்றைப் பிரசுரித்துள் ளீர்களா? உங்கள் ஆங்கில மொழிபெயர்க்குகள் தொகுப்பாக வெளியாகி யுள்ளனவா?
மூல கவிஞர்களிடமிருந்து அனுமதி வாங்கி மொழிபெயர்த்த பிறகு மூல கவிதை யையும் என் மொழிபெயர்ப்பையும் என் டைம்லைனில் பதிவேற்றுவேன். அதைத் தாண்டி நான் எந்தவிதமான உரிமையையும் கோருவதில்லை. காப்புரிமை மூல கவிஞர்களிடமே இருக்கிறது. சில கவிதைகளும் அவற்றுக்கான என் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் வேறு சில இலக்கிய இதழ்களிலும் வெளீவந்திருக்கின் றன.அவர்கள் கவிஞர்கள் விரும்பினால் அவர்கள் தங்களுடைய கவிதைகளையும் அவற்றுக்கான என் ஆங்கில மொழிபெயர்ப்புகளையும் தொகுப்பாக வெளியிட்டுக் கொள்ளலாம்
நீங்கள் மொழிபெயர்த்திருக்கும் கவிஞர்களுடனான உங்கள் உறவு சினேகமானதா? சிக்கலானதா?
கவிஞர்களுடனான என் நட்பு இனிமையானதே – நான் அவர்கள் கவிதையை மொழிபெயர்க்கிறேனோ, இல்லையோ. ஃபேஸ்புக் மெஸஞ்சர் வழியாக அவர்களுடன் கலந்துரையாடுவது வழக்கம். சிலர் தங்கள் வலைப்பூ அல்லது மின்னஞ்சல் மூலம் மட்டுமே தொடர்புகொள்வார்கள்.அவர்களிடம் என் மொழிபெயர்ப்பை அனுப்பி அவர்கள் அது சரியாக இருக்கிறது என்று நினைக்கிறார்களா என்று கேட்டுத் தெரிந்து கொள்வேன். இலக்கணம், நிறுத்தற்குறிகள் கூறியது திரும்பக் கூற போன்றவை தொடர்பாய் நான் சொல்லும் கருத்துகளை அவர்கள் பொருட்படுத்திக் கேட்கிறார்கள். சிலர் மூல கவிதையில் இல்லாத சில மாற்றங்களை என் மொழிபெயர்ப்பில் செய்யச் சொல்லுவார்கள். அதற்கு நான் ஒப்புக்கொள்வதில்லை. ஒரு கவிஞர் அவருடைய கவிதையையும் அதற்கான என் மொழிபெயர்ப்பையும் என் டைம்லைனில் பதிவேற்ற இறுதி ஒப்புதலைத் தந்தால் மட்டுமே நான் அதைச் செய்வேன். இல்லையெனில் அப்படியே விட்டுவிடுவேன்.
மொழிபெயர்ப்புப் பணியில் ஒரு மொழிபெயர்ப்பாளர் இடறிவிழக் கூடிய இடங்கள் யாவை?
மூல மொழியில் எழுதியவர் போலவே அதை இலக்குமொழியில் கொண்டுவரும் மொழிபெயர்ப்பாளரும் மனிதர்தான். தனக்கு எல்லாம் தெரியும் என்று ஒரு மொழிபெயர்ப்பாளர் கருதுவது அவரைப் படுகுழியில் தள்ளிவிடும்.பல நேரங்களில் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பு சார்ந்த, சமூகக்குழு சார்ந்த சொற்பிரயோகங்கள் இலக்கு மொழியில் சரியாக வராமல், சரியாக புரிபடாமல் அந்நியமாய் நின்றுவிடுவதுண்டு. இங்கே ஊக அடிப்படையில் மொழிபெயர்ப்பாளர் மொழிபெயர்ப்பது சரியல்ல. மாறாக, மூல கவிதையை எழுதியவரோடு பேசி அவர் எந்தப் பொருளில் அல்லது எதைக் குறிப்புணர்த்த அந்தச் சொற்களை, சொற்சேர்க்கைகளைப் பயன்படுத்தியுள்ளார் என்று தெரிந்துகொண்டு அதன் அடிப்படையில் மொழிபெயர்ப்பதே சரி.
தமிழ்க் கவிதைகளுக்கான உங்கள் ஆங்கில மொழிபெயர்ப்புகள் தமிழ் இலக்கிய வட்டத்திலும், உங்கள் நட்பினர் வட்டத்திலும் எந்தவிதமான வறவேற்பை, கவனத்தைப் பெறுகின்றன? உங்களுடைய ஆங்கில மொழிபெயர்ப்புகள் தமிழ்க்கவிதைகளின் வாசகப்பரப்பை விரிவாக்கியிருப் பதாக, கவிதை ரசனையை மேம்படுத்தியிருப்பதாக உணர்கிறீர்களா?
நமக்குக் கிடைக்கும் ‘லைக்’குகள் ‘இமோஜிகள், ஒற்றைச் சொல்லிலான அபிப்பிராயங் கள் மூலம் வாசகர் என்ன நினைக்கிறார் என்று அறிந்துவிட இயலாது. சிலர் மூக கவிதையின் குறிப்பிட்ட வரிகளைச் சுட்டி அவற்றிற்கான என் ஆங்கில மொழி பெயர்ப்பைப் பாராட்டுவார்கள். அவர்களுக்கு நான் தரும் வழக்கமான பதில், ‘எல்லாப் புகழும் மூல கவிஞருக்கே’
மொழிபெயர்ப்பின் முக்கிய நோக்கம் ‘ யாம் பெறும் இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பதாய் ஒரு நல்ல கவிதையை வாசகருக்குப் படிக்க முடியும் மொழியில் தருவது. தமிழ் படிக்கத் தெரியாத வாசகர்கள் சிலர் என் மொழிபெயர்ப்புகளைப் படித்த பின்பு தமிழ்மொழியைக் கற்க விரும்புவதாகக் கூறியதைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
நீங்கள் எழுதிய ஆங்கிலக் கவிதைகள் சிலவும், இந்திக் கவிதைகள் சிலவும் உங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் இடம்பெற்றுள்ளன. உங்களுடைய கவிதைகளைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்.
புகுமுக வகுப்பும் இளங்கலைப் பட்டப்படிப்பும் படித்த நான்கு வருடங்களில் ஒவ்வொரு வருடமும் எங்கள் கல்லூரி இதழில் என்னுடைய ஒரு கவிதை பிரசுரமாகியுள்ளது. இவற்றில் ஒன்று பரவலான கவனத்தைப் பெற்று வேறு இரண்டு இதழ்களிலும் பிரசுரமானது. சென்னை தூர்தர்ஷனில் புகைப்படங்களாலான நிகழ்வாகவும் ஒளிபரப்பப்பட்டது. எனது வேறு சில கவிதைகளும் சில இலக்கிய இதழ்களில் பிரசுரமாகியுள்ளன.
உங்களுடைய மற்ற ஆர்வங்கள் யாவை?
நாடகமும் இசையும் எனக்கு மிகவும் பிடித்தமானவை. திரு. எம்.பி. சீனிவாசன் உருவாக்கிய மட்ராஸ் சேர்ந்திசைக் குழுவில் 1973இலிருந்து இடம்பெற்றிருக்கிறேன்.
நாங்கள் ஏஷியாட் ’82, சென்னை மியூசிக் அகாதெமி, மும்பையிலுள்ள சண்முகானந்த சபால் செரனேட் 2017, வாஷிங்க்டனில் உள்ள கென்னடி மையத்தில் நடைபெற்ற சர்வதேச சேர்ந்திசைத் திருவிழா என்று பல மதிப்பார்ந்த அரங்குகளில் எங்கள் இசைநிகழ்ச்சியை நடத்தியுள்ளோம்.
Upgrading one’s skills is a great way to succeed professionally. A modern approach does not mean a complete makeover of the persona, as demonstrated in this Tamil poem reproduced here alongside an English translation by moi with prior permission from the poet Vannadasan Sivasankaran S:
#2
Mariyappan,
who sells pineapples
from a pushcart,
has become very modern.
He doesn’t tie a turban
now.
From the red post box
at the
women’s college entrance
the vend has shifted
near the ATM.
With the finesse of a surgeon
he transforms pineapples
into precisely sliced yellow
for stacking up in
paper cups
with blue blossoms
and plastic spoons.
Spilling
a five-star hotel smile
and reducing speech,
he just stands.
A green coloured bucket nearby
for use and throw.
In the three and a half
as well as five and a half
hours of business,
he does not look up at anyone
other than customers,
including his daughter Devika
wearing an imitation nosepin
and waiting in the hot sun
with her infant son
wrapped in an old saree
to take money from him
to go by bus
to the general hospital.
~Sri 17:40 :: 01102021 :: Noida
தள்ளுவண்டியில் அன்னாசிப் பழம் விற்கிற
மாரியப்பன் மிகவும் நவீனம் அடைந்துவிட்டார்.
தலைப்பாகை கட்டுவதில்லை இப்போது.
மகளிர் கல்லூரி வாசலில்
சிவப்புத் தபால்பெட்டி அருகிலிருந்து
ஏ.ட்டி.எம் பக்கம் கடை நகர்ந்துவிட்டது.
ஒரு அறுவை மருத்துவர் நேர்த்தியுடன்
அன்னாசிப் பழங்களை கச்சிதமாகத்
துண்டிக்கப்பட்ட மஞ்சள் ஆக்குகிறார்.
அடுக்கி வைக்க, நெகிழிக் கரண்டியுடன்
நீலப் பூக்கள் உள்ள காகிதக் கோப்பைகள்.
ஐந்து நட்சத்திர விடுதிப்புன்னகை ததும்ப
பேச்சைக் குறைத்து வெறுமனே நிற்கிறார்.
உபயோகித்துத் தூர எரிய
பச்சை நிற வாளி பக்கத்தில்.
மூன்றரை மற்றும் ஐந்தரை மணி வியாபாரத்தில்
வாடிக்கையாளர் தவிர வேறு யாரையும்
ஏறிட்டுக் கூட அவர் பார்ப்பதே இல்லை,
இவரிடம் பஸ் காசு வாங்கிக்கொண்டு
பொதுமருத்துவ மனை போக
பழஞ்சேலையில் பச்சைப்பிள்ளையைப் பொதிந்து
வெயிலில் காத்திருக்கும் அவருடைய மகள்
கவரிங் மூக்குத்தி தேவிகா உட்பட.
A penny saved is a penny earned. The fruits of sweat and blood is not to be wasted and it hurts whenever a rupee is burned. When you realise that every lesson comes at a price, you realise that is the cost of becoming wise.
Reproduced here alongside an English translation by moi with prior permission from the poet is a sensitive Tamil poem by Puthiyamaadhavi Sankaran:
நேற்று அறுநூறு ரூபாய் வீணாகிவிட்டது.
கையிலிருந்து போனபிறகு
அதே அறுநூறை இனி
சம்பாதிக்கமுடியாதுதானே!
அற்பம்.. !
அறுநூறுக்கா இந்த அலப்பறை?
பெரிய மனிதர்களின் இளக்காரம்
புதிதல்ல.
அறுநூறு போனது போனதுதான்..
இரண்டுமாதம் கைபேசி செலவு
கைப்பிடித்தம் ஆகிறது.
ஆறுமுகங்களுக்கு பசித்தீர்த்து
இருக்கலாம்.
அட.. தடியான ஒரு புத்தகம் வாங்கியாவது
வாசித்து கிழித்து
அறிவாளி ஆகியிருக்கலாம்!
அறுநூறு போனது போனதுதான்..
எந்தக் கணக்கில் இதை எழுதட்டும்?
மொய் கணக்கிலா?
மனிதர்களின் பொய் கணக்கிலா?
எந்தக் கணக்கில் இதை எழுதட்டும்?
கவனமாகத்தான் கையாண்டேன்.
உடைந்தக் கண்ணாடித் துண்டுகள்
பாதையிலும் பயணத்திலும்
கண்ணாடி குத்தியதில்
வைத்தியச்செலவு அறுநூறு
கணக்கை எழுதி முடித்துவிட்டேன்.
இனி, கால்களுக்கு விடுதலை.
Yesterday,
six hundred rupees
were wasted.
After it is gone from the hand,
the same six hundred
cannot be earned hereafter,
is it not?
Trivial!
Is this fuss
for just six hundred?
The derision
of big shots
is not new.
That six hundred
is gone for good.
It would have met
the mobile phone bill
for two months.
The hunger of six persons
could have been satiated.
Huh.
A fat book could have been
bought, read and torn up
making one wiser.
That six hundred
is gone indeed for good.
How should I account this?
Gift account?
Fake accounts
of people?
Under which head
should I account it?
I handled
with care only.
There were
broken glass shards
on the way
while traveling.
I made an entry
for six hundred
towards
medical expenses
on injury from
glass
and finished
the accounts.
The legs are free
hereafter.
~Sri 17:21 :: 27092021 :: Noida
- இனிய நந்தவனம் – கனடா சிறப்பிதழ் வெளியீடு
- ஊரடங்குப் பூங்கா
- சீதைகளைக் காதலியுங்கள்
- எங்கே பச்சை எரிசக்தி ?
- பகல் கனவு
- விடியாதா
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 255 ஆம் இதழ்
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- புரிதல்
- கனேரித் தீவில் திடீரென எழுந்த தீக்குழம்பு எரிமலைக் காட்சி
- தமிழ்க் கவிதைகள் தரமான ஆங்கிலத்தில்! – மொழிபெயர்ப்பாளர் ஸ்ரீவத்ஸாவின் ஆரவாரமில்லாத அரும்பணி!
- எழுத மறந்த குறிப்புகள்: “ மாலன் “ என்னும் பன்முக ஆளுமை !
- குருட்ஷேத்திரம் 20 (சத்தியர்களை கருவருத்த ரெளத்ர ரிஷி)
- குருட்ஷேத்திரம் 19 (பாஞ்சாலியின் பிறவிக்கு மூலகாரணமான துரோணர்)
- என்ன தர?
- ஒலிம்பிக் வளையங்களுக்குள் ஒளிந்திருக்கும் வளையங்கள்
- என்னவோ நடக்குது
- கனடா தேர்தல் முடிவுகள் – 2021 – லிபரல் கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது
- கோதையர் ஆடிய குளங்கள்