ஜனநேசன்
- குளமும் இல்லை
தவளையும் இல்லை
தாவி அலைவுறும் மனது.
- நீ வந்ததும் எழுச்சி
மறைவதும் நெகிழ்ச்சி
சூரியனே …
- மொட்டைமாடியில் பறக்கும் கொடிகள்
சுரையும், பூசணியுமாக
குடிசையைக் காத்த நன்றி…!
- பூத்தது அழகு
உதிர்ந்து கிடப்பதும் அழகு !
மஞ்சள் கொன்றையே …!
- மாறின இறக்கைகள்
இரு கைகளாக ….
மாறவில்லை பறக்கும் மனம் !
- வளைந்து நெளிந்து நின்று
உயிர் வாழும் …..
மரமும் ….!
- தாயிழந்தவருக்கு தாய் !
காலமறிந்து ஊட்டும்
கனிமரங்கள் !
* புழுங்கும் மீன்களுக்கு
விசிறிடும்…..
பனையோலை நிழல் !
*வண்ணத்துப்பூச்சிகளும் பறவைகளும்
ஓவியங்களாக ….
காங்கிரீட் பூங்கா !
*கலைத்திடாதே காலைக்காற்றே …
இலைகளில் ,பூக்களில்
விளைந்த முத்துக்களை ….!
**************
- தமிழ்,மலையாள கவிதை சங்கமம்
- சாணி யுகம் மீளுது
- குருட்ஷேத்திரம் 22 (கிருஷ்ணர் என்ற புரிந்துகொள்ள முடியாத மனிதர்!)
- குருட்ஷேத்திரம் 21 (வியாசரின் சுயசரிதமே பாரதம்)
- ரொறன்ரோவில் எருமை மாட்டின் தலைகள்
- பாரதி தரிசனம் – யாழ்ப்பாணத்திலிருந்து மாஸ்கோ வரையில் !
- ஹைக்கூ தெறிப்புகள்
- அவரவர் நியாயங்கள்
- சுவர்
- ஜெர்மனி தூய செயற்கை கெரோசின் ஜெட் விமான எரித்திரவம் தயாரிக்கும் உலக முதன்மையான தொழிற்சாலை நிறுவகம்
- கடலும் கரையும்
- கறிவேப்பிலைகள்
- ஹவாய் தீவுகளில் தமிழர் கலாச்சாரம்