எஸ். சாமிநாதன்  விருது

author
0 minutes, 2 seconds Read
This entry is part 14 of 17 in the series 7 நவம்பர் 2021

 

திருச்சி.  எஸ்  ஆல்பர்ட்.  70களின் கோபக்கார தீவிர நவீன கலை இலக்கிய நண்பர்கள். அன்றைக்கே  ‘இன்று ‘ என என்றைக்கும் இன்று என்பது தாங்கள் என்றவர்கள் திருச்சி வாசக அரங்கு இளைஞர்கள். அவர்களுள், ஸாம் என்று அழைக்கப்பட்ட எஸ். சாமிநாதனின்  இயக்கம் விட்டுக்கொடுக்காத்  தன்மைத்தது.

திருச்சி ‘இன்று ‘ எஸ். சாமிநாதன், தனக்கான தான் செய்வதற்கான வேலையாக இடமாக நவீன தமிழ்  எழுத்து, நவீன தமிழ் நாடக அரங்கு, உலகளாவிய மாற்று / கலை சினிமா /ஆவணமாக்கம் என்று வேரோடிப் படர்ந்த, கண்களில் படா வேர்  காரணமாக,  கிளைத்த விளைந்த அவர் பெருமளவில் கொள்ளப் படாதவராகி, மனசில் பதிஞ்ச காலடிச் சுவடுகளுக்கு மட்டும் உரியவராக மாறிப்போனார்.

தான் காணப்படவில்லை படிக்கப்படவில்லை கொண்டாடப்படவில்லை என்றெல்லாம் கவலைப்படாத  பல அன்றைய இளைஞர்களைப் போலவே, சாமிநாதனும் இருந்தார். இயங்கினார்.

சென்ற நவம்பர் 2020ல் , தான் மறைவதற்கு முன் தன் எழுத்துகளை பதிப்பிக்கவேண்டும் என்று இறுதி நாள் வரை இயங்கிய அவர், இந்த 2021ல் இல்லையெனும் இயற்கைப் போக்கினூடே, என்றும் “. ‘இன்று ‘ எஸ். சாமிநாதன் ஆக இருப்பார் இருக்கிறார் என்பதை அவரது அன்பு குடும்பத்தினர் நிலை நிறுத்த, “எஸ். சாமிநாதன்  விருது”  நிறுவி, இந்த ஆண்டு முதல் வழங்குகின்றனர்.

தளம் ✍️ஒருங்கிணைப்பில், தேர்வுக்குழுவினர்,  பெறப்பட்ட பரிந்துரைகளைப் பரிசீலித்து, உரிய  விருதாளர்களைத் தெரிவு செய்து வெளியிட்டுள்ளனர்.

எஸ். சாமிநாதன் விருது பெறும் கலை இலக்கிய செயற்பாட்டாளர்களுக்கு வாழ்த்துகள். 🌹✍️

—-
Series Navigationஎன்னை நிலைநிறுத்த …உலகின் உயரமான மலை ஹவாய் தீவில்தான் இருக்கிறது என்றால் நம்புவீர்களா?
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *