எமிலி டிக்கின்ஸன் கவிதைகள்

This entry is part 3 of 6 in the series 26 டிசம்பர் 2021

[1830 -1886]

ஏகாந்த நிலை

ஆங்கில மூலம் : எமிலி டிக்கின்ஸன்

தமிழாக்கம் : சிஜெயபாரதன்கனடா

எமிலி டிக்கின்ஸன் வாழ்க்கை

பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த எமிலி டிக்கின்ஸன் அமெரிக்கக் கவிஞர்களுக்குள் ஓர் உன்னதப் படைப்பாளியாகக் கருதப் படுபவர். கல்லூரிப் படிப்பு படித்து திருமணம் பண்ணிக் கொள்ளாது தனிமையாய் வீட்டுக்குள்ளே வாழ்ந்தவர். தாயார் நோயில் கிடக்க அருகில் உறுதுணையாய் இருந்து காலம் கழித்தவர். அடிக்கடி நோய்வாய்ப்பட்டு கல்லூரிக்குச் சரியாகச் செல்லா விட்டாலும் சிறப்பான மாணவியாய்ப் பெயரெடுத்தவர். அவர் மனவாட்டத்தில் [Depression] வேதனைப் பட்டவர்.

எமிலி சிறுவயது முதலே சின்னஞ்சிறு கவிதைகளை யாருக்கும் தெரியாமல் எழுதிக் கொண்டு வந்தவர். ஏராளமான எண்ணிக்கையில் அவர் எழுதிய கவிதைகள் உயிருடன் உள்ள போது சிலமட்டும் பதிவாகிப் பெரும்பான்மை வெளிவராமல் முடங்கியே கிடந்தன. அவரது முழுக் கவிதைப் படைப்புகள் 1800 எண்ணிக்கையில் செத்த பிறகே, அவரது சகோதரி கண்டுபிடித்து அச்சில் ஏற்றப்பட்டன.

எமிலியின் கவிதைகள் அவரது ஆழ்ந்த சிந்தனைக் காவியங்களே. மிகக் கூரிய நோக்காளர். ஆழ்ந்து சிந்திப்பவர். அவரது கவிதைகளில் வரும் கற்பனை வடிவங்கள் இயற்கை, ஆத்மா, மதம், மரணம், சட்டம், சம்பிரதாயம், நேசம், பாசம்,காதல், இசை, கலாச்சாரம், நாகரீகம் போன்றவற்றில் இருந்து தோன்றியவை. பெரும்பான்மையான பாக்களில் வரும் “நான் என்பது தான்தான். அவரது கவிதைகளில் அவரே உட்கரு நாயகி. நான் என்னும் தன்னிலையில் தன்னையும் குறிப்பிடுகிறார். பிறரையும் சுட்டிக் காட்டுகிறார். தலைப்பிடாத கவிதைகளே பெரும்பாலும் எழுதி வந்தார். பாக்களின் முதல் வரியே தலைப்பாகும். சரியான சொற்கள் கிடைக்கும் வரை சொற்களை மாற்றிக் கொண்டே இருப்பார். தேன்போல் இனிக்கும் அவரது முத்துப் பாக்கள் படிக்கப் படிக்கத் திகட்டாதவை. பச்சை மரத்தில் அடித்த ஆணிபோல் மனதில் பதிந்து விடுப்வை. எளிதில் மறக்க முடியாத கவிதைகள்.

+++++++++++++++++++

 [1830 -1886]

எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் -1

ஏகாந்த நிலை 

ஆங்கில மூலம் : எமிலி டிக்கின்சன்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

ஒளிந்துளேன் நான் என் மலருக் குள்ளே
உன் மார்பு மேல் தொங்கும் மாலையில் !
சிந்திக்காது அணிந்துளாய் என்னை நீயும்
தேவதைகள் அறியும் மற்றவை யாவும்.

ஒளிந்துளேன் நான் என் மலருக் குள்ளே

உலர்ந்து தேயுது அம்மலர் உன் கும்பாவில்

உறுதியாய் நேச உணர்வு என்மீ துனக்கு
ஏறக் குறைய ஏகாந்த நிலை எனக்கு !

****************

Loneliness             

I hide myself within my flower
That wearing on your breast,
You, unsuspecting, wear me too—
And angels know the rest.

I hide myself within my flower,
That, fading from your vase,
You, unsuspecting, feel for me
Almost a loneliness

**********

எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் -2

யாருமில்லை நான் 

ஆங்கில மூலம் : எமிலி டிக்கின்சன்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

யாரு மில்லை நான் ! யார்  நீ ?

யாருமில் லையா நீயும் ? சரிதான்

நாம் இருவர் எனச் சொல்லாதே !

நாடு கடத்துவர் நம்மைதெரிந்து கொள்.

சிலராய் இருப்பது எப்படி அச்சம் அளிக்குது !

தவளை போல்  வாழ்வு  பொதுவானது ?

வாழ்நாள் முழுதும் உன்பேர் சொல்வது

புழுதி பூசிப் புகழ்வது  போன்றது !

************************

“I’m nobody! Who are you? 
Are you nobody, too? 
Then there’s a pair of us—don’t tell! 
They’d banish us, you know. 

How dreary to be somebody! 
How public, like a frog 
To tell your name the livelong day 
To an admiring bog!” 

***************

எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் -3

வெற்றி 

ஆங்கில மூலம் : எமிலி டிக்கின்சன்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

வெற்றி தேன்போல் இனிக்கும்

தோல்வியே ன்றும் அடைவோர்க்கு !

ருஞ்சுவை தனை உணர்ந்து கொள்ள

பெரும் புண் பட் டிருக்க வேண்டும் !

வெற்றிக் கொடி ஏந்தும் காக்கி உடை

வீரன் எவனும் இன்றைய தினம்

விளக்கிச் சொல்ல இயலாது

தெளிவாய் வெற்றி யாதென்று !

தோற்கும் நிலையில் மடிகிறவன்

கேளாத காதில் தெளிவாய் விழாது

வெற்றிக்கு ஆரம்ப மெய் ருத்தம்,

வேதனை முறிவுமனக்கொ திப்பு.

******************

Success is counted sweetest

By those who ne’er succeed.

To comprehend a nectar

Requires sorest need.

Not one of all the purple Host

Who took the Flag today

Can tell the definition

So clear of victory

As he defeated – dying –

On whose forbidden ear

The distant strains of triumph

Burst agonized and clear!

*******************

Series Navigationசக்கரங்கள் நிற்பதில்லை! – மெல்பனில் நடந்த மல்லிகை ஜீவா நினைவரங்கு !  ஒரு பார்வைநிழலில்லாத மரம்……
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Comments

  1. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    Shrink the width please

    எமிலி டிக்கின்ஸன் வாழ்க்கை

    பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த எமிலி டிக்கின்ஸன் அமெரிக்கக் கவிஞர்களுக்குள் ஓர் உன்னதப் படைப்பாளியாகக் கருதப் படுபவர். கல்லூரிப் படிப்பு படித்து திருமணம் பண்ணிக் கொள்ளாது தனிமையாய் வீட்டுக்குள்ளே வாழ்ந்தவர். தாயார் நோயில் கிடக்க அருகில் உறுதுணையாய் இருந்து காலம் கழித்தவர். அடிக்கடி நோய்வாய்ப்பட்டு கல்லூரிக்குச் சரியாகச் செல்லா விட்டாலும் சிறப்பான மாணவியாய்ப் பெயரெடுத்தவர். அவர் மனவாட்டத்தில் [Depression] வேதனைப் பட்டவர்.

    எமிலி சிறுவயது முதலே சின்னஞ்சிறு கவிதைகளை யாருக்கும் தெரியாமல் எழுதிக் கொண்டு வந்தவர். ஏராளமான எண்ணிக்கையில் அவர் எழுதிய கவிதைகள் உயிருடன் உள்ள போது சிலமட்டும் பதிவாகிப் பெரும்பான்மை வெளிவராமல் முடங்கியே கிடந்தன. அவரது முழுக் கவிதைப் படைப்புகள் 1800 எண்ணிக்கையில் செத்த பிறகே, அவரது சகோதரி கண்டுபிடித்து அச்சில் ஏற்றப்பட்டன.

    எமிலியின் கவிதைகள் அவரது ஆழ்ந்த சிந்தனைக் காவியங்களே. மிகக் கூரிய நோக்காளர். ஆழ்ந்து சிந்திப்பவர். அவரது கவிதைகளில் வரும் கற்பனை வடிவங்கள் இயற்கை, ஆத்மா, மதம், மரணம், சட்டம், சம்பிரதாயம், நேசம், பாசம்,காதல், இசை, கலாச்சாரம், நாகரீகம் போன்றவற்றில் இருந்து தோன்றியவை. பெரும்பான்மையான பாக்களில் வரும் “நான் என்பது தான்தான். அவரது கவிதைகளில் அவரே உட்கரு நாயகி. நான் என்னும் தன்னிலையில் தன்னையும் குறிப்பிடுகிறார். பிறரையும் சுட்டிக் காட்டுகிறார். தலைப்பிடாத கவிதைகளே பெரும்பாலும் எழுதி வந்தார். பாக்களின் முதல் வரியே தலைப்பாகும். சரியான சொற்கள் கிடைக்கும் வரை சொற்களை மாற்றிக் கொண்டே இருப்பார். தேன்போல் இனிக்கும் அவரது முத்துப் பாக்கள் படிக்கப் படிக்கத் திகட்டாதவை. பச்சை மரத்தில் அடித்த ஆணிபோல் மனதில் பதிந்து விடுப்வை. எளிதில் மறக்க முடியாத கவிதைகள்.

    +++++++++++++++++++

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *