எமிலி டிக்கின்சன் கவிதைகள் – 29

This entry is part 6 of 14 in the series 27 மார்ச் 2022

 

A Narrow Fellow in the Grass –29 

 

புல்லில் போகும் பாம்பு 

 

மூலம் : எமிலி டிக்கின்சன் 

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா 

 

 

ஒடுங்கிய பாம்பு ஒன்று புல்தரையில் 

ஊர்ந்து செல்லும் எப்போ தாவது 

எதிர்வரக் காண்பாய் நீ, இல்லையா ? 

நடுக்கம் தரும் ஓர் திடீர் காட்சி அது ! 

 

புல்தரையைப் பிரிக்கும் சீப்புபோல் 

புள்ளித் தண்டு நெளிவது தெரியும் 

பிறகு காலைப் பின்னிக் கொண்டு 

உதறினால் அவிழ்ந்து முன் நழுவும். 

 

Stanzas One and Two 

 

A narrow fellow in the grass 
Occasionally rides; 
You may have met him—did you not 
His notice sudden is, 

 

The grass divides as with a comb, 
A spotted shaft is seen, 
And then it closes at your feet, 
And opens further on. 

 

 ஈரமுள்ள தளம் அதற்குப் பிடிக்கும் 

பேரளவு குளிர்த் தரையும் பிடிக்கும் 

சிறுவன் என் வெறுங் காலைப் பன்முறை தொட்டுச் செல்லும்  பட்டப் பகலில். 

 

விலகிப் போன தென நினைத்தேன்  

வெய்யிலில் அது மெதுவாக நகரும். 

காத்திட அதைப் பிடிக்கக் குனிந்தேன்  

சுருண்டு கொண்டு பிறகு போனது. 

 

Stanzas Three and Four 

 

He likes a boggy acre, 
A floor too cool for corn, 
But when a boy and barefoot, 
I more than once at noon 

Have passed, I thought, a whip lash, 
Unbraiding in the sun, 
When stooping to secure it, 
It wrinkled and was gone. 

 

இயற்கை ஜீவன் பற்பல அறிவேன் 

என்னையும் நன்கு  அறியும் அவை. 

கவலை கொள்வேன் மெது நகர்ச்சிக்கு 

கனிவுடன் அவற்றை நான் விலக்குவேன் 

 

அதன்பின் பார்க்க வில்லை அதனை 

சேர்ந்தோ அல்லது தனியா கவோ  

அச்ச மின்றி, பெருமூச் சின்றி, 

நச்சு ஜீவனை  உணர்வு எலும்பின்றி. 

 

 

Stanzas Five and Six 

 

Several of nature’s people 
I know, and they know me; 
I feel for them a transport 
Of cordiality. 

But never met this fellow, 
Attended or alone, 
Without a tighter breathing, 
And zero at the bone. 

 

************************ 

Series Navigationஉக்ரைன் மீது ரஸ்யாவின் ‘கைப்பர்சோனிக்  ஏவுகணைத்’ தாக்குதல்ரஸ்ய அதிபர் புதினுடைய சொத்து மதிப்பு என்ன தெரியுமா?
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Comments

 1. Avatar
  S. Jayabarathan says:

  மூலம்: எமிலி டிக்கின்சன்
  தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

  எமிலி டிக்கின்சன் கவிதைகள் – 29:

  புல்லில் போகும் பாம்பு

  ஒடுங்கிய பாம்பு ஒன்று புல்தரையில்
  ஊர்ந்து செல்லும் எப்போ தாவது
  எதிர்வரக் காண்பாய் நீ, இல்லையா ?
  நடுக்கம் தரும் ஓர் திடீர் காட்சி அது !

  A narrow fellow in the grass
  Occasionally rides;
  You may have met him—did you not
  His notice sudden is,

  புல்தரையைப் பிரிக்கும் சீப்புபோல்
  புள்ளித் தண்டு நெளிவது தெரியும்
  பிறகு காலைப் பின்னிக் கொண்டு
  உதறினால் அவிழ்ந்து முன் நழுவும்.

  The grass divides as with a comb,
  A spotted shaft is seen,
  And then it closes at your feet,
  And opens further on.

  ஈரமுள்ள தளம் அதற்குப் பிடிக்கும்
  பேரளவு குளிர்த் தரையும் பிடிக்கும்
  சிறுவன் என் வெறுங் காலைப் பன்முறை
  தொட்டுச் செல்லும் பட்டப் பகலில்.

  He likes a boggy acre,
  A floor too cool for corn,
  But when a boy and barefoot,
  I more than once at noon

  விலகிப் போன தென நினைத்தேன்
  வெய்யிலில் அது மெதுவாக நகரும்.
  காத்திட அதைப் பிடிக்கக் குனிந்தேன்
  சுருண்டு கொண்டு பிறகு போனது.

  Have passed, I thought, a whip lash,
  Unbraiding in the sun,
  When stooping to secure it,
  It wrinkled and was gone.

  இயற்கை ஜீவன் பற்பல அறிவேன்
  என்னையும் நன்கு அறியும் அவை.
  கவலை கொள்வேன் மெது நகர்ச்சிக்கு
  கனிவுடன் அவற்றை நான் விலக்குவேன்

  Several of nature’s people
  I know, and they know me;
  I feel for them a transport
  Of cordiality.

  அதன்பின் பார்க்க வில்லை அதனை
  சேர்ந்தோ அல்லது தனியா கவோ
  அச்ச மின்றி, பெருமூச் சின்றி,
  நச்சு ஜீவனை உணர்வு எலும்பின்றி.

  But never met this fellow,
  Attended or alone,
  Without a tighter breathing,
  And zero at the bone.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *