பிரபஞ்ச மூலம் யாது ?

This entry is part 5 of 9 in the series 4 டிசம்பர் 2022

சி. ஜெயபாரதன், கனடா 

 

அண்ட கோள்களை 

முட்டை யிட்டு 

அடைகாக்கும் கோழி ! 

ஆழியில் பானைகள் வடித்து 

விண்வெளியில் 

அம்மானை ஆடுவாள் 

அன்னை ! 

பூமி சுற்றியது 

பூதக் கதிரோனால் ! 

கடல் அலை உண்டாக்கும் நிலா. 

மானிடப் 

பிறப்பும் இறப்பும் 

ஒரு சுழற்சி. 

பேச்சும் மூச்சும் 

மானிட வளர்ச்சிக்கு ! 

இளமை  

பொழுது புலர்ச்சி  

முதுமை  

அந்திம தளர்ச்சி.  

இரவு, பகல், மாதம், வருடம் 

பருவ கால நிகழ்ச்சி. 

பிறந்தவை யாவும் ஒருநாள் 

இறப்பவை .  

உலகில் பிறப்பும் இறப்பும் 

உருவாக்கும் 

ஒற்றை 

பிரம்மாண்ட சக்தி எது ? 

பிறப்பும் 

இறப்பு மில்லாத 

ஏகாந்த பூரணி  

தனித்துவ படைப்பாளி 

நிரந்தர 

பிரபஞ்ச மூலம் எது ? 

Series Navigationஷேக்ஸ்பியர் நாடகம் ஒத்தல்லோகுழந்தைகளை கொண்டாடுவோம்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *