புத்தாண்டு பிறந்தது !

புத்தாண்டு பிறந்தது !

  சி. ஜெயபாரதன், கனடா  புத்தாண்டு பிறந்தது ! நமக்கு புத்தாண்டு பிறந்தது ! கடந்த ஆண்டு மறையுது, கரோனா கடும் நோய் தடம் இன்னும் விரியுது ! உயிரிழந்த சடலங்கள் குவிப்பு வேலை இல்லா மக்கள் தவிப்பு உணவின்றி எளியோர் மரிப்பு சாவோலம் எங்கும் நாள் தோறும் கேட்கும் ! ஈராண்டு போராட்டம் தீரா வில்லை இன்னும் !     அத்துடன் பூகோளம் சூடேறி பேரழிவுகள் நேர்ந்து விட்டன ! பேரரசுகள் போகும் திசை தெரியாது ஆரவாரம் எங்கும் ! பேய்மழை, பேரிடர், பெருந்தீ மயம்,, பிரளயக் காட்சிகள் !   …

சோளக்கொல்லை பொம்மை

க.வெள்ளிங்கிரி. கவிழ்ந்த பானைத் தலையில் கண் காது வைத்து வரைந்த முகம்! நிறம் இழந்த சட்டை அணிந்து நிமிர்ந்து நின்றான் நித்திரையற்று! பொம்மை வடிவில் பூமியைக் காத்தவன் போன இடம் தெரியவில்லை! அவன் இருந்த இடமெல்லாம் திருஷ்டி பொம்மைகள் திரண்டு நிற்குது…

மோதிடும் விரல்கள்

க.வெள்ளிங்கிரி       தாலிகட்டும் திருமணத்தில் தன் பங்கும் வேண்டுமென, வட்ட வாய் குடம் முழுதும் வயிறு முட்ட குடித்த நீரில், வளையமாய் வார்க்கப்பட்டவன் விளையாட்டாய் ஒளிந்து கொண்டான்! தம்பதியின் தவிப்புடனே மோதிடும் விரல்கள் மோதிரம் தேடுது!    …

ஆதலால் காதல்செய்வோம்…

செ.புனிதஜோதி   காதல்கவிதைஎழுத கொஞ்சம் காதலும் தேவைப்படுகிறது...   எழுத்துக்கள் மோகத் தறியில் நெய்யப்படக் காதல் அவசியமானதாகத்தான் உள்ளது...   சோம்பலான மூளையை சுறுசுறுப்பாக்க சோமபானமாய் காதல் அவசியமானதாகத்தான் உள்ளது...   சிறைப்பட்ட இதயவாசலில் பட்டாம்பூச்சி பறக்க காதல் அவசியமானதாகத்தான் உள்ளது...…