சோதாசன்
1967 தமிழகத்தின் வரலாற்றின் முக்கியமான வருடம்.
1962 ல் காங் தடுமாற ஆரம்பித்த சூழல் ஆரம்பித்தது.
தொடர் காலங்களில் பக்தவத்சலம் முதல்வாகி காமராஜர் காங் மத்திக்கு செல்கிறார்.
அதன் பின் வரும் தேர்தலில் 1967 ல் காங் தனித்துப் போட்டியிடுகிறது. முதலியார் வகுப்பைச் சேர்ந்த பக்தவத்சலம் பெரும் நிலக்கிழார். அதே கெத்துடன் சமரமற்ற ஓர் நிலைப்பாட்டில் இருக்கிறார்.
ஒரு பக்கம் அர்சிப் பிரச்சனை எலிக்கறியை காங் தின்னச் சொன்னது எனும் செய்திகள்.
மறுபக்கம், எம் ஜி ஆர் சுடப்படுகிறார்.
எம் ஜி ஆர் சினிமாப் பாடலகள் தமிழகமெங்கும் ஒலிக்கின்றது.
ஆஸ்பத்திரி படுக்கையில் இருக்கும் எம் ஜ் இஆர் வேட்புமனு தாக்கல் செய்கிறார். அண்ணா அவர்கள், எம் ஜி ஆரின் புகைப்படம் போதும் வெற்றி பெற என துல்லியமாக கணிக்கிறார்.
காமராஜர் தன்னை சுற்றியிருந்த முக்கிய காங் நிர்வாகிகளிடமிருந்து தூரப் போயிருந்த நேரம்.
இச் சூழலில் ,
திமுக புத்திசாலித்தனமான முடிவெடுக்கிறது.
எல்லா துண்டு துக்கடா கட்சிகளைக் கூட விட்டு விடாமல் கூட்டணி அமைக்கிறது.
முக்கிய அங்கமாக, கம்யூ, டாய்லர்ஸ் பார்ட்டி எனும் பெயர் கொண்ட வன்னியர்களின் கட்சி,
ஆனால் இதெற்கெல்லாம் முத்தாப்பாய் இருந்தது எந்த திமுக பிறாமணர்களின் எதிரி கட்சி எனும் சித்தரிப்பில் இருந்த தோ அந்த திமுக கூட்டணியில், சுதந்திரா கட்சி இணைந்தது .
காமராஜர் மேல் கொண்ட வன்மத்தை ஓர் காரணமாக ராஜாஜி நிலைப்பட்டின் நிலைக்கு காரணமாகச் சொல்லலாம்.
காங் கூத்தாடிப் பயலுக என்ற காமராஜர் அடித்த கமெண்டை மறந்து சிவாஜி – பத்மினி ஜோடியை பிரசாரத்திற்கு பயன்படுத்தியது.
ஆனால், அந்தப் பக்கமோ அர்ப்பணிப்புள்ள எம் ஜி ஆர், கலைஞர் எஸ் எஸ் எஸ் எனும் ஆளுமைகள்.
திமுக அதிரி புதிரி வெற்றி.:
179 ஸீட்கள் திமுக பெற்று வெற்றி வாகை சூடுகிறது
51 ஸீட் காங்கிரஸிற்கு.
ஆனால், பதிவான வாக்குகளில் திமுக பெற்றது 40.69 % ஆனால் ஸீட்கள் 179
காங் பெற்றது 41.10 % ஆனால் ஸீட்கள் 51 .
இது தான் ஜனநாயக மெஜாரிட்டி மைனாரிட்டி முறை வாக்கு சதவிகித முறையிலான தேர்தல் நிலை.
எது எப்படி அனலைஸ் செய்தாலும், திமுக வென்றது ,அதன் பின் கழுதை தேய்ந்த கதையாக
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் என ஸீட் டீல் வாங்கும் நிலை.
விதிவிலக்காக காங் மானம் காத்தது பின்னாளில் மூப்பனார் மட்டுமே.
அப்புறம் எம் ஜி ஆர் வந்ததும் இருக்கிற ஓட்டுகள் பெருவாரியாக திமுக அதிமுக என்றே இருக்கிறது.
கொஞ்சம் கொஞ்சமாக காங் தேய அந்த இடத்திற்கு பாஜக வந்துள்ளது. ஆனால் காங் வரமுடியும் என்பது இங்கிருக்கும் காங் ஆட்களுக்குத் தெரிந்தாலும் டில்லி நை ஹை என்று சொல்லிவிட்டது போலும்.
இப்படியான சூழலில், வேலெடுத்த முருகன் போய், இப்போது அண்ணாமலை.
தமிழக அரசியல் களம் அதிர ஆரம்பிச்சது, அண்ணாமலையை ரஜினி கைவிட்ட பின்னர், பாஜக இணைத்துக் கொண்ட பின்னர் தான்.
அணில் பார்க்கும் போதெல்லாம் செந்தில் பாலாஜியை நினைக்க வைத்தார் அண்ணாமலை.
பேசினார் பேசினார், மைக் இல்லாத நிலையிலும் பேசினார்.
அந்தப் பேச்சை கொஞ்சம் நிறுத்தி இருக்க வேண்டும்,
செயலாற்றல் செய்து அணில் செய்த ஊழல் இது தான் என கோர்ட்டில் வழக்கு செய்திருக்க வேண்டும்
செய்தாரா..?
செய்து நீதியை நிலை நாட்டினாரா?
இல்லையே?
அப்புறம்?
கமலஹாசன், அரசியலில்.
கார்ப்பரேட் அரசியலும் கிடையாது கனிவான அல்லது கண்டிப்பான அரசியலும் இல்லாமல், மைய்யமாக ஓர் அரசியல்.
பல திசையிலும் இருந்து திரண்டு வ்ந்து சேர்ந்தவர்கள், தேர்தல் முடிவின் பின்னே எட்டுத்திக்கும் சிதறிச் சென்றார்கள்.
அவரும் தேர்தல் முடிந்த பின்னொரு நாளில் ஸ்டாலின் முன்னே போய் அமர்ந்தார்.
விக்ரம்… வாங்றோம் என்றானது அவர் கதை.
அதிகாமாக கிண்டலுக்கு உள்ளானார்.
பாரத தேசிய அளவில் அதிகமான கிண்டலுக்கு உள்ளான ராகுல் காந்தியுடன் டில்லியில் நடந்தார். தன்னை காந்தி பேரன் என்றார். நேருவின் பேரன் நாம் , புரிகிறது ஆனால் இதென்ன கமல் விடும் கரடி எனப் புரியாமால் ராகுல் சிரித்தார்.
ஆனால் ஒன்று
வரும் தமிழக தேர்தல் களம், இனி கமல் போடும் வியூகத்தில் தான் திசை மாறி செல்லும்.
எப்படி 1967 ல் ராஜாஜி அய்யங்கார், தன்னை கிண்டல் விட்டவர்களை தோற்கடிக்க கொல்லுகபட்டர் என்று சொன்னவர்களையே ஆதரித்து, காங்கிரஸை கொன்றாரோ, அதே போல் தான்
இனி கமல்ஹாச அய்யங்கார்,
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் என விட்டு விடக் கூடாது என திமுகவின் வெற்றியை உறுதிப்படுத்த வியூகம் வகுப்பார்.
அதன் ஆரம்பம் தான், ராகுலுடன் கை கோர்த்து நின்றது.
இனியெல்லாம்… சுகமே….
என
உறவுகள் தொடர்கதை என பாடியவாரே இனி உதயநிதியை அரிஜுனாக் கொண்டு சாரதி நிலை காண்பார்.
இது புரிந்து அண்ணாமலை , தன் நிலை அர்ஜூனனா இல்லை கண்ணனா இல்லை டபுள் ரோல் செய்பவரா என முடிவு செய்ய வேண்டும்.
எடப்பாடி நிலை வலிமையை அண்ணாமலை புரியாவிட்டால், கமல் பிரம்மாஸ்திரம் இல்லாமலே வெல்வார்,
ஒன்று பார்த்தீர்களா,
அன்று ராஜாஜி திமுகவுடன் இணைந்த நாள் கடந்து 60+ வருடம் ஓடியும் தமிழகம் பிறாமணாட்கள் முன்னிலையில் தான்….
பேருக்குத் தான் இங்கு எதிர்ப்புகள்’
எதிர்பார்ப்பு பேராசைகளில் எல்லாம் நீர்த்து போகும் என்பதே
காலச்சக்கரம் நசுக்கி கட்ந்து ஓடும் நிதர்சனம்.
(சோதாசன்)
- புற இயக்கி !
- அந்தக்கரணம்
- ஆணவம் கன்மம் ….
- இசை!
- பாலையும் சிலப்பதிகாரமும்
- மறுபடியும் 1967 , வரலாறு ரிபீட் ஆகுமா ? ராஜாஜி – கமல்