ஷேக்ஸ்பியர் நாடகம் ஒத்தல்லோ அங்கம் -1 காட்சி -2 பாகம் -3 

This entry is part 2 of 11 in the series 15 ஜனவரி 2023

 

வெனிஸ் கருமூர்க்கன்

[ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்]
தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா

++++++++++++++++++++++++

[ வெனிஸ் கருமூர்க்கன் ]

அங்கம் -1 காட்சி -2 பாகம் : 3

++++++++++++++++

நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன]

ஒத்தல்லோ : வெனிஸ் சாம்ராஜிய இராணுவ ஜெனரல் [கருந்தளபதி] [45 வயது]

மோனிகா : செனட்டர் சிசாரோவின் மகள். ஒத்தல்லோவின் மனைவி [25 வயது]

புருனோ : ஒத்தல்லோவின் இராணுவச் சேவகன் [30 வயது]

காஸ்ஸியோ : ஒத்தல்லோவின் புதிய லெஃப்டினென்ட். [30 வயது]

ஷைலக் : செல்வந்தச் சீமான் மகன்

சிசாரோ : மோனிகாவின் தந்தை.வெனிஸ் செனட்டர் [60 வயது]

எமிலியோ : புருனோவின் மனைவி.

மான்டேனோ : சைப்பிரஸ் தீவின் கவர்னர்.

பயாங்கா : காஸ்ஸியோவின் கள்ளக் காதலி.

மற்றும் டியூக் ஆஃப் வெனிஸ், சாம்ராஜிய படைவீரர், இத்தாலியப் பொதுமக்கள்.

நிகழ்ச்சிகள் நடப்பது இத்தாலிய வெனிஸ் நகரம், மத்தியதரைக் கடல் & சைப்பிரஸ் தீவு

++++++++++++++++++

image.png
மோனிகா & ஒத்தல்லோ

[தொடர்ச்சி]

ஒத்தல்லோ: [படையினரைப் பார்த்து] புறத்தே நிற்பீர். இந்த ஆணை என் ஆட்களுக்கும், மற்றோருக்கும். நான் சண்டைக்கு தயாராக இருந்திருந்தால், தூண்டுபவன் தேவை இல்லை எனக்கு. உங்கள் புகாருக்கும், வினாவுக்கும் பதில் உரைக்க நான் என்ன செய்ய வேண்டும் ?

சிசாரோ: [கோபம் மிகுந்து] உன்னைச் சிறைக்குள் தள்ள வேண்டும் உன் அடாத செயலுக்கு.

ஒத்தல்லோ: அதை நான் ஏற்றுக் கொண்டால்., டியூக் உதவிக்கு நான் தேவைப்படும் போது டியூக்கும் அவரது சகாக்களும் என்ன செய்வார் ?

அதிகாரி: அது உண்மைதான் ஜெனரல். உங்களை அழைத்து வர அவரே ஆட்களை அனுப்பி உள்ளார்.

சிசாரோ: என்ன ? இந்த நள்ளிரவில் டியூக் தன் அரசியல் ஆலோசகருடன் மன்றத்தில் உள்ளாரா ? [தன் உறவினர் முன்] ஒத்தல்லோவை இங்கு கொண்டுவந்து நிறுத்துங்கள்…. பிரச்சனை பெரியது. எந்த டியூக்கும் இதைத் தவறு என்று நினைக்காது ஏற்றுக் கொள்வான்.


ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்
அங்கம் -1 காட்சி -3 பாகம் : 1

இடம் : அரசவை மன்றம்
நேரம் : இரவு வேளை
பங்கு கொள்வோர் : வெனிஸ் நகர டியூக், செனட்டர்கள், விளக்கேற்றிய மாளிகை.

டியூக் : இந்தப் புகார் எல்லாம் நம்பக் கூடிய முறையில் முழுமை பெற்றதாக இல்லை.

முதல் செனட்டர் : ஒன்றுக்கொன்று முரண் பாட்டில் உள்ளது. என் தகவல் மனுவில் 107 அறிக்கைகள் தந்திருக்கிறேன்.

டியூக் : என்னுடைய அறிக்கைகள் 140

இரண்டாம் செனட்டர்: எனது அறிக்கைகள் 200. எண்ணிக்கை வேறு பட்டாலும் புகார் அத்தனையும் ஊகிக்கப்பட்டவை. ஆனால் அவற்றில் கருத்து ஒற்றுமை உள்ளது. அதாவது சைப்ரஸ் தீவை நோக்கி துருக்கியின் போர்க்கப்பல்கள்
அணிவகுத்து நெருங்குகின்றன.

டியூக்: அது நம்பக் கூடிய தகவல்தான். முக்கிய எச்சரிக்கை உண்மை.

கடற்படை வீரன் : [அறை உள்ளே அலறல். ஐயகோ, ஐயகோ, ஐயகோ கப்பல் படை எடுப்பு]

[படை வீரன் உள்ளே வருகிறான்]

டியூக் : என்ன நடக்குது அங்கே ?

படைவீரன் : எனக்கு கட்டளை, மேலதிகாரி ஆஞ்சலோ, வெனிஸ் அரசாங்கத்திடம் எச்சரிக்க வேண்டியது. சைப்ரஸ் தீவை நோக்கி துருக்கியின் போர்க்கப்பல்கள் அணிவகுத்து
நெருங்குகின்றன.

[தொடரும்]

Series Navigationகனவு மேகங்கள்நியூட்டன் படைப்பு விதிகள் !
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *