வெங்கடேசன். ரா
அது என் கல்லூரி காலம். நான் பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கியிருந்த காலமூம் கூட. நான் அனுதினமும் கல்லூரி சென்று வர, என் தந்தை எனக்கு தரும் பணம் இரண்டு ரூபாய். நான் காலையில் கல்லூரிக்கு புகைவண்டியில் செல்ல ஒரு ரூபாய் , திரும்பி பேருந்தில் வர ஒரு ரூபாய் என , ஆக மொத்தம் இரண்டு ரூபாய். சில நேரங்களில் அவரிடமே பணம் தட்டுபாடு ஏற்படும் போது , அன்றைய தினம் அதுவும் கிடைக்காது.
கேன்டீன் டீ ஐம்பது காசு , முறுக்கு பாக்கெட் ஐம்பது காசு , சைக்கிள் ஸ்டாண்ட் வாடகை ஐம்பது காசு என்று என்னுடைய தினப்படி தேவைகள் அதிகம் இருந்தாலும் , அவற்றை எல்லாம் ஒரு ஏக்க பெருமூச்சுடன், கையில் காசில்லாமல் கடந்த தினங்களே அதிகம். இப்படி எத்தனையோ ஏக்கங்கள் , நிறைவேற்ற இயலாத ஆசைகள் , என சொல்லிக்கொண்டே போனால் , அவை ரயில் பெட்டிகளின் நீளத்தையே மிஞ்சும். என் பதின்ம வயது காலத்தின் எச்சங்கள் அவை.
ஒரு இரண்டு ரூபாய் கையில் கிடைத்தால் போதும் , இந்த உலகமே என் வசமானதொரு எண்ணம் மேலோங்கும்.
கல்லூரி காலத்தில் , பருவ வயதில் எத்தனையோ பேர் எதை எதையோ தேடி கொண்டு இருக்க, நான் மட்டும் விதி விலக்கா என்ன…..
ஆம் , நான் தினமும் காத்து கிடந்து , ஆசை ஆசையாய் தேடித் திரிந்து , அவள் என் கையில் சிக்க மாட்டாளா என்று ஏங்கி, அணுஅணுவாய் ரசித்து காதலித்த, என் கல்லூரி காதலி , அந்த இரண்டு ரூபாய் மட்டுமே…….
- இரு கவிதைகள்
- ஓ மனிதா!
- அகழ்நானூறு 13
- மகாத்மா காந்தி மரண நினைவு நாள் [1869-1948]
- காங்கேசந்துறை குருநாதசுவாமி கோயில் குடமுழுக்கு
- இரண்டு ரூபாய்….
- இரவுகள் என்றும் கனவுகள்.
- கொங்குபகுதி சிற்றிதழ் ஆசிரியர்கள் ஓவியங்கள் கண்காட்சி
- இரண்டாம் தொப்பூழ்க் கொடி
- படித்தோம் சொல்கின்றோம்: மதுரையின் முழுமையான வரலாற்றை பேசும் அ. முத்துக்கிருஷ்ணனின் தூங்கா நகர் நினைவுகள்
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 287 ஆம் இதழ் வெளியீடு- அறிக்கை
- புத்தகம்: இந்திரனது தமிழ் அழகியல்
- பிரபஞ்சம் எப்படித் தோன்றியது ?
- முத்தப் பயணம்
- சருகு
- நித்தியகல்யாணி
- தேர் வீதியும் பொது வீதியும்…
- ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -1 காட்சி -2 பாகம் : 4
- வேரில் பழுத்த பலா
- நெய்வேலி பாரதிக்குமாரின் மனித வலியுணர்த்தும் எழுத்துகள்