புதுப்புனல்
(சமூக – இலக்கிய மாத இதழ்)
திரு.ரவிச்சந்திரன்
புதுப்புனல் பதிப்பகம்
தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு சிறுபத்திரிகைகள் முக்கியப் பங்காற்றியுள்ளன. சிற்றிதழ்களின் விரிவாக்கமான இடைநிலை இதழ்கள் தோன்றியுள்ளன எனலாம். முதலில் பன்முகம் பிறகு புதுப்புனல் என்று தமிழ் இலக்கிய வெளியில் புதுப்புனல் பதிப்பக உரிமையாளர் ரவிச்சந்திரனின் பங்கு கணிசமானது. சிறுகதைத்தொகுப்புகள், மொழிபெயர்ப்புகள், கவிதைத்தொகுப்புகள், திறனாய்வுக்கட்டுரைகள் என நூற்றுக் கணக்கான நூல்களை புதுப்புனல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தமிழின் குறிப்பிடத் தக்க புதின எழுத்தாளர் எம்.ஜி.சுரேஷின் புனைவு, அ-புனைவு நூல்கள் நூல்கள், புதுமைப்பித்தனின் நூல்கள், கோவை ஞானியின் நூல்கள், திரு.மூஸா ரஸாவின் குறிப்பிடத்தக்க ஆங்கில நூலான IN SEARCH OF ONENESSஇன் தமிழ் மொழிபெயர்ப்பு( ஒருமையைத் தேடி) போன்ற பல குறிப்பிடத்தக்க தமிழ் நூல்களை புதுப்புனல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
திரு.ரவிச்சந்திரன் ஒரு நிறுவனத்தில் தொழிலாளியாகத் தான் பணியாற்றிய அனுபவங்களை கைக்குள் பிரபஞ்சம் என்ற சிறு நாவலாக எழுதியிருக்கிறார். ஆரம்பத்தில் கவிதைகளும் எழுதியிருக்கிறார். பண பலமோ, அதிகாரவர்க்கத்தவர் களின் அணுக்கமோ இல்லாதபோதும் இலக்கியத்தின் மீதுள்ள ஆர்வம் காரணமாக பதிப்பகத்துறையில் பல்வேறு இன்னல்களுக்கிடையில் தொடர்ந்து இயங்கிக்கொண் டிருக்கிறார் திரு.ரவிச்சந்திரன்.
சாந்தி ரவிச்சந்திரன்
புதுப்புனல் பதிப்பகம்
அவருடைய மனைவி சாந்தி பதிப்பக முயற்சிகளில் அவருக்கு உறுதுணையாக இருந்துவருகிறார். சாந்தி நூலகம் என்ற பிரிவில் சிறுவர் கதைகளையும் பிரசுரித்துக் கொண்டிருக்கிறார். இடையில் வராமலிருந்த புதுப்புனல் இலக்கிய மாத இதழ் இனி தொடர்ந்து வரும் என்று நம்புவோம். தற்போதைய தமிழக அரசு சிற்றிதழ்களையும் அரசு நூலகங்களுக்கு வாங்குவதாகத் தகவல் கிடைத்தது. தகவலைத் தெரிவித்த சிறுபத்திரிகையுலகத் தோழர் ஒருவர் ‘போட்ட காசு திருப்பி வந்தாலே போதுமானது. அடுத்த இதழைக் கொண்டுவர முடியும்” என்று ஆர்வத்தோடு கூறினார். புதுப்புனல் பதிப்பகத்தாருக்கும் அரசின் இந்த உதவி கிடைக்கவேண்டும்.
- சொல்வனம் 289 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை
- மூளையின் மூளை
- அகழ்நானூறு 16
- கசக்கும் உண்மை
- ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -1 காட்சி -2 பாகம் : 9
- வெளிச்சம்
- தில்லிகை சிறப்பு நிகழ்வு அழைப்பிதழ்
- எல்லாத்துறையிலும் ஒரே கடல்
- பிரபஞ்ச ஒளிமந்தை [Galaxy] இயக்குவது நியூட்டனின் புலப்படா புற இயக்கி [External Dark Force]
- மரம் என்னும் விதை
- வெயிலில்
- புதுப்புனலின் இலக்கியப் பங்களிப்பு
- நூல் அறிமுகம் – 1: அலிஃப் லைலா வ லைலா எனும் 1001அரேபிய இரவுகள் உயிர்மை வெளியீடு தமிழில் : சஃபி
- நூல் அறிமுகம் – 2 CULTURE LITERATURE PERSONALITIES _ A COLLAGE By Dr.K.S. SUBRAMANIAN
- ரிஷி (லதாராமகிருஷ்ணன்) யின் கவிதைகள்