எல்லாத்துறையிலும் ஒரே கடல்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 8 of 15 in the series 26 பெப்ருவரி 2023

சாந்தி மாரியப்பன்.

எந்தக்குளத்தில் பூத்தாலென்ன

எல்லாத்தாமரைக்கும்

ஒரே மணம்

எந்த உலையில் வெந்தாலென்ன

எல்லா அரிசியிலும்

ஒன்று போல்தான் பசி தீர்கிறது

எல்லாத்தாய்களும் ஒருவளே

குழந்தையின் பசி உணர்வதில்

எந்தத்துறையில் முங்கினாலென்ன

எல்லாத்துறையிலும் ஒரே கடல்

எல்லாச்சாளரங்களின் வழியும்

நுழைகிறது காற்று

உன் என் வியர்வையை ஆற்ற

எல்லாமும் சேருமிடம்

ஒரு புள்ளியில்

பரந்து பிரிவதும் அங்கிருந்தே

பலவற்றிலிருந்து ஒடுங்கியிணைந்தவையெலாம்

சிதறிப்பறக்கின்றன

ஒன்றுதான் ஒன்றுதான் என்றபடி

அன்புடன்,

Series Navigationதில்லிகை சிறப்பு நிகழ்வு அழைப்பிதழ்பிரபஞ்ச ஒளிமந்தை [Galaxy] இயக்குவது நியூட்டனின் புலப்படா புற இயக்கி [External Dark Force]
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *