வெளிச்சம்

author
0 minutes, 2 seconds Read
This entry is part 6 of 15 in the series 26 பெப்ருவரி 2023

ஆர். வத்ஸலா

இரவு கூட்டி வந்து விட்டது

முழு நிலவையும்

கையோடு

இன்னும் சில மணி நேரத்தில் தூக்கில் தொங்கப் போகிற

அவன்

மனைவி குழந்தைகளின் நினைவில்

அமிழ்ந்துப் படுத்திருந்தான்

தரையில்

உயர் சாளரத்தின் வழியே

எட்டிப் பார்த்தது நிலவு

அவன் செய்திருந்த குற்றத்தில் இருந்த

நியாயத்தை

அவனது

ஏழ்மையை

நீதிமன்றம் நியமித்த வழக்கறிஞரின்

அக்கறையின்மையை

அறிந்த அது

அவனைத்

தழுவி ஆசுவாசப் படுத்த யத்தனித்தது

தனது வெளிச்சத்தால்       

Series Navigationஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -1 காட்சி -2 பாகம் : 9  தில்லிகை சிறப்பு நிகழ்வு அழைப்பிதழ்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *