18வது திருப்பூர் சக்தி விருது 2023 விழா

This entry is part 19 of 22 in the series 26 மார்ச் 2023

” பெண் அடிமைத்தனத்தில் இருந்து மீண்ட வரலாறு உண்டு. ஆனால் முழுமையாக அவள் மீளவில்லை. பெண்கள் வெளித்தோற்றத்தில் உயர்வு பெற்றதாக தெரிகிறது. பதவி உயர்வு பெற்றது, குடும்பத்தில் சில பொறுப்புகளை அடைந்தது, சமூகத்தில் சில நிலைகளை அடைவது வேறு வகையில் தோற்றம் கொள்கின்றன, ஆனால் பெண் அப்படியெல்லாம் பெரிதாக மாறுதலுக்குள் உட்படவில்லை குடும்பமே பெண்ணை மீட்டெடுக்க வேண்டு,ம் சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் விஷயங்களுக்கு பதிலடிதான் பெண்கள் எழுத்து பெரியார் ஒவ்வொரு பெண்களும் இருக்கிறார் என்பதைத் தான் பெண்களிம் மறுமலர்ர்சி நடவடிக்கைகள் சொல்கின்றன. எதற்காக எழுத வேண்டும் என்றால் குடும்பத்தின் தளைகளில் இருந்து பெண்ணை விடுவிப்பதற்கும் அதை தீர்வை தன் அனுபவங்களில் மூலம் செல்வதற்கும் பெண்ணே எழுத வேண்டிருக்கிறது ” என்று  எழுத்தாளர் அகிலா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சக்தி விருது 2023 விழாவில் விருதைப்  பெற்றுக் கொண்டு பேசும்போது  தெரிவித்தார். விருது பெற்ற பிற எழுத்தாளர்கள் தங்களின் எழுத்து அனுபவங்களை விரிவாக எடுத்துரைத்தனர்.

18வது திருப்பூர் சக்தி விருது 2023 விழா

19/3/23 மதியம் மணிமுதல் இரவு மணி வரை

மக்கள் மாமன்ற நூலகம்டைமண்ட் திரையரங்கு முன்புறம்,

மங்கலம் சாலை,  திருப்பூர் நடைபெற்றது

0

16 பேருக்கு சக்தி விருது வழங்கப்பட்டது விருது பெற்றோர் :

ஐ.கிருத்திகா,அகிலா கிருஷ்ணமூர்த்தி, செ.இராஜேஸ்வரி,,,                      ஜெயந்தி கார்த்திக்,கோ.லீலா,, ப.கற்பகவள்ளி, ஜெய்சக்தி,  சி ஆர் .மஞ்சுளா,          ஆர். ராஜம்மாள்,அவ்வை நிர்மலா,, விஜி வெங்கட், பூமதி என். கருணாநிதி, சூலூர் ஆனந்தி,, சர்மிளா, தியானி, இறைவி

0

அமரர்  ஆர்சண்முக சுந்தரம் நினைவு  விருது:

சீனிவாசன் நடராஜன் சென்னை எழுத்தாளர்ஓவியர் ) பெற்றார்

0

சுப்ரபாரதிமணியனின் “ புலி வால் பிடித்தக் கதைகள்  ”  நேர்காணல்கள்

நூல் வெளியீடு : நூலை ஜீவன் நடராஜன் வெளியிட எல் அய். சி .,  சிவராமன் பெற்றுக்கொண்டார்

0

தூரிகை சின்னராஜ் அவர்களின் ஓவியக்கண்காட்சி  நடைபெற்றது

0

திருப்பூர் முத்தமிழ்ச்சங்கம்மக்கள் மாமன்றம், கனவு  ஆகியவை இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தின.

தலைமைகேபிகே பாலசுப்ரமணியம்                                                   ( செயலாளர் திருப்பூர் முத்தமிழ்சங்கம்)

Series Navigationநாவல்  தினை – அத்தியாயம் ஏழு (CE 5000 CE  1900)காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் திருவிழா
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *