பேச்சுரிமை – எழுத்துரிமை – கருத்துரிமை

This entry is part 21 of 22 in the series 26 மார்ச் 2023

அவர் எனக்கு எதிரி

அவரை எனக்குப் பிடிக்காது

ஆகவே அவரைப் பற்றி என்னவேண்டுமானாலும் அவதூறு பேசுங்கள்

அவருடைய அன்னை தந்தை பிறப்பு ஊர் படிப்பு உச்சரிப்பு

எதை வேண்டுமானாலும் பகடி செய்யுங்கள் பழித்துக்கூறுங்கள்

அவரை மட்டந்தட்ட மதிப்பழிக்க body-shaming செய்ய உங்களுக்குப் பரிபூரண உரிமையுண்டு.

அரசியல் சாசனத்தில் இல்லையென்றால் என்ன

ஆயத்த வழக்கறிஞர் குழு இருக்கிறதே

அதனால்

அதிகம் யோசிக்காமல் அவரை எத்தனைக்கெத்தனை அசிங்கமாக வசைபாட முடியுமோ அத்தனைக்கத்தனை பாடுங்கள்

சுருதிபேதங்கள் அதிகரிக்க அதிகரிக்க உங்கள் பாடல்களுக்கு மவுசு கூடுமென்பதை அறியாதவரா நீங்கள்.

ஆனால் அதுவே என் விஷயத்தில் விமர்சனம் செய்யப் புகுந்தால்

வகிந்தெடுத்துவிடுவேன், எச்சரிக்கிறேன்.

பேச்சுரிமை கருத்துரிமையென்று என் விஷயத்தில் பேசினீர்களென்றால்

அதன்பின் பேச வாயிருக்காது உங்களுக்கு. புரிந்துகொள்வீர்களென்று நம்புகிறேன்.

Series Navigationகாரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் திருவிழாவஞ்சனை சொல்வாரடீ, கிளியே
author

லதா ராமகிருஷ்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *