This entry is part 8 of 12 in the series 17 ஏப்ரல் 2023

ஆர். வத்ஸலா

என்னை உதறி விட்டு

போய் விட்டாய்

வெகு தூரம்

அது உன் உரிமையென

ஏற்றுக் கொண்டாலும்

துடித்தோய

ஓராண்டாயிற்று

உதறிய காரணம் கூறப் படாததால்

இதுவோ

அல்ல அதுவோ

எனக் குடைந்து

குதறப்பட்ட

மனப்புண் ஆற

மேலும் ஆறு மாதம்

இப்பொழுது

புண்ணில்லை

வலியில்லை

வலியிலும்

உன் மேல் கோபமில்லை

ஒரே ஒரு ஆசை

ஒரே ஒரு முறை

யாராவது ஒருவர்

உன்னை உதறி

செல்ல வேண்டும்

காரணம் கூறாமல்

ஒரே ஒரு கணம்

நான்

அனுபவித்ததை

அனுபவிக்க வேண்டும்

நீ

Series Navigationஇலக்கியப்பூக்கள் 277ஆசை 2