செ.புனிதஜோதி
அண்டைவீட்டுக்காரியின்
பால்கனியை
என் சாளரத்தின் வழியே
இறக்கிப்போட்டு விளையாடுகிறது
நிழல்
தொட்டிச்செடியில்
அசைந்தாடும் மலர்கள்
கொடிகயிற்றோடு
உறவாடும்
உடைகள்
கூண்டுகிளியென
என் வரவேற்பறையில்.
நிஜத்தை நிழற்படம் எடுத்து
ஒட்டிக்கொண்டிருக்கிறது
ஒளிப்படக்காரனாய்
அவர்கள்
என் வீட்டிற்குள்ளிருந்துதான்
அவர்கள்
வீட்டிற்குள் செல்கிறார்கள்
அன்னியர்கள் வந்துசெல்வது
அச்சமாகத்தான் இருக்கின்றன.
என் வீட்டிலுள்ள எந்த அறையை
யார் வீட்டிற்குள் கிடத்தி
விளையாடுகிறதோ ?
யாரிடமும் அனுமதி
பெறாமல்
பொம்மையைக் கண்டவுடன்
விளையாடும் குழந்தையாய்.
நிழல்
நிஜத்தின்
முகத்தை
அறிமுகம் செய்துகொண்டிருக்கிறது
அவரவருக்கு அறியாமல்
மிரட்டவோ,விரட்டவோ
முடியாமல் ரசிகையாகி்க் கொண்டிருக்கிறேன்.
செ.புனிதஜோதி
- 80,000 புத்தகங்கள் கொண்ட தியாகு வாடகை நூலகம்
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 294 ஆம் இதழ்
- அம்மாவின் செல்லம்
- அடையாளம்
- வாய்ச்சொல் வீரர்களும் ”வாழ்க வாழ்க” வாயர்களும்
- ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- திருமதி.மீனாட்சி சுந்தரமூர்த்தி எழுதிய அயல்வெளிப் பயணங்கள் நூல் திறனாய்வு
- நிழலின் இரசிகை
- காற்றுவெளி வைகாசி இதழ்
- இடைவெளி
- பகுப்புமுறைத் திறனாய்வினடிப்படையில் குரு அரவிந்தனின் சிறுகதைகள்
- நாவல் தினை அத்தியாயம் பதினான்கு CE 300 பொது யுகம் 300