80,000 புத்தகங்கள் கொண்ட தியாகு வாடகை நூலகம்

This entry is part 1 of 12 in the series 14 மே 2023

80,000 புத்தகங்கள் கொண்ட தியாகு வாடகை நூலகம்

ஆதரிப்பார் யாரும் இல்லாததால் 

64 வருட நூலகத்திற்கு மூடுவிழா

இப்படியொரு பதிவை ஃபேஸ்புக்கில் கவிஞர் கனியமுது அமுதமொழி யின் டைம்லைனில் படிக்க நேர்ந்தது. கோவையில் உள்ள தியாகு நூலகம் மூடப்படலாகாது. இது குறித்த யூட்யூப் காணொளியையும் பார்த்தேன் // https://youtu.be/3sm-_zoLUGM மிகவும் வருத்தமாயிருந்தது. இது குறித்து கவிஞர் தமிழ்நதி (யாழ் நூலகம் எரிக்கப்பட்ட ஆறாத்துயரத்தை சுமந்துகொண்டிருக்கும் கவிஞர் தமிழ்நதி உட்பட தமிழ் எழுத்தாளர்கள் பலரும் இந்த நூலகம் மூடப்படலாகாது என்ற கருத்தை அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கிறார்கள்; செய்கிறார்கள்; செய்வார்கள்

வாசிப்பை நேசிக்கும் அனைவரும் கைகொடுப்போம்

கீழே கவிஞர் கனியமுது அமுதமொழியின் பதிவு தரப்பட்டுள்ளது

………………………………………………………………………………………………………………………..

மிகவும் வருந்துகிறேன். 

  • கனியமுது அமுதமொழி

உலகம் முழுவதும் உள்ள வாசகர்கள் இந்த நூலகத்தை மூட விடாமல் இருக்க தங்களால் முடிந்த பொருள் உதவியை நல்கினால் மிகவும் உபயோகமாக இருக்கும். 

நான் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர். என் சார்பாக அப்படி ஒரு முன்னெடுப்பினை தியாகு அவர்கள் எடுத்தால் எனது பங்களிப்பாக ரூபாய் 10,000/-( பத்தாயிரம் ) வழங்கத் தயாராக உள்ளேன் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். தொகை சிறியது தான். ஆனால் சிறுதுளி பெருவெள்ளம் என்று நம்புகிறேன். 

நான் கைப்பேசியில் கூறியது போல் முயற்சி செய்யுங் கள் தோழர் தியாகு. 64 வருட உழைப்பு என்பது கிட்டத் தட்ட இரண்டு தலைமுறை கனவும் உழைப்பும்.

சமயவேல் ஐயா சொன்னது போல உங்களுக்கு தகுந்த இழப்பீடு அளித்து விட்டு இதை அரசுடமையாக்க ஆவன செய்யப்பட்டாலும் மகிழ்ச்சி. 

நூலகங்களை அறிவுசார் பொக்கிஷங்களாக எதிர் வரும் சந்ததியினருக்கு விட்டுச் செல்வதில் நம் அனைவருக் கும் ஒரு கூட்டு பொறுப்புள்ளது. 

ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி அடுத்த தலைமுறைக்கென்று ஒரு புத்தகம் கூட போடாதவர்கள் ஒரு மரத்தை எங்கே நடப்போகிறார்கள் என்று சொல்லுவார். 

நாம் புத்தகம் போட வேண்டாம். மரம் கூட நட வேண்டாம். 64 ஆண்டுகளாக இயங்கி வரும் (தனிமனித உழைப்பின் ) சமூகம் சார் அடையாளத்தை இல்லாமல் ஆகும் நிலையிலிருந்து காப்பதற்காக வாசகர்களாக நம்மால் ஆனதை நம் வாசிக்கும் நேசத்தின் வெளிப் பாடாக செய்வது பல தலைமுறைகளுக்கு உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

உள்நோக்கம் எதுவும் இல்லை. ஒரு நூலகம் மூடப் படும் பொழுது ஒரு வாசகியாக ஏற்படும் பதட்டமே இந்தப் பதிவுக்கு காரணம். 

#கனியமுதுஅமுதமொழி 

Series Navigationசொல்வனம் இணையப் பத்திரிகையின் 294 ஆம் இதழ்
author

லதா ராமகிருஷ்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *