சி. ஜெயபாரதன், கனடா

சூரிய மண்டலத்தில்
பூமி, நிலா
கடல், காற்று, கதிர்க்கனல்,
புல்லினம், உயிரினம், புள்ளினம்,
மானிடம் அனைத்தும்
காரண நிகழ்ச்சி.
ஆரம்பம் உள்ள நிகழ்வுகள்.
இறுதி முறிவு
எந்திராப்பி முடிவு.
அதுவின்றி
எதுவும் இயங்காது !
அண்ட சராசரங் களை
தொட்டிலில்
ஆட்டுவது அன்னை.
முற்பிறப்பு
இருந்தால்தான்
இப்பிறப்பு
நிகழும்.
இறப்பில் முடியும்
இப்பிறப்பு.
ஆன்மாவுக்கு
பிற்பிறப்பு உள்ள தென
ஞானிகள் கூறுவர்.
முற்பிறப்பு, இப்பிறப்பு
பிற்பிறப்பு
சூரிய குடும்ப மானிட
சுழற்சி !
அணுவோ, அண்டமோ, அகிலமோ
குயவன் கை தூண்டாது
எதுவும்
இயங்காது
சுயமாய் சுழலாது
சூரிய குடும்பத்தில் !
பிரபஞ்ச இடுப்பு வளைவில்
நியூட்டன்
எட்டு வைத்து நடந்தால்
புறப்பட்ட
இடத்துக்கே
தடம் பதிக்க மீள்வான் !
- நில் மறதி கவனி
 - நான் எனதாகியும் எனதல்லவே!
 - வளவ துரையன் – இலக்கியச் செயல்பாடுகளில் இவர் ஒரு தீராநதி.
 - நிறைவு
 - மாசற்ற ஊழியன்
 - புதுவித உறவு
 - நியூட்டன் இயக்கும் பிரபஞ்சம்
 - சகி
 - நாவல் தினை- பதினைந்தாம் அத்தியாயம். மத்தியாங்கம் CE 300
 - பாழ்நிலம்
 - திருமதி.மீனாட்சி சுந்தரமூர்த்தி எழுதிய அயல்வெளிப் பயணங்கள் நூல் திறனாய்வு
 - எப்போதும் சாத்தி கிடக்கும் வீடு