நான் எனதாகியும் எனதல்லவே!

author
0 minutes, 7 seconds Read
This entry is part 2 of 12 in the series 21 மே 2023

பிரகாஷ் தேவராஜு .

‘நான்’ நேசிக்கின்றேன் ….
‘என்’ நண்பர்களை
‘என்’ குடும்பத்தை
‘என்’ மக்களை
‘என்’ நாட்டை
‘என்’ உலகத்தை
‘என்’ பிரபஞ்சத்தை

பிரபஞ்ச வெளியில் பறந்த பின்னரே உணர்கின்றேன்…

‘நான்’ நேசித்த யாவும் எனதில்லை.
‘நான்’ அவற்றினுள்ளே –
கலந்து போன கலவையாய், கரைந்து போன கரைசலாய்.
கண் காணும் காட்ச்சித்துளியை நுண்ணோக்கி பெரிதாக்கி காட்டுவது போலே –
இந்த மகா பிரபஞ்சத்தின் மீச்சிறு துளி நான்!
நான், நீ, உன்னுடன், என்னுடன் இருக்குமனைத்தும்!
மழைத்துளி மண்ணில் சேர்ந்து ஓடையாய், சிற்றாறாய், பேராறாய், கடலாய், சமுத்திரமாய் – ஆவது போலே ,
உயிரானதும், உயிரற்றது மான துளிகளிணைந்து, துளி நீர் சமுத்திரமாவது போலே –
‘நான்’ நேசித்த பிரபஞ்சம் எனதாகியும் எனதல்லவே!
அதனுள்ளே ‘நான்’ அடங்குமே!

Series Navigationநில் மறதி கவனிவளவ துரையன் – இலக்கியச் செயல்பாடுகளில் இவர் ஒரு தீராநதி.
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *