This entry is part 12 of 14 in the series 28 மே 2023

ஆர் வத்ஸலா

வீட்டினுள் கைது

கதவில் பூட்டில்லை

கையில் விலங்கில்லை

துப்பாக்கியுடன் யாருமில்லை

பார்க்கப் போனால்

“வீட்டை விட்டுப் போடீ”

என ஓங்கும் அதிகாரக் குரல் காதில்

அவ்வப்பொழுது

நிசப்தத்தை கிழித்துக் கொண்டு

ஆசைதான்

ஆனால்

தூக்கம் கலைந்து

ஓலமிடத்‌ தயாராகும் சிசு 

மடியில் 

பூவிலங்காய்

Series Navigation  நாவல்  தினை              அத்தியாயம் பதினாறு     CE 300இடம்