வழி

This entry is part 4 of 6 in the series 23 ஜூலை 2023

வளவ. துரையன்

பார்த்துக் கொண்டிருக்கும்போதே 

மறைந்து போகின்ற 

பச்சைக் கிளிபோல்தான் இது.

இரு கைகளையும் 

குளம்போல் குவித்துவைத்து 

ஏந்தினாலும் விரலிடுக்குகளின் 

வழியே கசியும் போகும் 

நீர்தான் இது.

இறுதியில் ஓர் இலை கூட 

இல்லாமல் வீணே 

பட்டமரமாய் நிற்கிறது.

நன்றாக ஆடிக்கொண்டிருக்கும் 

நல்ல ஊஞ்சலும் 

நின்றுதானே ஆக வேண்டும்.

உள்ளே வந்துவிட்ட 

பட்டாம்பூச்சி வெளிச் செல்ல 

மூடப்பட்ட சன்னல்களில் 

முட்டி முட்டிப் பார்ப்பதைப்போல 

முயல்கிறாய் நீ.

அதை அதன் போக்கிலே 

அவ்வப்போது விட்டுவிடு. 

வழிகிடைக்கும்

Series Navigationமுதியோர் காப்பக  நுழைவு அனுபவம் – 4வலசையில் அழுகை
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *