This entry is part 2 of 8 in the series 6 ஆகஸ்ட் 2023

ஆர் வத்ஸலா

உறவின் மேல் கொட்டிய பாசம்

பாறையில் வீழ்ந்த நீராய் ஓடிவிட்டது

துணையின் மேல் பொழிந்த காதல்

பாலையில் வீழ்ந்த நீராய் காய்ந்துவிட்டது

ஆரவாரமில்லாமல் தோன்றின நட்புக்கள்

அவற்றில் கணக்குகளில்லை

நான் கொடுத்தது

நினைவிலில்லை 

இருப்பது

நினைக்கும்போதேல்லாம்

நிறைந்து போகும்

நெஞ்சம்தான்

Series Navigationஅகில உலகில் அணு ஆயுதப் போர்களின் அச்சமும், அணு ஆயுதக் குறைப்பிலே அகில தேச உடன்பாடுகளும்முதியோர் இல்லம் கட்டுரைத் தொடருக்கு என் வாழ்த்துகள்