ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்யா நிலவுப் போட்டியில் முந்தி வெல்ல லூனா -25 நிலவுத் தளவுளவி ஏவியுள்ளது

This entry is part 1 of 11 in the series 13 ஆகஸ்ட் 2023

Posted on August 12, 2023

ரஷ்யன் லூனா -25

இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் தென்துருவ நிலவுத் தடவைப்புப் போட்டி

சி. ஜெயபாரதன், கனடா

ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு நிலவுத் தட வைப்பு தென்துருவப் போட்டியில் சந்திரயான் -3 இந்திய விண்சிமிழை முந்திச் செல்ல, ரஷ்யா லூனா -25 [LUNA -25] நிலவுத் தளவுளவியை 2023 ஆகஸ்டு 8 ஆம் ஏவியுள்ளது. நிலவு நோக்கிப் பயணம் செய்யும் ரஷ்யாவின் நிலாத் தளவுளவி ஆகஸ்டு 23 ஆம் தேதி நிலவை நெருங்கும் என்று ஏவப்பட்டுள்ளது. வேகமாய் இயங்கும் ரஷ்ய விண்சிமிழ் ஏவுகணை நிலவை 5 அல்லது 6 நாட்களில் நெருங்கும். அடுத்து அது 3 அல்லது 7 நாட்களில் 100 கி.மீ [60 மைல்] உயரத்தில் நிலவைச் சுற்றி, தரையில் இறங்கும். இதுவரை நிலவில் இறங்கித் தளவூர்தி தவழ்ந்த முப்பெரும் வல்லரசுகள் அமெரிக்கா, ரஷ்யா, சைனா ஆகியவையே. ஆனால் எந்த நாடும் துணிந்து நிலவின் தென்துருவத்தில், இதுவரை இறங்கிய தில்லை. தென் துருவத்தின் இருண்ட குழிப் பிரதேசத்தில் நீர்ப்பனி இருப்பு பலவித உலோகங்கள் இருப்பு இந்த நாடுகளை ஈர்த்துள்ளன. பனிக் குன்றுகளின் நீரிலிருந்து எரிசக்தி ஹைடிரஜன், ஆக்சிஜென் வாயுக்கள் பிரித்தெடுத்து பிற்காலத்தில் ராக்கெட் ஏவு எரிசக்தி தயாரிக்கலாம். இந்த தொழில் நுணுக்கப் பந்தயத்தில், வெற்றி பெறுவது ரஷ்யாவா அல்லது இந்தியாவா என்று காணப்போவது ஒரு வரலாற்று சாதனை யாகக் கருதப்படும்.

https://www.thespacereview.com/article/2228/1
https://www.russianspaceweb.com/luna_resurs.html

edition.cnn.com/2023/08/10/world/russia-luna-25-launch-scn/index.html

Series Navigationகுறைந்த நிதிச் செலவில் புரியும் அரிய நிலவுப் பயணத் திட்ட முயற்சிகளில் இந்தியா ஒரு முன்னணி நாடாய் நிற்கிறது

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *