ஆதிவாசி கேரளர்கள் என்று கேரள இடதுசாரி அரசாங்கம் செய்யும் இனவெறித்தனம்

This entry is part 8 of 8 in the series 5 நவம்பர் 2023

human zoo போல மனிதர்களை அடைத்து ஐரோப்பிய மேற்குடி மக்களுக்கு காட்சி படுத்திய காலனியாதிக்கத்தை விதந்தோதும் முரசொலி பத்தி எழுத்தாளர்களுக்கு ஆதர்சமாக இருக்கும் இடதுசாரி கேரள அரசாங்கம், கேரள பழங்குடியினர் என்ற பெயரில் சிலருக்கு வேடமிட்டு கேரளீயம் கொண்டாடுகிறார்கள்.

இதுதான் அந்த கேரள பழங்குடியினராம்.

இடுப்பில் நார்களை கட்டிகொண்டு முரசுகளை வைத்துகொண்டு கழுத்தில் வினோதமான சங்கிலியை அணிந்துகொண்டு முகத்தில் ஏதோ கேரளாவுக்கு சம்பந்தமில்லாத டிசைன்களில் வரைந்துகொண்டு இருக்கும் இவர்கள்தான் கேரள பழங்குடியினராம்.

எந்த கேரள பழங்குடியினர் இது போல உடையணிந்து முக அலங்காரம் செய்துகொண்டு அலைகிறார்கள் என்று காஸாவுக்காக பொங்கும் இடதுசாரிகள் சொன்னால், தெரிந்துகொள்வேன்.


ஏற்கெனவே ஒரு பழங்குடியின கேரளர் அடித்தே கொல்லப்பட்டபோது அவரை கட்டி வைத்து அடித்து கூடவே செல்ஃபி எடுத்துகொண்ட 100 சதவீதம் படித்த நாகரிகம் அடைந்த இடதுசாரி கேரளம் ஆயிற்றே? மறக்க முடியுமா? அப்படி கொல்லப்பட்டவர் கூட இப்படி அலங்காரம் செய்திருக்கவில்லை போல இருக்கிறதே.

இப்படிப்பட்ட பழங்குடியினரை 100 சதவீத படிப்பறிவு கொண்டதோடு கூடவே அகில உலக நாகரீகம் கொண்டவர்களான கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் சென்று வேடிக்கை பார்த்து போட்டோ எடுத்துகொள்கிறார்கள்.

கேரள இடதுசாரி அரசாங்கம் இப்படி செய்திருப்பதற்கும் ஐரோப்பிய காலனியாதிக்கத்தினர் ஆப்பிரிக்க மக்களை விலங்குகள் போல கூண்டில் அடைத்து அவர்களை வெள்ளைக்காரர்களுக்கு காட்சி படுத்தி நகையாடியதற்கும் எந்த வித வித்தியாசமும் இல்லை.

தீ இந்துவிலும் இதர டெக்கான் ஹெரால்டிலும் இந்த மாதிரியான கொண்டாட்டங்களை பார்த்து புல்லரித்து விதந்தோதி பாராட்டு மழை பொழிவிக்கிறார்கள்.

கேரளா மாநிலம் தோன்றியதை வாரம் முழுவதும் இப்படி கொண்டாடுகிறார்களாம்.

இதுவே பாஜக ஆளும் மாநிலத்தில் செய்திருந்தால், அறிவுஜீவி கொளுந்தர்கள் பற்றி எரிந்திருப்பார்கள்.

இது ஐரோப்பிய கலாச்சாரம் தவிர, கிறிஸ்தவ கலாச்சாரம் தவிர மற்ற அனைத்தும் ஆன்ந்த்ரபோலஜியால் ஆராயப்படும் மியூஸியம் பொருட்கள்தானே?

இது காலனியாதிக்கத்தை விதந்தோதும் இடதுசாரி அரசாங்கம் ஆயிற்றே. பாராட்டாமல் எப்படி இருக்கமுடியும்?

Series Navigationஒரு சாமான்யனின் ஒரு நாள் சலனங்கள் – 2
author

சின்னக்கருப்பன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *