This entry is part 2 of 2 in the series 7 ஜூலை 2024

யாருமற்ற பெருவெளியில் 

சுயம்பாய் கிடந்தார் முனி.

பக்கத்துல ஓடும் வெண்ணாத்தங்கரை .

நீண்டுயர்ந்ந அரசமரம் 

காலதேவனின் சாட்சியாக. 

வரும்போகும் தலைமுறைக்கு 

குலதெய்வம் குடியிருந்த 

ஊர்க்கதைகள் ஏராளம்.

சாராயம்,சுருட்டு

பொங்க சட்டி, பொரியும் தான்

முனிக்கு முடிகொடுத்து 

ஊர் திரும்பும் ஆசாமிகள். 

மரத்தசுத்தி மாடுமேய்கும் 

பெரிசுகளுக்கு கண் எல்லாம் படையல் மேல்தான். 

சாராய பாட்டில் தேடி 

கிடாய் கறிக்கும் 

பருந்தாய் சுற்றும் 

பரிதாபமாய்!

  – ஜெயானந்தன் 

Series Navigationபத்துப் பொருத்தம்