மரம்

மரம்
Healthy trees grow lots of branches and leaves -- their canopy -- as thickly as they can, to gather all the sunlight they need. (Dreamstime/TNS)
This entry is part 1 of 10 in the series 14 ஜுலை 2024

எந்த மரத்திலோ

எந்தப் பூவும்பூச்சியும்

முயங்கியதில்

இந்தக் கனியோ

அந்தக் கனியை

எந்தக் காக்கையோ

கொத்தி விழுங்கி

கழித்த மலத்தில்

விழித்த விதையில்

முளைத்து வந்ததோ

இந்த மரம்

உயிர்களுக்கு வீடாய்

குடை நிழலாய் அடடா!

மரம் அறியும்

எங்கிருந்து எப்படி

ஏன் வந்தோமென்று

அமீதாம்மாள்

Series Navigationகவிதைகள்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *