This entry is part 6 of 6 in the series 8 ஜூன் 2025

ஒரு தேன் சிட்டுக்கு காத்து நிற்கின்றேன் 

மலர்களின் மடியில். 

வாழ்க்கை என்ன 

நாம் அழைத்தால் வருவதா!

அதன் மடியில் 

நாம்தான் மண்டியிடுகின்றோம்.

ஒவ்வொரு பொழுதும் 

ஒவ்வொரு கதைச்சொல்லும் 

அதில் 

ஆனந்தமும் வரும் 

அழுகையும் வரும் 

எங்கோ 

தூரத்தில் தெரியும் 

வெளிச்சம் சிலருக்கு. 

அருகே வரும் 

சிலருக்கு. 

தினம்தினம் எழுந்து 

தினம்தினம் விழுந்து 

பயிரிட வந்துள்ளோம்.

காத்துக்கிடக்கும் 

காடும் மலையும் வனமும். 

நீ 

சம்சாரியாகவும் போகலாம் 

சந்நியாசியாகவும் மாறலாம் 

எல்லாம் 

ஒரு 

பெண் கையில் 

சக்தியாக 

காத்துக்கிடக்கும் 

வாழ்க்கை.

   -ஜெயானந்தன். 

Series NavigationThug Life திரைப்படம் – என் குறிப்புகள்