Posted inகதைகள்
சந்திரமுக சகமனுஷி
1 _ அநாமிகா நீண்ட நேரமாக அந்த நடைவழி சுவர் ஒரமாகவே நின்றுகொண்டிருந்தாள். பெண் என்றும் சொல்லமுடியாத பெண்மணி என்றும் சொல்ல முடியாத 30 வயதின் விளிம்பைத் தொட்டிருப்பவளாகத்தோன்றியது, கதையில், கவிதையில் ,நிலா முகம், என்று வாசிக்கநேரும்போதெல்லாம் மனதில்அறிவுபூர்வ, தர்க்கபூர்வ சிரிப்பாய் ஒன்று தோன்றும். அதெப்படி அத்தனை திருத்தமான வட்டமாய் ஒருமுகம் இருக்க முடியும்? அதுவும், நிலவின் ’இரண்டறக் கலந்த’ அம்சமான கறையும் இருக்க வேண்டுமே- அதுவும் அழகா என்ன....’ அறிவு என்பது எல்லாவற்றின் சகலவிதமான சாத்தியப்பாடுகளுக்கும் தன்னை திறந்துவைத்திருப்பது.இறுக மூடிக்கொண்ட நிலையில் ’இதுதான், இது மட்டும்தான் இங்கே சாத்தியம்; சாத்தியமாகும்;சாத்தியமாக வேண்டும்’ என்று மண்டையின் உள்ளெங்கும் கனமேறி அதன் விளைவாய் இறுதியில்கவிழ்ந்தே யாகவேண்டிருப்பதா அறிவு.... ”ஒரு சேர், இல்ல, ஸ்டுல் தரவா உட்காந்துக்க?” சட்டென்று முகத்தில் நெகிழ்வு ததும்ப என்னை நோக்கித் திரும்பி புன்சிரித்தாள். நிலவின் கறை போல்இடது கன்னத்தில் தேமல் படலம் இருந்தது போல் தோன்றியது. நடைவழியின் இந்த முனையில்இருந்த எங்கள் வீட்டில் இருந்து அந்த முனைக்கு அருகில் இருந்த அவளை பாதி நிஜ உருவாகவும்பாதி நிழல் உருவாகவும்தான் காண முடிந்தது அவள் புன்சிரித்தபோது வரிசைப்பற்கள் ஜொலித்தன. A THING OF BEAUTY IS A JOY FOR EVER’ என்ற வரி இருந்தாற் போலிருந்து ஞாபகம் வந்தது. ”பரவாயில்ல, வேண்டாம்மா” ”ரொம்ப நேரமா நிக்கிறீங்களே....” ”பரவாயில்லீங்கம்மா”, என்று மீண்டும் அதே புன்சிரிப்போடு கனிவாய் மறுத்து மறுபுறம் திரும்பி,கால்மாற்றி நின்றுகொண்டாள். அந்தப் பக்கமாக வந்து செக்யூரிட்டி சிவநாதன் மெல்லிய குரலில் என்னிடம் கூறினார்: “வேலையிலிருக்கையில சித்தாள் உட்காரக்கூடாதுமா - மேஸ்திரி கோவிச்சுக்கவாரு” ’அதற்காக எத்தனை நேரம் இப்படி கையில் சிமெண்ட் சட்டியோடு கால் கடுக்கநின்றுகொண்டிருப்பது மாதவிலக்கு நாட்களிலுமா...? அந்தி சாய்ந்து வீடு திரும்பிய பின்கணவருக்கும், குழந்தைகளுக்கும், குடும்பத்தைச் சேர்ந்த வேறு உறுப்பினர்கள் இருப்பின்அவர்களுக்குமாக சுடச்சுட சமைத்துப்போட்டு.... இரவில் கணவன் தினமும் உடலுறவுக்குக்கட்டாயப்படுத்துவானோ.... சே, ஏன் எல்லாவற்றையும் எதிர்மறையாகவே எண்ணவேண்டும்? வீதியின்இருமருங் கிலும் எத்தனை சுடச்சுட பிரியாணி _ பரோட்டா கடைகள்! கணவன் எல்லோருக்குமாகஅன்போடு வாங்கிவரக்கூடும்... நாளும் உழைத்துக் கனிந்த கட்டுடல்களாக இருக்கும் கணவனும்மனைவியும் ’செம்புலப் பெயனீர்போல அன்புடை நெஞ்சமும் தேகமுமாக கூடலில் திளைக்கக்கூடும்...அப்படியே இருக்கட்டும்.....’ அவள்…