This entry is part 1 of 7 in the series 1 மார்ச் 2026

ரவி அல்லது

விரும்பிய வண்ணம் 

விருட்சமாக முடிவதில்லை 

விதைகள் எல்லாம்

மனித அவசரத்தில் 

மாட்டியதால்.

குளிர் மரங்களுக்காக

குந்தி இருந்த

மேகங்கள் 

வேதிச்சாயமொன்று

விரும்பி

அழைத்து வந்தது

வெள்ளக்காடாக

மாறுவதற்கு.

காத்திருந்து

காதலிக்க முடியவில்லை 

துரித கெதியில்

துடிக்கும்

இதயங்கள்

மாத்திரை வில்லைகளில்

மாட்டிக் கிடப்பதால்.

வாலிப வயதில்

வாய்த்தத் தாம்பத்தியம்

வாரிசு நச்சரிப்புகளால்.

விரித்து சுருட்டும்

விடியல்களாகவே

கழிகிறது

ஊர் கூட்டி

ஒட்டிய உறவுகளும் சாரமற்று.

காத்திருந்து

காத்திருந்து

காத்திருந்து 

காணும் சுகம்

மேவ ஆசைதான். 

காலத்தை

இவர்கள் 

வன்புணர்ந்து

வாழ்வை

மாற்றித் தொலையாமலிருந்தால்.

***

-ரவி அல்லது.

ravialladhu@gmail.com

Series Navigationதுணை…