மழை புராணம் – 38
*********************************
நனையாதது ( 5.7.26)
**************************
பெய்த மழையில் நனைந்தது
சாலை மண் ஓரமரம், ஓடும் லாரி மற்றும் பல வர்ணக்குடைகள்
கருப்பு பிரதானம்.
வெளியில் போன
எனக்கு நனைந்தது
சட்டை, தலை, ஐம்பது ரூபா நோட்டு
மற்றும் மொத்த உடம்பும்
இப்ப தான் கடைசியா நினைச்சுப் பார்த்தேன்
மழை ஈரம் நனைக்காத கல்மனசு
உள்ளே ஏன் கனக்குதுன்னு.
– பா.சத்தியமோகன்