This entry is part 2 of 6 in the series 16 ஆகஸ்ட் 2026

                                                – பா.சத்தியமோகன்

மழைப்பேச்சுப் புன்னகை அர்த்தம்

மழைப் பேச்சு கேட்கலாம்
தூறலாகக் கேட்கலாம்
கருணை ஈரம் குறையும் மனிதனை
ஈர நினைவு தோற்றிட
மெலிய பேச்சாக மழைப் பேச்சு கேட்கலாம்
ஊசி நீர்ப்புள்ளிகள் கம்பி கம்பி கோடுகள்
குடை போட்டுத் தடுக்கும் மனிதனையும்
தழுவிப் பேச வருகுது
வாழ்த்த யாரும் இல்லையே வரவேற்கவும் இல்லையே
ஈரம் செய்யும் மழையினை ஈரம் மிகுந்த தினங்களில்
கரித்து தானே கொட்டுவீர்?
கோடை பாயும் தினம் வரும் அன்று நீவீர் ஏங்குவீர்
கிடைக்கும் போது எதுவுமே
அருமை பெருமை புரியுமோ
ஓடுங்கள் ஓடுங்கள் கருணை குறைந்த மனிதரே
மழையைக் கண்டு ஓடுங்கள்
கரப்பான் போல வீட்டுக்குள் புகுந்து கொள்ளுங்கள்.

***

Series Navigationந.முத்துமோகன்: தமிழர் மெய்யியல் வரலாற்றின் தடம் கண்டவர்நீதியும்  நியதியும்