வால்ட் விட்மன் வசனக் கவிதை – 49 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) முழுமை பெற்ற மாதர் .. !

This entry is part 8 of 28 in the series 17 நவம்பர் 2013

  வால்ட் விட்மன் வசனக் கவிதை – 49 

ஆதாமின் பிள்ளைகள் – 3

(Children of Adam)

முழுமை பெற்ற மாதர் .. !

 

walt-whitman 

 (1819-1892)

 

மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சிஜெயபாரதன்கனடா

 

 

 

 

இதுதான் குடும்ப அணுக்கரு !

பெண் ஒருத்தி குழந்தை பெற்றெடுப்பில்

ஆண் மகவையும் ஈன்றெடுப்பாள் !

இதுதான் பிறப்பின் குளிப்பு

பெரியதும் சிறியதும் அவள் மூலம்

இரண்டறப் பின்னிக் கொண்டு,

வெளியே வருவது !

வெட்கப் பட வேண்டாம்

பெண்டிரே !

உமது பிறப்புரிமை பிறரைச்

சூழ்ந்தவை !

அவளே வெளிவாயில்

மற்றோர்க்கு !

நீயே உடம்புக்கு வெளிக்கதவு,

ஆத்மாவின் வெளிக்கதவு !

 

 

பெண்பால் எல்லாப் பண்புகளும்

கொண்டது !

உறுதிப் படுத்துவது !

பெண் தன் பீடத்தில்தான் இருக்கிறாள்;

சீரிய பாங்குடன் நடக்கிறாள் !

எல்லாம் உடையவள்

மூடிய முகத்திரை யிட்டு !

முடக்கம், இயக்கம்

இரண்டும் கொண்டவள்

பெண்டிரைப் பெறுபவள், அத்துடன்

ஆண் மகவையும் பெறுபவள் !

அவளாக

என் ஆத்மா பிரதிபலிக்கும்

இயற்கையில் !

மூடுபனி மூட்டம் மூலம்

நோக்கினால்

மொழியில் கூற இயலாதபடி

முழுமை பெற்ற ஒன்று

அழகுடனே, அறிவுடனே

பார்க்கிறேன் நான் :

குனிந்த தலையுடனே

மார்பில் கைகட்டிய வண்ணம்

மாதரசி ஒருத்தியை !

 

+++++++++++++++++

தகவல்:

1.      The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]

2.       Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm
Cowley  [First 1855 Edition] [ 1986]

3.      Britannica Concise Encyclopedia [2003]

4.      Encyclopedia Britannica [1978]

5.      http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [November 13, 2012]

 

 

****************
S.Jayabarathan [jayabarathans@gmail.com] November 14, 2013

 

http://jayabarathan.wordpress.com/

Series Navigation
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *