Articles Posted by the Author:

 • ஆக  வேண்டியதை…. 

  ஆக  வேண்டியதை…. 

                  ஜனநேசன்      அழைப்புமணி   கூவியது. ‘ இந்தக்  கொரொனா ஊரடங்கும்  தளர்வு ஆகிவிட்டது.  பத்து .மாசமா தள்ளிப்போன கல்யாணம் எல்லாம் நடத்த  ஆரம்பிச்சுட்டாங்க . கொரோனா பயம் முழுசா தீர்ந்தபாடில்லை ; நித்தம்  ரெண்டுபேரு கல்யாணப் பத்திரிக்கையோடு வந்து விடுகிறார்கள். இன்னைக்கு யாரு வராகளோ, போகமுடியுதோ இல்லையோ, கொடுக்கிற   பத்திரிகையை வாங்கித்தானே ஆகணும். ‘ என்று மனைவி முனு முனுத்தபடி ஜன்னலினூடே பார்த்தாள்.                                        “பக்கத்து  வீட்டுக்காரர்  […]


 • அஞ்சலிக்குறிப்பு: விடைபெற்ற தோழர் தா. பாண்டியன் ( 1932 – 2021 )

    ஈழத்தமிழருக்கு ஆதரவாகவும்  –  அடக்குமுறைக்கு எதிராகவும்  ஒலித்த குரல் ஓய்ந்தது !                                                                           முருகபூபதி சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நேற்று 26 ஆம் திகதி உடல்நலக்குறைவால் மறைந்துவிட்ட தோழர் தா. பாண்டியன் அவர்கள், முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் – அதாவது 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதியே இறந்திருக்கவேண்டியவர் ! இதனை வாசிக்கும் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா..? அந்தத் திகதியை எவரும், ஏன் முழு உலகமுமே மறந்திருக்காது. அந்தநாள் எத்தகையது என்பதை […]


 • போதை

  போதை

    பத்மகுமாரி   போதை பொருள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாகிட்டே போகுதாம். இந்த பத்திரிக்கையில் ஒரு கணக்கெடுப்பு போட்டிருக்கு. இந்த பகவான் ‌இதெல்லாம் பார்த்திட்டு கம்முனு தானே இருக்காரு. அநியாயம் முத்தி போச்சுன்னா அவதாரம் எடுப்பேனு சொன்னவர் இவ்ளோ அநியாயம் முத்தின அப்புறமும் என்ன பண்றாரு தெரியல.தன் மனைவியின் இந்த பிதற்றல்களை அமைதியான ஒரு அசட்டு சிரிப்போடு செவி மடுத்து கொண்டிருந்தார் ரங்கநாதன்.அந்த சிரிப்போடு சிறு வேதனையும் ஓரமாய் ஒட்டிக்கொண்டிருந்தது. ‘ஏன் அப்படி சிரிக்ரீங்க??’ ‘ஒன்னுமில்ல’ ‘சரி […]


 • சர்வதேச புத்தகக் கண்காட்சியில் இலங்கை எழுத்தாளரின் நூல்கள்

                    2021 ஆம் ஆண்டிற்கான 44 ஆவது சர்வதேச புத்தகக் கண்காட்சியானது, இந்தியா, சென்னை YMCA நந்தனம் வளாகத்தில் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 09 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கிறது. உலகம் முழுவதிலுமிருந்தும் பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்வில் இலங்கை எழுத்தாளரான எம்.ரிஷான் ஷெரீபின் மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்புகள் மூன்று, நாவல்கள் இரண்டு என புதிய ஐந்து நூல்கள் வெளியாகவிருக்கின்றன.             எம்.ரிஷான் […]


 • கவிதையும் ரசனையும் – 12 – க.வை.பழனிசாமியின் ‘காற்றில் கரையும் கணினி’

  25.02.2021   அழகியசிங்கர்           44வது புத்தகக் காட்சியை ஒட்டில் 100 கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன என்ற குறிப்பை முகநூலில்  படித்தேன்.  பல பதிப்பகங்கள் போட்டிப் போட்டுக்கொண்டு கவிதைப் புத்தகங்கள் வெளியிட்டிருக்கின்றன.             இதைத் தவிரப் பலர் தனிப்பட்ட முறையில் கவிதைப் புத்தகங்களை வெளியிட்டுள்ளார்கள்.  எந்த விளம்பரமும் இல்லாமல் இந்தப் புத்தகங்களும் வராமலில்லை.           டிசம்பர் 2013 அன்று வெளிவந்த க.வை.பழனிசாமியின் ‘காற்றில் கரையும் கணினி’ என்ற கவிதைத் தொகுதி என் கவனத்திற்கு வந்தது.           பழனிசாமி ‘முழுமை பெறாத அனுபவங்கள்’ என்ற தலைப்பில் தன் […]


 • சொல்வனம் இணையப் பத்திரிகையின் 241 ஆம் இதழ்

  சொல்வனம் இணையப் பத்திரிகையின் 241 ஆம் இதழ்

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 241 ஆம் இதழ் இன்று (28/02/2021) வெளியிடப்பட்டது. இது சென்ற இதழைப் போல ஒரு சிறப்பிதழ்- வங்கச் சிறப்பிதழ்-2. இந்த 241ஆம் இதழில் வெளியான படைப்புகள் கீழ் வருமாறு : சிறுகதைகள் வைரஸ்– ஸிர்ஷோ பந்தோபாத்யா: தமிழில்: சிவா கிருஷ்ணமூர்த்தி சுல்தானாவின்கனவு – ருகையா ஷகாவத் ஹுசென்: தமிழில்: நம்பி கிருஷ்ணன் டிஸம்பர்’72ல் ஓர் அந்திப்பொழுது – சுபிமல் மிஸ்ரா: தமிழில்: உஷா வை. சௌவாலி– மஹாஸ்வேதா தேவி: தமிழில்: எம் ஏ சுசீலா தீப்பெட்டி– ஆஷாபூர்ணா தேவி: தமிழில்: நரேன் துக்கம்– ஆஷாபூர்ணா தேவி: தமிழில்: எம் ஏ சுசீலா ஒருகடிதம் – சமரேஷ் மஜும்தார்: தமிழில்: க. ரகுநாதன் ஒருகொலை பற்றிய செய்தி – மோதி நந்தி: தமிழில்: முத்து காளிமுத்து ஊர்மி– ராமநாத் ராய்: தமிழில்: க. ரகுநாதன் நவாப்சாகிப் – பனபூல்: தமிழில்: விஜய் சத்தியா “நஷ்டபூஷணம்” அல்லது காணாமற் போன நகைகள் – ரபீந்திர நாத் தாகூர்: தமிழில்: மஹாகவி பாரதியார் கற்பனையின்சொகுசு – பனபூல்: தமிழில்: மாது தொடர்கதை மின்னல்சங்கேதம் – 2 – பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய்: தமிழில்: சேதுபதி அருணாசலம் இலக்கிய அனுபவங்கள் மரணமின்மைஎனும் மானுடக் கனவு – சுனில் கிருஷ்ணன் குரல்கொடுப்பதிலிருந்து இடம் கோருவது வரை – கூம் கூம் ராய்: தமிழில்: முத்து காளிமுத்து துருவன்மகன் – உத்ரா கவியோகிரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி மொழிபெயர்ப்புக்கள் – த. நரேஸ் நியூட்டன் யசோதராவின்புன்னகை – மீனாக்ஷி பாலகணேஷ் வங்கச்சிறுகதைகள்: அறிமுகம் – சக்தி விஜயகுமார் கலை பாதல்சர்க்காரும் தமிழ் நவீன அரங்கியலும் – அ. ராமசாமி பொடுவாகலைஞர்களின் வங்காள ராமாயண ஓவியங்கள் – ரா. கிரிதரன் பிறகொருஇந்திரஜித்: இந்திய நவீனத்துவ நாடகம் – அ. ராமசாமி பாதல்சர்கார்: இயக்கத்தை அரங்கமைப்பது – அவீக் சாட்டர்ஜீ: தமிழில்: நம்பி கிருஷ்ணன் மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் புத்தெழுச்சிஇயக்கத்தின் ஆவணக்காப்பகங்கள்: வங்காளத்தில் இலக்கியமும், அடையாள அரசியலும் – தீபேஷ் சக்ரபர்த்தி: தமிழில்: மைத்ரேயன் வங்காளவரலாறு – பானுமதி.ந கவிதைகள் […]


 • மாசில்லாத மெய்

  மாசில்லாத மெய்

  லதா ராமச்சந்திரன்    எனது உயிரின் வலி யாருக்குப் புரியும் என்றிருந்த எனக்கு எங்கிருந்தோ ஞானோதயம் வலியின் ஊடே வாழும் இன்பம்  புலம்பல் விடுத்து புன்னகை தவழ  புதுப்புதுத் தேடல் வழியே வாழ்வின் அர்த்தம் கண்டபின் நரகம் சுவர்க்கமாய் மாறிய தருணம் வாழ்க்கை எங்கே? இக்கணத்தில் இன்பம் எங்கே? துன்பத்தில் யாரை மட்டும் சார்ந்ததுன் வாழ்க்கை? உன்னை யாரின் அன்பு உனை நிரப்பும்?  யாரின் அன்பு என்றுமே பொய்க்காது? உன் மீதிருக்கும் உனதன்பு   உன் மதிப்பு யாருக்குத் தெரிந்தால் […]


 • வடக்கிருந்த காதல் – முதல் பாகம்

  வடக்கிருந்த காதல் – முதல் பாகம்

    அழகர்சாமி சக்திவேல்    ஆயர் டேனியல் – திண்டுக்கல்   நீடித்த காலமதாகப் பரன் எமை நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்துப் பாடித் துதி மனமே; பரனைக் கொண் டாடித் துதி தினமே   காம்போதி ராகத்தில், ஆதிதாளத்தில் இயற்றப்பட்டு இருந்த அந்தத் திருச்சபைப் பாடலை,  தேவாலயத்துக்குள்,  ஓரத்தில் இருந்த இசைக்குழு, மனமுருகிப் பாடியது. திருச்சபையை வழிநடத்தும் தலைமை ஆயராகிய நானும் மனமுருகிப் பாடிக்கொண்டே,  வந்திருந்த கூட்டத்தைக் கவனித்தேன். கூட்டத்தில் இருந்த எல்லோரும்,  இசைக்குழு பாடியதற்கு […]


 • திரைகடலோடியும்…

  திரைகடலோடியும்…

    குணா (எ) குணசேகரன் செல்வார் அலர் என்று யான் இகழ்ந்தநனே, ஒல்வாள் அல்லள் என்று அவர் இகழ்ந்தனரே, ஆயிடை இரு பேர் ஆண்மை செய்த பூசல் நல் அராக் கதுவியாங்கு, என் அல்லல் நெஞ்சம் அலமலக்குறுமே       உண்ணும் உணவையும், உடுக்கும் உடையையும் வருமானத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்வது நடுத்தர வர்க்கத்தின் சாதாரண வழக்கம். அடிப்படைத் தேவைக்குள் வீடும் அடங்கியது ஒரு அசாதாரணம். வாழ்நாளுக்குள் எப்படியாவது ஒரு சொந்த வீட்டை வாங்கி […]


 • ரவிசுப்பிரமணியன் “நினைவுக்கடலில் சேகரித்த கவி முத்துகள்” – நூல்மதிப்பீடு

  ரவிசுப்பிரமணியன் “நினைவுக்கடலில் சேகரித்த கவி முத்துகள்” – நூல்மதிப்பீடு

  .                          ஜனநேசன் கவிஞர் ரவிசுப்பிரமணியன் தமிழ்கூறு நல்லுலகிற்கு நன்கு அறிமுகமானவர்.கடந்த நாற்பதாண்டுகளாக. கவிதை எழுதிவருபவர்: சிறந்த படைப்பாளுமைளை ஆவணப்படங்களில் பதிவுசெய்பவராக, இசைஞராக. சங்கப்பாடல்கள் முதற்கொண்டு இன்றைய புதுக்கவிதைகள் வரை மெட்டமைத்து பாடி மேடையேற்றியும்  வருகிறார். இன்றைய சிக்கலான வாழ்வியல் நிலையில் தொடர்ந்து கவிஞராக வாழ்ந்து இயங்குதல் அரிது .தூண்டிலைப் போட்டுவிட்டு ஐம்புலன்களின் கவனத்தைக் குவிமையப்படுத்தி தூண்டிலின் அசைவுக்காகக் காத்திருப்பவர் போல் […]