வளவ.துரையன் படைப்புகள்
பல்லுயிர் ஓம்பல்
வறுமையில் இருக்கும் என்வயிற்றைக் காலியாக்குகிறேன். குதிரை கனைப்பு தளர்கிறது. வயிறு காலியானால் வாய் எல்லாம் வேள்வி செய்யும் ஒரு குவளை மதுகொண்டு நிரப்பிப்பார் தென்றலில் மயங்காமல் தேடித்தேடிக் கொண்டுவா. பல்லுயிர் ஓம்பப்பழகு. யானையின் துதிக்கையில் தானமாகும் தானியங்கள் களிறுகள் எப்போதும் அசைந்து அசைந்து வயிற்றை [Read More]
கோடுகள்
அந்தக் கவிஞன் கோடுகளை முக்கியமாக நினக்கிறான். அவன் இணைகோடுகள் என எண்ணிக் கரம் கோர்த்தவை குறுக்கு வெட்டுக் கோடுகளாய் மாறியது அவனுக்கு ஒரு சோகம். மணமக்களை இணைகோடுகளாய் என்று வாழ்த்துவது என்றுமே சேர முடியாதவர்கள் என்றுதான் பொருள்படும். அப்படி வாழ்த்தப்பட்டவர்கள் இன்று வழக்கு மன்றப்படியில் நிற்கிறார்கள். தண்டவாளங்களும் மேலே தொங்கும் மின்சாரக் கம்பிகளும்தான் [Read More]
நடை
மருத்துவர் அவனைக் காலையில் நடக்கச் சொல்லி விட்டார் நோயில்லை தற்காப்புதான் நடக்கும்போதும் சிந்திக்க வேண்டும் என்பது அவன் எண்ணம் அப்போது புதிய கருத்துகளும் கவிதைகளும் தோன்றும் ஆனால் சரியாக நடக்க வேண்டும் நாம் சரியாக நடந்தாலும் வாகனங்கள் மீது கவனம் தேவை. காலைநடையில்தானே இப்போதெல்லாம் வெட்டுகிறார்கள் வலப்புறம் நடப்பதுதான் சிறந்தது என்பார் ஒரு சிலர் நடை என்றால் [Read More]
”அரங்குகளில் பூத்த அரிய மலர்கள்” – வல்லம் தாஜ்பால் கவிதைகள்
வல்லம் தாஜ்பால் நாடறிந்த கவிஞர். கேட்டோர் பிணிக்கும் தகைமையாய் கேளாரும் வேட்ப மொழிவதாய்ப் பேசும் ஆற்றல் உள்ளவர். நகைச்சுவையோடு கருத்துகளை மனத்தில் பதியவைக்கும் கலை கைவரப் பெற்றவர். எல்லாவற்றுக்கும் மேலாகப் பழகுதற்கு இனிய மனிதநேயம் மிக்க பொதுவுடைமைச் சிந்தனை கொண்ட கவிஞர். அவருடைய ஆறு கவிதைத் தொகுப்புகளுக்குப் பின் ஏழாவது [Read More]
தீ உறு மெழுகு
நெருப்பில் இடப்பட்ட மெழுகு கொஞ்சம் கொஞ்சமாய் உருகிக் கரைந்து இல்லாமல் போகும். மெழுகு முழுதும் கரைந்து போனபின்னும் அந்த இடத்தில் அந்த மெழுகு இருந்ததற்கான அடையாளம் மிஞ்சி நிற்கும். இந்த மெழுகை உவமையாகக் காட்டி ஐங்குறு நூறு ஒரு காட்சியை விளக்குகிறது. தலைவன் ஒருவன் தலைவியை விட்டுப் பிரிந்து பரத்தையர் வழி செல்கிறான், அங்கே அவர்களுடன் தங்கி [Read More]
எஸ்ஸார்சியின் கட்டுரைத் தொகுப்பு – மணக்கும் பூந்தோட்டம்
எஸ்ஸார்சியின் கட்டுரைத் தொகுப்பு அண்மையில் வெளியாகி உள்ளது. சொற்கூடல் என்னும் பெயரில் வெளியாகி உள்ள இத்தொகுப்பில் மொத்தம் 25 கட்டுரைகள் உள்ளன. “அம்பேத்கரைப் பயிலுவோம்” முதல் கட்டுரை விருப்பு வெறுப்பின்றி [Read More]
புள்ளிக்கள்வன்
பண்டைய இலக்கியங்களில் நண்டானது கள்வன், அலவன், ஞெண்டு எனப் பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறது. ஐங்குறுநூறு நண்டைக் கள்வன் எனும் பெயராலே சுட்டிக் காட்டுகிறது. சில நண்டுகளின் மீது புள்ளிகள் இருக்கும். ஆதலால் நண்டைப் புள்ளிக்கள்வன் என்னும் அடைமொழியால் ஐங்குறுநூறு சுட்டிக் காட்டுகிறது. மருதத்திணையின் மூன்றாம் [Read More]
தக்கயாகப்பரணி [தொடர்ச்சி] 191–200
தண்ணார் மதியக் கவிகைச்செழியன் தனிமந்திரிகாள்! முனிபுங்கவர் ஓர் எண்ணாயிர வர்க்கும் விடாத வெதுப்பு இவனால்விடும் என்பது இழிதகவே. ”முழுநிலவின் [Read More]
தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
உவரிப்பரு முத்தம் நிரைத்த திருப் பள்ளிச்சிவி கைப்புடை உம்பர்வர கவரிச் சிறுதென்றல் அசைப்ப மிசைக் கொற்றக் குடைவந்து கவிப்பவுமே. கடலிலிருந்து [Read More]
ஒற்றைப் பனைமரம்
உள்ளே போவதற்குப் பல வழிகள் இருக்கின்றன. எல்லாக் கதவுகளும் திறந்துகொண்டு வருபவரை விழுங்கிவிடக் காத்திருக்கின்றன சிலர் ஏதேனும் ஒருவழி அறிந்து உட்புகுகிறார்கள் அவர்கள் நுழைந்தவுடன் கதவுகள் தாமாக மூடிக்கொள்கின்றன தட்டினாலும் திட்டினாலும் திறக்காதவை அவை அதன் உரிமையாளன் ஆசைக்கயிறு வீசி அலைக்கழிக்கிறான் அதன் காவல்காரனின் கண்களில் உங்களின் வரவு ஆசைக்கங்குகளை [Read More]