கு.அழகர்சாமி படைப்புகள்
பீதி
அலங்கரிக்கப்பட்ட மலர்ப் பாடையிலிருந்து அறுந்து வீழ்ந்து மிதிபட்டு நசுங்கி- வறிய தெருநாய் சாவினை முகர்ந்ததெனும் நறுமாலைகள் சிதறிக் கிடக்க- நகர்ச் சாலையில் சுடலை நோக்கி சாவதானமாய் நகரும் சவ ஊர்வலத்தின் பின் வழி விட- விடாது ஒலி ஒலித்து இங்கிதமற்ற பேருந்து அவசரப்படுத்தும் பதற்றத்தில் பிணம் பயந்ததெனும் பயம் பிணத்தினின் பயமாயிருக்கும்- விழி இடுங்கிப் பிணத்தை [Read More]
மூட முடியாத ஜன்னல்
எங்கேகின வெளியில் புறாக்கள்? சப்திக்கிறதே சடுதியில் மழை புறாக்கள் சிறகடிப்பது போல். மழையோடு மழையாய் மறைந்தனவா அவை? எப்போதும் என்னறையின் ஜன்னலின் பின் அடையும் அவை காணோம். அறை ஜன்னல் திறந்து பார்க்கலாம். ஆனால், எப்படி அறை ஜன்னல் மறைத்துப் பொழியும் நீர் ஜன்னலைத் திறப்பது? மழை ஓய்ந்தால் நீர் ஜன்னல் திறக்கலாம். மழை ஓயத் திறக்க நீர் ஜன்னல் காணோம். எப்போதும் திறக்காத என் அறை [Read More]
இன்னொரு புகைப்படம்
கு.அழகர்சாமி அறிந்தவர் இல்லின் கூடத்தில் மாட்டப்பட்டிருக்கும் அநேக புகைப்படங்கள். அநேக புகைப்படங்களில் தெரியும் அநேக உருவங்கள். அநேக உருவங்களின் நெரிசலில் ஓருருவத்தைத் தேடி- தேடி இல்லாது- இல்லாததால் அறிதலில்லையென்றில்லை என்ற அறிதலில் ஆசுவாசமாகி- அநேக புகைப்படங்களின் மத்தியில் இன்னொரு புகைப்படமானேன் நிச்சிந்தையில் நான். கு.அழகர்சாமி [Read More]
வற்றும் கடல்
கு.அழகர்சாமி ஆர்ப்பரிக்கிறது அது- ஆச்சரியத்தில் ததும்பும் குழந்தையின் விழிகளில் தளும்பி வழிகிறது அது. அலையலையாய்க் குழறுகிறது. அதே போல் குழறுகிறது குழந்தையும். என்ன அது? விடாது வினவுகிறார் தந்தை. உணர்ந்த குழந்தை உச்சரிக்காது திகைக்கிறது. ’கடல்’- கற்பிக்கிறார் தந்தை. வார்த்தை கற்ற குழந்தையின் விழிகளில் வற்றுகிறது கடல். கு.அழகர்சாமி [Read More]
பெருந்தொற்றின் காலத்தில்
கு.அழகர்சாமி (1) ஊரடங்கி நடமாட்டமில்லாமல் வீதி- இருபுற வீடுகளிடையே திடநதியாய் ஓடி சுவடுகள் பதியாது விலாசமிழந்து நிசப்தம் சப்திக்க நடக்க நீட்டித் தலைக்கு வெளியை வைத்து உறங்கி- (2) நாளும் நடந்து- நன்கு தெரியும் என்னை அதற்கு – ஆனால் தெரியாதது போல் கடக்கிறது என்னை வெறிச்சோடிய வீதி (3) “வெளியே” நடை செல்ல முடியாமல்- ஒற்றைத் தென்னை உரைக்கும்: ” நிற்கிற அதே இடத்திலேயே நட என்னைப் [Read More]
செலேடார் ஆற்றின் சதுப்புநில யட்சிகள் – இரண்டாம் பாகம்
சிறுகதை – அழகர்சாமி சக்திவேல் கி.பி 1896, மார்ச் 16 அந்த யட்சி, திரும்பி என்னைப் பார்த்தாள். ஆகா..என்னவொரு சிருங்காரப் பார்வை! “மன்னிக்கவும்” என்று நான் சொல்லவந்த ஒற்றை வார்த்தை, அப்படியே, என் நாக்கிலேயே நின்று போனது. அவள்தான் பேசினாள். “நீங்கள்தானே, இந்த பண்டுன் கவிதைக்கு, சற்றுமுன் இசை வாசித்தது?” அவள் குரலும் இசைபாடியது. சற்றே காமத்தில் தடுமாறியிருந்த எனது குரலை, நான் [Read More]
குழந்தைகளும் மீன்களும்
கு. அழகர்சாமி (1) கண்ணாடித் தொட்டிக்குள் நீரில் கலர் கலராய் நீந்தும் மீன்கள் கண்டதும் கல கலவென்று குதித்துத் துள்ளும் நிலம் துள்ள– குட்டிக் குட்டி மீன்கள்- குழந்தைகள்! (2) தூண்டிலில் பிடிபட்ட மீன் துள்ளி விழும் தரையில். துடி துடிக்கும்; துவளும். மெல்ல அடங்கும். மெதுவாய்க் குழந்தை தொடும்- மூடிய விழிகள் திறந்து- தரை மீது கடைசியாய்த் துள்ளி மலங்க நோக்கும் குழந்தையின் [Read More]
சிலந்தி வலை
’என் வீடு’. ’உன் வீடு போல் என் வீடு இது. ’என் வீடு கல் வீடு’ ‘என் வீடு நூல் வீடு, அதனாலென்ன?’ என் வீடு ‘பெரிய’ வீடு என் வீடு ஓலை வீடாய்க் கூட இல்லாத ஏழை வீடு தான், என்ன செய்ய? ‘வெளியே போ’ ஏன்? உன் வீடு பக்கத்தில் இருப்பது அழகாக இல்லை. உன் வீட்டைக் காட்டி பயமுறுத்துவது நன்றாக இல்லை. ‘நான் உழைத்துக் கட்டிய வீடு இது ’. ‘நான் உழைத்தும் [Read More]
என் பெயர் அழகர்சாமி
அறுபதாண்டுகள் பழகிய பின் என் பெயர் ’அழகர்சாமி’ என்னை இறுக்குவது போலிருக்கும்.. எப்படி பிறர் இந்தப் பெயரைக் கூப்பிட்ட போதெல்லாம் ஒத்துழைத்துத் திரும்பியிருக்கிறேன். எத்தனையோ லெளகீக விஷயங்களுக்கு இந்தப் பெயர் உதவிக்கு வந்திருக்கிறது. அப்பா வைத்த பெயரென்று அப்பாவின் மேல் என் மரியாதைக்கு சாட்சியாக இருந்திருக்கிறது. (ஏன் அம்மா வைத்த பெயரில்லையென்று கேட்க வேண்டாம்) [Read More]
கடந்து செல்லும் பெண்
நீ மெதுவாய் நடந்து வர நேரமும் பொழுதும் இருக்கிறது. அதற்குள் ஒன்றும் நடந்து விட முடியாதென்று உறுதியாயிருக்கிறாய். நீ தனியாக நடந்து வருகிறாய் என்பதால் பொறுப்பாக இருக்க வேண்டியதை உணர்த்துகிறாய். உன் வனப்பில் இருக்கும் கண்டிப்பில் யாரும் உன்னை பலவந்தப்படுத்தி விட முடியாது. யார் மேலான அவநம்பிக்கையிலும் அதைரியத்திலும் உன் நம்பிக்கையையும் தைரியத்தையும் [Read More]